Home
News

சர்ர்னு காலியாகும் மொபைல் டேட்டா, பேட்டரி.. ஆபத்தான 22 ஆப்கள்.. உடனே டெலிட் செய்யவும்.. Google வார்னிங்!

"எல்லாமே நல்லாத்தான் இருக்கு.. இருந்தாலும் மொபைல் டேட்டாவும், பேட்டரியும்.. எங்க போகுது? எப்படிபோகுதுன்னே தெரியல.. டக்குனு காலி ஆகிடுது?" என்று புலம்பும் ஆயிரக்கணக்கான ஸ்மார்ட்போன் பயனர்களில் நீங்களும் ஒருவரென்றால்.. கூகுள் (Google) நிறுவனத்தின் இந்த சமீபத்திய எச்சரிகை உங்களுக்கானதாக கூட இருக்கலாம்!

கூகுள் நிறுவனமானது, மொபைல் போன்களுக்கு தீங்கிழைக்கும் திறன்களை கொண்ட 22 ஆண்ட்ராய்டு ஆப்களை (22 Android Apps) தனது பிளே ஸ்டோரில் (Play Store) இருந்து நீக்கியுள்ளது. மெக்காஃபி (McAfee) பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, புகாரளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த 22 ஆப்களும் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

உடனே டெலிட் செய்யவும்.. ஆபத்தான 22 ஆப்கள்.. Google வார்னிங்!

இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த 22 ஆப்களும் மொத்தம் 2.5 மில்லியன் டவுன்லோட்ஸ்களை (2.5 Million Downloads) பெற்றுள்ளது. அதாவது தீங்கிழைக்கும் திறன் கொண்ட இந்த 22 ஆப்களும் லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, நாள்தோறும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

இந்த 22 ஆப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட அதை உடனே டெலிட் அல்லது அன்இன்ஸ்டால் (Delete OR Uninstall) செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த ஆப்கள், பயன்படுத்தப்படாத நிலையிலும் கூட விளம்பரங்களை இயக்கும் திறனை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் உங்கள் மொபைல் டேட்டா விரைவாக தீர்ந்துபோவது மட்டுமின்றி, உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்பும் கூட குறையும். இந்த ஆபத்தான 22 ஆப்களானது, உங்கள் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவானது அன்லாக் செய்யப்பட்டு இருந்தாலும் கூட மொபைல் டேட்டாவை பயன்படுத்துவதை நிறுத்தாது என்றும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னரே குறிப்பிட்டபடி 22 ஆப்களும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டுவிட்டன. இருப்பினும் இந்த ஆப்களை தத்தம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்துள்ள பயனர்கள் இவைகளை கைறையாகவே நீக்க வேண்டும். உங்கள் போனில் இருந்து உடனடியாக நீக்க வேண்டிய 22 ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்களின் பட்டியல் இதோ:

(1) பரோ டிவி (Baro TV): இதுவொரு லைவ் டிவி ஆப் ஆகும். (2) டிஎம்பி ஆப் (DMB App): இதுவொரு டிஜிட்டல் டிஸ்ட்ரிபியூட்டர் ஆப் ஆகும். (3) ஜிஹோசாஃப்ட் மொபைல் ரெக்கவரி ஆப் (Jihosoft Mobile Recovery App): இது ஆண்ட்ராய்டு போன்களுக்கான இலவச மற்றும் பாதுகாப்பான மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் ஆப் ஆகும்.

(4) மியூசிக் படா (Music Bada): இதுவொரு மியூசிக் டவுன்லோடர் ஆப் ஆகும் (5) மியூசிக் டவுன்லோடர் (Music Downloader): இது இலவசமாக இசையை பதிவிறக்க உதவும் ஒரு ஆப் ஆகும். (6) பரோ: இதுவொரு டிஜிட்டல் கிஃப்டிங் ஆப் ஆகும். (7) பரோ டிவி (Baro TV): இதுவொரு கொரியன் லைவ் டிவி ஆப் ஆகும்.

(8) நியூலைவ் (NewLive): இதுவொரு ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் கேம் ஆப் ஆகும் (9) பரோ: இதுவொரு காற்றழுத்தமானி மற்றும் டிஜிட்டல் அல்டிமீட்டர் ஆப் ஆகும்; இது அழுத்தம் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும். (10) ரிங்டோன்ஸ் ப்ரீ ம்யூசிக் (Ringtones Free Music): இது இலவச இசை ரிங்டோன்களை பதிவிறக்க அனுமதிக்கும் ஒரு ஆப் ஆகும்.

(11) ஆல்பிளேயர் (ALLPlayer): இதுவொரு மல்டிமீடியா கன்டென்ட் பிளேயர் ஆப் ஆகும். (12) கம்ஆன்ஏர் (Com'ONAIR): இதுவொரு வீடியோ ஸ்விட்சிங் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் ஆப் ஆகும். (13) வாட்ச் ரியல்டைம் டிவி டிஎம்பி (Watch realtime TV DMB): இதுவொரு லைவ் டிவி ஆப் ஆகும்.

(14) ஸ்ட்ரீம்கார் லைவ் ஸ்ட்ரீமிங் (StreamKar Live Streaming): இதுவொரு சோஷியல் ஸ்ட்ரீமிங் ஆப் ஆகும். இது பயனர்களை நண்பர்களுடன் ஹேங்அவுட் செய்ய அல்லது புதிய நபர்களுடன் இணைக்க உதவுகிறது (15) லைவ்பிளே (Liveplay): இது வீடியோக்களை பார்க்கவும், லைவ் ஸ்ட்ரீம் கன்டென்ட்டை அணுகவும் மற்றும் நண்பர்களுடன் இணையவும் அனுமதிக்கும் ஒரு ஆப் ஆகும்.

(16) ஆன்ஏர் ஏர்லைன் மேனேஜர் (OnAir Airline Manager): இது ஏர்லைன் கம்பெனிகளை நிர்வகிக்க அனுமதிக்கிறது. பயனர்கள் தங்களுக்கான அக்கவுண்ட்டை உருவாக்கி, இந்த ஆப் வழங்கும் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தலாம். (17) எம்மியூசிக் (MMusic): இது மங்கோலிய இசையை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் ஒரு ஆப் ஆகும்.

(18) பப்ஜி மொபைல் கேஆர் (PUBG Mobile KR): இது பிரபலமான பப்ஜி கேமின் கொரியன் எடிஷன் ஆகும். (19) மியூசிக் ப்ளேயர் - ஆடியோ ப்ளேயர் (Music Player - Audio Player): மியூசிக் ஃபைல்கள் மற்றும் வீடியோக்களை எளிதாக தேட அனுமதிக்கும் ஒரு ஆப் ஆகும். (20) ஏடி பிளேயர் (AT Player): இது பிரத்யேக ரேடியோ ஆதரவுடன் வரும் ஒரு மியூசிக் பிளேயர் ஆப் ஆகும்.

(21) டிராட் மியூசிக் பாக்ஸ்-ஃப்ரீ டிராட் மியூசிக் ப்ளேயர் (Trot Music Box-Free Trot Music Player): இதுவொரு மியூசிக் பிளேயர் அப் ஆகும், பாடகரை தேடுவதன் மூலம் நீங்கள் விரும்பும் இசையை கேட்கலாம். (22) கம்போஸ் மியூசிக் வித் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (Compose music with instruments): இது விர்ச்சுவல் பியானோவை பயன்படுத்தி இசையமைக்க அனுமதிக்கும் ஆப் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Delete These 22 Android Apps From Your Phone Right Now Which Leads Battery Drain Mobile Data Loss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X