Just In
- 10 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 10 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 10 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 11 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
'மர்ம' பள்ளம்: பாதாளத்துக்கான வாசல் என்று கூறும் கிராம மக்கள்.!
உலகின் சில விஷயங்கள் மட்டும் தொடர்ந்து மர்மமாகவே நீடித்து வருகிறது. உதரணமாக கூற வேண்டும் என்றால், பறக்கும் தட்டுகள், ஏரியா 51 (Area 51), பெர்முடா முக்கோணம் போன்ற சில விஷயங்களை கூறலாம். குறிப்பாக தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பிறகும், இவற்றை சுற்றியுள்ள மர்மங்களை கண்டுபிடிப்பது அரிதான ஒன்றாக இருக்கிறது.

இதேபோன்று ரஷ்யாவில் நடந்துள்ள சம்பவம் ஒன்று அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதாவது ரஷ்யா நாட்டில் உள்ள சைபீரிய எனும் பகுதியில் பெரிய பள்ளதாக்கு ஒன்று உருவாகி உள்ளது. ஆனால் இந்த குழி இப்போது உருவாகவில்லை என்றாலும் இதன் அழம் அதிகரித்துக் கொண்டே செல்வது தான் மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..!

சைபீரியா கிராமத்தில் கடந்த 1980 கால கட்டத்தில் இந்த குழி கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு நாளாக நாளாக இதன் அழம் அதிகரித்துக்
கொண்டே இருக்கிறது. குறிப்பாக அந்த கிராம மக்கள் இதை பாதாளத்துக்கான வாசல் என்றும் நரகத்தின் வாசல் என்றும் இதனை
வர்ணிக்கின்றனர்.
உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

சமீபத்தில் இந்த குழியின் அளவை அளந்து பார்த்த போது, குழியின் ஆழம் சுமார் 282 அடி இருந்ததாக கூறப்படுகிறது. பின்புஇதன் அகலம் மட்டும் சுமார் 1 கிலோ மீட்டர் வரை இருந்துள்ளதாக கூறியுள்ளனர். கடந்த 40 வருடங்களாகஇந்த குழியின் ஆழம் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், தற்போது ராட்சச குழியாகவும் இது மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆண்டுக்கு 20 முதல் 30 மீட்டர் வரை வளர்ந்து வரும் இந்த பள்ளத்தாக்கு, அருகிலுள்ள அனைத்தையும் விழுங்கிக் கொள்ளும் வகையில் மாறி வருகிறது. பின்பு இந்த குழியின் கீழே செல்ல செல்ல, பூமியின் பழைய அடுக்குகள் தெரியப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல் இந்த பள்ளத்தாக்கின் ஆழம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கான காரணம் குறித்தும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது உறைபனி நிலங்கள் உருக தொடங்கியதன் விளைவாக, இது போன்ற பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உலகம் முழுக்க வெப்பநிலைமாற்றம் ஏற்பட்டு வருவதால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
|
இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது ரஷ்யாவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086