ஹனி-ட்ராப் செய்யும் வஜ்ரா ஸ்பை.. மெசேஜ், போட்டோனு ஒன்னு விடாது.. இந்த ஆப்பை உடனே டெலிட் செய்ங்க! இல்லனா?
இந்த 12 ஆப்களில் ஏதேனும் ஒன்று உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தாலும் கூட, அதை உடனே டெலிட் அல்லது அன்இன்ஸ்டால் செய்யுமாறு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த 12 ஆப்களின் பெயர்கள் என்ன? அவைகளை ஏன் டெலிட் செய்ய வேண்டும்? இதோ விவரங்கள்:
வெளித்தோற்றத்தில் சாதாரணமாக காட்சியளிக்கும் 12 ஆப்களில் வஜ்ரா ஸ்பை (Vajra Spy) என்கிற ரிமோட் அக்சஸ் ட்ரோஜன் (Remote Access Trojan) கோட் கண்டறியப்பட்டுள்ளது. ராட் (RAT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ட்ரோஜன் கோட் ஆனது எந்தெந்த ஆப்களில் கண்டறியப்பட்டுள்ளது என்கிற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வஜ்ரா ஸ்பை ஆனது உளவு பார்க்கும் செயல்பாடுகளில் (Espionage functionalities) ஈடுபடும் திறன் கொண்டது மற்றும் இது எந்த ஆப்பில் உள்ளதே, அந்த ஆப்பிற்கு வழங்கப்பட்ட பெர்மிஷன்களுக்கு (App Permissions) ஏற்றபடி, அதன் உளவு பார்க்கும் வேலைகளை விரிவுபடுத்தும்.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மொபைல் நம்பர்கள், உங்களுக்கு யாரெல்லாம் கால் செய்தார்கள் என்கிற விவரங்கள், உங்களுக்கு வந்த மெசேஜ்கள், நீங்கள் அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஃபைல்கள் போன்றவைகளை உளவு பார்க்கும்; அதிலுள்ள தகவல்களை திருடும்.

இன்னும் திகிலான விஷயம் என்னவென்றால்.. வஜ்ரா ஸ்பை-ஐ கொண்டுள்ள சில ஆப்களால், சில வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் மெசேஜ்களை பிரித்தெடுக்க முடியும்; உங்களுக்கு வரும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யவும் முடியும்; கடைசியாக அவைகளால் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராக்களை பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்கவும் முடியும்.
இணைய பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற மென்பொருள் நிறுவனமான இஎஸ்இடி-யின் (ESET) அறிக்கையின்படி, வஜ்ரா ஸ்பை உடனான ஆப்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஹனி-ட்ராப் பாணியிலான மோசடிகளை சந்தித்து உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். காதல் அல்லது பாலியல் தொடர்பான ஆர்வம் கொண்டவர்களை இலக்காக கொண்ட இந்த ட்ரோஜன் ஆப்கள், ஒருமுறை இன்ஸ்டால் செய்ததும் வேலையை காட்ட ஆரம்பித்து விடும்.

இப்படியாக மிகவும் ஆபத்தான வேலைகளை செய்யும், வஜ்ரா ஸ்பை உடனான 12 ஆப்கள் ஆனது, கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக இன்ஸ்டால் / டவுன்லோட் செய்ய கிடைத்துள்ளது என்பதால்.. அவைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வந்தாலும், அதை உடனே உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நீக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
பாதிக்கப்பட்ட ஆப்களின் பட்டியல்: ஹெலோ சாட் (Hello Chat), சிட் சாட் (Chit Chat), மீட் மீ (Meet Me), நிடஸ் (Nidus), ரஃபாகத் நியூஸ் (Rafaqat News), டிக் டால்க் (Tik Talk), வேவ் சாட் (Wave Chat), ப்ரைவ் டால்க் (Prive Talk) க்ளோக்ளோ (GlowGlow), லெட்ஸ் சாட் (Lets Chat), நியோநியோ (NioNio), குவிக் சாட் (Quick Chat), யோஹா டால்க் (Yoho Talk).
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சில ஆப்களில் வஜ்ரா ஸ்பை கண்டறியப்பட்ட கையோடு, மூன்றாம் தரப்பு தளங்களிலுள்ள சில ஆப்களில் ஸமாலிசியஸ் (Xamalicious) கண்டறிப்பட்டுள்ளது. ஒருவேளை தேர்ட் பார்ட்டி தளங்களின் வழியாக ஆப்களை பதிவிறக்கம் செய்யும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், கீழ்வரும் ஆப்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தினால்.. அதை உடனே டெலிட் செய்யவும்:
எசென்ஷியல் ஹாரோஸ்கோப் ஃபார் ஆண்ட்ராய்டு (Essential Horoscope for Android), 3டி ஸ்கின் எடிட்டர் ஃபார் பிஇ மைன்கிராப்ட் (3D Skin Editor for PE Minecraft), லோகோ மேக்கர் ப்ரோ (Logo Maker Pro), ஆட்டோ கிளிக் ரீபீட்டர் (Auto Click Repeater), கவுண்ட் ஈஸி கலோரி கால்குலேட்டர் (Count Easy Calorie Calculator).
மேலும் சவுண்ட் வால்யூம் எக்ஸ்டென்டர் (Sound Volume Extender), லெட்டர் லிங்க் (LetterLink), நியூமராலஜி பெர்சனல் ஹாரோஸ்கோப் மற்றும் நம்பர் ப்ரெடிக்ஷன்ஸ் (Numerology: Personal Horoscope & Number Predictions), ஸ்டேப் கீப்பர் ஈஸி பீடோமீட்டர் (Step Keeper: Easy Pedometer).
கூடவே டிராக் யுவர் ஸ்லீப் (Track Your Sleep), சவுண்ட் வால்யூம் பூஸ்டர் (Sound Volume Booster), ஆஸ்ட்ராலாஜிக்கல் நேவிகேட்டர் டெய்லி ஹாரோஸ்கோப் மற்றும் டரோட் (Astrological Navigator: Daily Horoscope & Tarot) மற்றும் யுனிவர்சல் கால்குலேட்டர் (Universal Calculator).


Click it and Unblock the Notifications








