பெண்களுக்கென்றே பெண் ஓட்டுனர் கொண்ட கால் டாக்ஸி

By Keerthi
|

சில மாதங்களுக்கு முன் குர்கானில் கால்சென்டரில் இரவுப் பணி புரிந்துவிட்டு, வீட்டுக்கு கால் டாக்ஸியில் சென்ற பெண் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாகச் செய்தி வந்தது.

வேறொரு சம்பவத்தில், தில்லியில் கேளிக்கை அரங்கிலிருந்து புறப்பட்ட பெண்கள், கால் டாக்சி ஓட்டுநர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தில்லிவாசிகளை கவலையடையச் செய்துள்ளது.

பெண்கள் தனியாக வாகனங்களில் செல்லும்போது, ஓட்டுநர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையில் கால்சென்டர்களில் பெண்களை இரவில் வெகுநேரம் தங்கி பணி செய்யும்படி கூறுவதை அந்த நிறுவனங்கள் தவிர்ப்பதும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸாரின் தீவிர நடவடிக்கை ஆகியவையும்தான் தற்போதைய முதன்மையான தேவை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பெண்களே நடத்தும் கால் டாக்ஸி நிறுவனத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார் நயன்தாரா ஜனார்த்தன் துவிவேதி.

Click Here For New Concept Smartphones Gallery

பெண்களுக்கென்றே பெண் ஓட்டுனர் கொண்ட கால் டாக்ஸி

Click Here For New Smartphones Gallery

இவர் நடத்தும் ஸஹா கன்சல்டிங் விங்ஸ்(9278708888) என்ற நிறுவனம் தில்லியின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

ஸஹாவில் பணியாற்றும் பெரும்பாலான பெண் டிரைவர்கள் சமூக மற்றும் பொருளாதாரத்தின் அடித்தட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு, ஓட்டுநர் பயிற்சியை மாருதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டிரைவிங் அளித்து வருகிறது.

மற்ற அடிப்படை பயிற்சிகளான தில்லி சாலைகளை அறிந்து கொள்ளும் மேப் ரீடிங் பயிற்சி, தகவல் பரிமாற்றப் பயிற்சி, பெண் உரிமை தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட பயிற்சிகள் ஆசாத் ஃபவுண்டேஷனில் அளிக்கப்படுகிறது.

மொத்த பயிற்சிக் காலம் ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எங்களுடைய பெண் டிரைவர்களுக்கு கராத்தே பயிற்சியை தில்லி போலீஸ் அளிக்கிறது.

பணிபுரியும் பெண்களுக்கும், தனியாக வசிக்கும் பெண்களுக்கும் டாக்ஸி சர்வீஸ் அளிக்கப்படுகிறது.நம்பிக்கையான ஓட்டுநர்கள் வேண்டும் என்று கேட்கும் முதியவர்களுக்கும், சுற்றுலா வரும் பெண்களுக்கும் சேவை அளித்து வருகிறார்கள்

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தொண்டு நிறுவனங்கள் முதல் கார்பரேட் நிறுவனங்கள் வரையிலான பிரிவினருக்கும் சேவை அளித்து வருகிறோம்.

அமீர்கான் நடத்தும் "சத்யமேவ ஜயதே' நிகழ்ச்சியில் இவர்களது நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் டிரைவர் சன்னு பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இரண்டு முறை தில்லி வந்தபோது, அமீர்கான் இவர்களது ஸஹா நிறுவன காரைப் பயன்படுத்தினார். எங்கள் சேவையை பாரட்டினார்.

மேலும் இவர்கள் சிறிய ரக கார்களுக்கு, எட்டு மணி நேரத்துக்கு 80 கி.மீ. வரை அடிப்படை கட்டணம் நிர்ணியத்திருக்கிறோம். ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்துக்கும் மேலும் ரூ. 50 கூடுதல் கட்டணமாகும்.

தவிர, ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 8.50 வசூலிக்கப்படுகிறது. பெரிய அளவு கார்களுக்கு எட்டு மணி நேரத்துக்கு 80 கி.மீ. வரை ரூ. 1,280 அடிப்படை கட்டணம். கூடுதலாகும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ. 50 கட்டணம் கூடுதலாகும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 11.50 வசூலிக்கிறோம்.

விமான நிலையம், தில்லியின் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு செல்வதற்கு தனிக் கட்டணங்கள் வசூலிக்கிறோம். கார்களின் அளவுக்கு ஏற்பவும் கட்டணங்கள் நிர்ணயித்திருக்கிறோம்

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பயன்படுத்தும் கார்களுக்கு 25 சதவீதம் கூடுதல் கட்டணம். வாடகையில் 4.94 சதவீதம் சேவை வரி வசூலிக்கப்படும். பார்க்கிங், சுங்கச் சாவடி கட்டணம், சுற்றுலா நுழைவு உள்ளிட்ட கட்டணங்களையும் பயணம் செய்பவர் அளிக்க வேண்டும்.

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X