Home
News

கூகுள் எச்சரிக்கை: இந்த மூன்று செயலிகளை உடேன டெலிட் செய்யவும்.!

கூகுள் பிளே ஸ்டோரில் அதிகமான செயலிகள் (apps) இருந்தாலும், அவற்றை கவனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். குறிப்பாக சில செலயிகளின் பாதுகாப்பு அம்சங்களை பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த விபரங்கள் போன்றவற்றிக்கு பாதுகாப்பு இருக்காது.

பிரபலமான மூன்று செயலிகள்

பிரபலமான மூன்று செயலிகள்

இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் பிரபலமான மூன்று செயலிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஸ்டைல் மெசேஜ் (Style Message),பிளட் பிரஷர் ஆப் (Blood Pressure App), கேமரா பிடிஎப் ஸ்கேனர் (Camera PDF Scanner) இந்த மூன்று செயலிகள் தான் தற்போதுப பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

 செயலிகளும் வங்கி சார்ந்த தகல்களை

இந்த 3 செயலிகளும் வங்கி சார்ந்த தகல்களை திருடும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மூன்று செயலிகள் ஜோக்கர் என்ற மால்வேரை உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் அனுமதிக்கிறதாம். ஜோக்கர் மால்வேர் என்பது வாடிக்கையாளர்களின் நிதி சார்ந்த தகவல்களை திருடக்கூடியது. அதேபோல் இந்த செயலிகள் ஆண்ட்ராய்டு பயனர்களிடம் ஒப்புதலின்றி விலையுயர்ந்த சந்தா சேவைகளுக்குப் பதிவு செய்து, அவர்களிடமிருந்துபணத்தைத் திருடுகின்றன எனவும் தகவல் வெளிவந்துள்ளது.

சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தான்

Kaspersky சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தான் இந்த மூன்று செயலிகளில் பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்தது. இதை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து கேமரா பிடிஎப் ஸ்கேனர், பிளட் பிரஷர் ஆப், ஸ்டைல் மெசேஜ் செயலிகள் நீக்கம் செய்யப்பட்டன. ஒருவேளை நீங்கள் இந்த செயலிகளை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும். அதேபோல் ட்ரெண்ட் மைக்ரோ சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கடந்த வாரம் 7 ஆபத்தான ஆப்ஸ்களை கண்டறிந்தது.

ட்ரெண்ட் மைக்ரோ சைபர் செக்யூரிட்டி நிறுவனம்

ட்ரெண்ட் மைக்ரோ சைபர் செக்யூரிட்டி நிறுவனம்

குறிப்பாக இந்த 7 ஆப்ஸ்கள் Facebook கடவுச்சொல் மற்றும் கிரிப்டோ தரவையும் திருடுவதாக ட்ரெண்ட் மைக்ரோ சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அறிக்கை வெளிப்படுத்துகிறது. எனவே இந்த 7 ஆப் வசதிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யும்படி ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய அந்த 7 ஆப்ஸ்கள் இதோ.

டெய்லி ஃபிட்னெஸ் OL ஆப் (Daily Fitness OL)

டெய்லி ஃபிட்னெஸ் OL ஆப் (Daily Fitness OL)

பெயர் குறிப்பிடுவது போல, இது யுடிலிட்டிஸ் & டூல்ஸ் பிரிவில் வரும் ஃபிட்னஸ் ஆப்ஸ். அதாவது பிட்னெஸ் ஆப்ஸ்கள் தற்போது மிகவும் பிரபலம். ஆனால் இந்த டெய்லி ஃபிட்னெஸ் OL ஆப் வசதியானது பயனர்களின் டேட்டாவை திருடுவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பனோரமா கேமரா (Panorama Camera)

பனோரமா கேமரா (Panorama Camera)

உங்கள் ஃபோனின் கேமரா மூலம் பனோரமா படங்களை எடுப்பதற்கான ஆப்ஸ் தான் இது. இந்த ஆப் வசதியும் பயனர்களின் தரவுகளை திருடுவதாகதெரியவந்துள்ளது. எனவே பயனர்கள் இந்த ஆப் வசதியை பயன்படுத்தி வந்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கும்படி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிசினஸ் மெட்டா மேனேஜர் (Business Meta Manager)

பிசினஸ் மெட்டா மேனேஜர் (Business Meta Manager)

அதாவது பேஸ்புக் தளத்தில் சேவை வழங்கும் தோற்றத்தில் உள்ளது பிசினஸ் மெட்டா மேனேஜர் ஆப். குறிப்பாக இந்த ஆப் வசதியும் மால்வேர்களைக் கொண்டுள்ளது.இதை பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்

ஸ்வார்ம் போட்டோ (Swarm Photo)

ஸ்வார்ம் போட்டோ (Swarm Photo)

போட்டோ ஷேரிங் மற்றும் எடிட்டிங் போன்றவைகளுக்குப் பயன்படும் இந்த ஸ்வார்ம் போட்டோ ஆப் ஆனது உங்களின் தனியுரிமைத் தகவல்களை திருடும்.எனவே இந்த ஆப் வசதியை நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

என்ஜாய் போட்டோ எடிட்டர் (Enjoy Photo Editor)

என்ஜாய் போட்டோ எடிட்டர் (Enjoy Photo Editor)

பெயர் குறிப்பிடுவது போல, இது புகைப்படம் எடிட் செய்ய பயன்படும் ஒரு ஆப் வசதியாகும். மேலும் ட்ரெண்ட் மைக்ரோ அறிக்கை ஆனது இந்த ஆப் வசதியில் சிலபிழைகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

 கிரிப்டோமைனிங் ஃபார்ம் யுவர் ஓன் காயின் (Cryptomining Farm Your own Coin)

கிரிப்டோமைனிங் ஃபார்ம் யுவர் ஓன் காயின் (Cryptomining Farm Your own Coin)

உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி மைனிங் வாயிலாகவும் நிறைய ஹேக்கர்கள் பயனர்களின் தரவுகளை திருடுகின்றனர். மேலும் இந்த கிரிப்டோமைனிங் ஃபார்ம்யுவர் ஓன் காயின் ஆப் வசதி மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. எனவே இதை நீங்கள் பயன்படுத்தி வந்தால் உடனே டெலிட் செய்யவும்.

போட்டோ கேமிங் பசில் (Photo Gaming Puzzle)

போட்டோ கேமிங் பசில் (Photo Gaming Puzzle)

கேமிங் தளமாக இருக்கும் இந்த போட்டோ கேமிங் பசில் ஆப்-இல் பிழை இருப்பது தெரியவந்துள்ளது. ஒருவேளை நீங்கள் இந்த ஆப் வசதியை இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

Best Mobiles in India

English summary
Delete these three apps containing Joker malware: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X