Home
News

இதுக்கே பயந்தா எப்படி.. பின் வாங்கிய சீனாவின் DeepSeek AI.. வண்டிய வூட்டுக்கு உட்றா.. என்ன ஆச்சு?

சாட்ஜிபிடி - நீ அங்குட்டு போ.. கூகுள் ஜெமினி - நீ இங்கிட்டு போ.. மெட்டா ஏஐ - நீ எங்கயாச்சும் போ.. இனிமேல் டீப்சீக் தான் எல்லாமே என்று எல்லோரும் எண்ணிய சில தினங்களில்.. சீனாவை சேர்ந்தே ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் டீப்சீக் ஆப் (DeepSeek App) ஆனது "சொந்த இடத்திற்கே" பின் வாங்கியுள்ளது!

டீப்சீக்கின் ஆன்லைன் சேவைகளில் பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் நடக்கலாம் என்கிற அச்சம் காரணமாக டீப்சீக் சாட்பாட்டுக்கான புதிய பயனர் பதிவுககள் (New user sign-ups) மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை அடிப்படையாக கொண்ட தொலைபேசி எண்களுக்கு மட்டுமே டீப்சீக் சாட்பாட்டுக்கான புதிய பயனர் பதிவு திறக்கும்படி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதுக்கே பயந்தா எப்படி.. பின் வாங்கிய சீனாவின் DeepSeek AI!

பரவலான செயலிழப்புகள் மற்றும் அதன் பிளாக்ஷிப் ஏஐ மாடலான டீப்சீக்-ஆர்1 மாடலுக்கான தேவை அதிகரிப்புக்கு மத்தியில் டீப்சீக் நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இது உலகளவில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியுள்ளது. டீப்சீக்கின் சாட்பாட் தான், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச பயன்பாடாக மாறியுள்ளது.

வெளியான சில நாட்களிலேயே ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி-ஐ விஞ்சினாலும் கூட, டீப்சீக் நிறுவனத்தின் சிஸ்டம்கள் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டன, கடந்த திங்களன்று டீப்சீக்கின் ஏபிஐ மற்றும் வெப் சாட் சர்வீஸ் ஆகிய இரண்டுமே "பெரிய செயலிழப்புகளை" எதிர்கொண்டன. ஏபிஐ சிக்கல் ஆனது நள்ளிரவிலேயே குறைந்த செயல்திறனுடன் செயல்பட்ட போது, வெப் சாத் சர்வீஸ் மீண்டுவர பல மணிநேரம் ஆனது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

இதுபோன்ற சிக்கல்களாலும், சைபர் அட்டாக் அச்சத்தினாலும் டீப்சீக் ஆனது தற்காலிகமாக +86 போன் நம்பர்களை கொண்ட பயனர்களால் பதிவு செய்ய பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்கத்தில் டீப்சீக்கின் சேவைகள் மீதான பெரிய அளவிலான தீங்கிழைக்கும் தாக்குதல்கள் காரணமாக, தொடர்ச்சியான சேவையை உறுதி செய்வதற்காக புதிய பதிவுகளை தற்காலிகமாக கட்டுப்படுத்துகிறோம். ஏற்கனவே பதிவு செய்த பயனர்கள் வழக்கம் போல் லாக்-இன் செய்யலாம். உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி! என்று கூறியுள்ளது.

டீப்சீக்கின் இந்த பின்வாங்கல்.. கடந்த பல ஆண்டுகளாக ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial intelligence) தொழில்நுட்பத்தின் ஜாம்பவானாக இருந்துவரும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவை தளமாக கொண்ட நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் டீப்சீக் ஆனது ஓப்பன் ஏஐ (OpenAI), ஆன்த்ரோபிக் (Anthropic), கூகுள் (Google), மெட்டா (Meta) ஆகிய ஏஐ நிறுவனங்களின் ஏஐ மாடல்களை விட சக்தி வாய்ந்ததாக உள்ளது.

அதுமட்டுமின்றி டீப்சீக் ஆனது மிகவும் மலிவான பட்ஜெட்டில் உருவாககி உள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி டீப்சீக்-வி3 மாடலை உருவாக்க $5.6 மில்லியன் செலவாகி உள்ளது. இது ஓப்பன்ஏஐ, கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட்டால் செலவு செய்யப்பட்ட பல மில்லியன்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். ஓப்பன்ஏஐ அதன் ஜிபிடி-4 மாடலை பயிற்றுவிக்க $100 மில்லியன் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆகமொத்தம், அமெரிக்க ஏஐ நிறுவனங்கள் தத்தம் ஏஐ மாடல்களை பயிற்றுவிக்க பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் நேரத்தில், டீப்சீக் ஆனது வரையறுக்கப்பட்ட வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தி இந்த இடத்திற்கு வந்துள்ளது. இதுதான் அமெரிக்க ஏஐ நிறுவனங்களை இன்னும் கடுப்பாகியுள்ளது. அதாவது புதுமைகளை உருவாக்க வெறும் முதலீடுகள் தேவைப்படாது, தொலைநோக்கு பார்வையும் தேவை என்பதை டீப்சீக் முகத்தில் அடித்தது போல் கற்பித்துள்ளது.

டீப்சீக் வி3 ஆனது கோட்டிங், கணித சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் கோட்டிங்கில் உள்ள பிழைகளை கண்டறிவது ஆகிய திறன்களை கொண்டுள்ளது. பெரிய அளவிலான தேவைகளை எதிர்கொண்டு வரும் டீப்சீக் ஆர்1 (DeepSeek R1) என்கிற ரீசனிங் மாடல் ஆனதுகணிதம், கோட்டிங் மற்றும் பொது அறிவு உள்ளிட்ட பல வரையறைகளில் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஓ1 மாடலை விஞ்சும் அளவிலான திறன்களை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
DeepSeek AI Chatbot New User Sign Up Temporarily Limited Due to Cyberattack Widespread Outages
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X