சலுகை விலையில் ஐபோன் 6எஸ், அசத்தும் இந்திய விற்பனையாளர்கள்..!!
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கருவிகளை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில் குறைந்தபட்சம் சில மாதங்களை வரை அந்நிறுவனம் எவ்வித சலுகைகளையும் அறிவிக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆனால் ஆப்பிள் நிறுவனம் சலுகை வழங்காவிட்டாலும் நாங்கள் வழங்குவோம் என்கின்றன இந்திய ஸ்மார்ட்போன் வர்த்தகர்கள். அந்த வகையில் இவர்கள் அறிவித்திருக்கும் சிறப்பு சலுகைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

வோடாஃபோன்
புதிய ஐபோன் 6எஸ் மற்றும் 6எ் ப்ளஸ் கருவிகளை வாங்கும் போது ரூ.8,885 மதிப்பிலான இலவச சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகளின் வேலிடிட்டி ஆறு மாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையின் மூலம் 4000 லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், 1500 லோக்கல் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.

ஏர்டெல்
ஏர்டெல் வர்த்தகர்களிடம் இருந்து புதிய கருவிகளை வாங்கும் போது 60ஜிபி 4ஜி டேட்டா மற்றும் ரூ.15,000 வரை சேமிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம்
பேடிஎம் தளத்தில் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகளை வாங்கும் போது ரூ.6000 வரை கேஷ்பேக் பெற முடியும். இதனால் புதிய ஐபோன் 6எஸ் ரூ.56,000க்கு பெற முடியும்.

இந்தியிடைம்ஸ் ஷாப்பிங்
இந்தியாடைம்ஸ் ஷாப்பிங் தளத்தில் ஐபோன் 6எஸ் கருவியை ரூ.60,692க்கு வாங்க முடியும்.

இன்ஃபிபீம்
இன்ஃபிபீம் தளத்தில் இரு மாடல்களுக்கும் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட்
ஐபோன் 6எஸ் 16ஜிபி கருவியை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.60,480 விற்பனை செய்யப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








