டெபிட் கார்டு பயனர்களே உஷார்.. நடைமுறையில் உள்ள 'இந்த' புதிய விதி பற்றி உங்களுக்கு தெரியுமா?

By Gizbot Bureau
|

SBI, HDFC, ICICI என்று நீங்கள் எந்த வங்கியின் டெபிட் கார்டு அட்டையைப் பயன்படுத்தினாலும் சரி, இந்த பதிவு உங்களுக்கானது தான். டெபிட் கார்டு பயனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டண விதியை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். நீங்கள் பயன்படுத்தும் ATM ஆட்டைக்கு எத்தனை இலவச பரிவர்த்தனை மற்றும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது எவ்வளவு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

டெபிட் கார்டு கட்டணம்

டெபிட் கார்டு கட்டணம்

நீங்கள் பயன்படுத்தும் டெபிட் கார்டு வழங்கிய வங்கியின் ATM மையங்களிலிருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ATM மையங்களிலிருந்து நடத்தப்படும் பணபரிவர்த்தனைக்கு மாதத்து 3 முறை இலவச சேவையை மேற்கொள்ள வங்கிகள் அனுமதி அளிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு மாதிரியான செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்பதைக் கவனிக்க தவறாதீர்கள். SBI வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தும்.

GST உடன் சேர்த்து கட்டணம்

GST உடன் சேர்த்து கட்டணம்

முன்பே சொன்னது போல் இந்த கட்டண முறை ஒவ்வொரு வங்கிக்கு ற்றார் போல் மாறுபடுகிறது. டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் ATM பரிவர்த்தனைகளுக்கு GST உடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது இன்னும் தெரியாமல் சிலர் இஷ்டத்துக்கு தோணும் இடங்களில் கண்ணுக்குத் தென்படும் வங்கி ஏடிஎம்-களில் இருந்து பணத்தை எடுக்கின்றனர். இப்படிப் பிற ஏடிஎம்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுக்கும் போது கட்டணம் வசூல் செய்யப்படும்.

நோக்கியாவின் அடுத்த பாகுபலி 'Nokia 3650 5G (2021)' தான்.. எதிர்பார்பில் மக்கள்.!நோக்கியாவின் அடுத்த பாகுபலி 'Nokia 3650 5G (2021)' தான்.. எதிர்பார்பில் மக்கள்.!

HDFC வங்கி

HDFC வங்கி

HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முதல் 5 பணப்பரிவர்த்தனைகளை இலவசமாக வழங்குகிறது. முதல் 5 இலவச பரிவர்த்தனை அனைத்து ATM-களிலும் பொருந்தும். HDFC வங்கி அட்டை கொண்டு HDFC ATM-களில் இருந்து எத்தனை முறை பணம் எடுத்தாலும், அதற்குக் கட்டணம் கிடையாது. ஆனால், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்டுதோறும் டெபிட் அட்டை கட்டணமாக ரு. 150 வசூலிக்கப்படுகிறது.

ICICI வங்கி

ICICI வங்கி

ICICI வங்கியில் உங்களுக்கு டெபிட் கார்டை வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் முதலில் ரூ. 250 கட்டணம் செலுத்தி டெபிட் கார்டை வாங்க வேண்டும். ICICI வங்கி அட்டை கொண்டு ICICI ATM-களில் இருந்து எத்தனை முறை பணம் எடுத்தாலும், அதற்குக் கட்டணம் கிடையாது. ஆனால், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்டுதோறும் டெபிட் அட்டை கட்டணமாக ரு. 199 வசூலிக்கப்படுகிறது.

SBI வங்கி

SBI வங்கி

இந்த பதிவில் மேலே குறிப்பிடப்பட்டிருந்த பொதுவான விதி அப்படியே SBI பயனர்களுக்கு பொருந்தும். அதுபோக, கோல்ட் டெபிட் கார்டு கட்டணமாக ரூ.100 + ஜிஎஸ்டி, ப்ளாட்டினம் டெபிட் கார்டு கட்டணமாக ரூ.306 + ஜிஎஸ்டி, கிளாசிக் டெபிகார்ட் கார்டு கட்டணமாக ரூ.100 + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதேபோல், டெபிட் கார்டு செல்லுபடி கட்டணமாக ஆண்டுதோறும் ரூ. 150 வசூலிக்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Debit Card New Rules for Frequent Users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X