Home
News

அடுத்த மாசம் 14 கடைசி.. Aadhaar-ல் மறக்காம இதை செஞ்சிடுங்க.. ஏன்?

ஆதார் கார்டு நமது வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. குறிப்பாக இது ஒரு அடையாள அட்டை மட்டுமல்ல, அரசு மற்றும் தனியார் சேவைகளைப் பெறவும் இது அவசியம். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் வங்கி, போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு, மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் ஆதார் இந்த அட்டை தேவைப்படுகிறது.

இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI)மூலம் வழங்கப்படுகிறது ஆதார் கார்டு. குறிப்பாக இந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் சரியாக வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதாவது இந்த ஆதார் கார்டில் எதாவது பிழை இருந்தால் நமக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் கூட கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பது நல்லது.

அடுத்த மாசம் 14 கடைசி.. Aadhaar-ல் மறக்காம இதை செஞ்சிடுங்க.. ஏன்?

ஒருவேளை உங்களது ஆதார் அட்டையில் பிழை இருந்தால் அதை வரும் டிசம்பர் 14 (December 14)-ம் தேதிக்குள், நீங்கள் இலவசமாகப் புதுப்பிக்கலாம். ஆனால் இந்த தேதிக்குப் பிறகு, எந்த ஒரு விவரங்களையும் அப்டேட் செய்ய வேண்டும் என்றால் அதற்குக் கட்டணம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.

அதுவும் வரும் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால் செலவின்றி செய்யலாம். ஆனால் டிசம்பர் 14 தேதிக்குப் பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேசமயம் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016-இன் படி தனிநபர்கள் தங்களின் ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தங்களது அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. எனவே மக்கள் ஆதார் கார்டு விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு புதுப்பிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டது போல் அரசாங்க திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. எனவே ஆதார கார்டில் இருக்கும் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை மிகவும் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதாவது சிலருக்குப் பிறந்த தேதியில் மாற்றம் இருக்கலாம், சிலருக்குப் பெயரில் பிழை இருக்கலாம். இதுபோன்ற நபர்களும் இலவசமாக ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். சரி இப்போது ஆதார் அட்டையை அப்டேட் செய்யும் எளிமையான வழிமுறைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்டெப் 1: ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் மை (my aadhaar) என்பதை கிளிக் செய்தவுடன் கீழே தோன்றும் மெனுவில் இருந்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் (அப்டேட் செய்யவும்) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 2: அடுத்து ஆதார் எண் மற்றும் கேப்சாக சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். இந்த OTP உதவியுடன் உள்நுழைய முடியும். அடுத்து உங்கள் ஆதாரில் பெயர், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பாருங்கள்.

ஸ்டெப் 3:இந்த சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன என்பதை கிளிக் செய்யவும். ஒருவேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.இதற்காக நீங்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். இதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த மாசம் 14 கடைசி.. Aadhaar-ல் மறக்காம இதை செஞ்சிடுங்க.. ஏன்?

ஸ்டெப் 4: அடுத்து உங்களது அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள், அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் கண்டிப்பாக 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும்.

ஸ்டெப் 5: குறிப்பாக அடையாள அட்டையும், முகவரி ஆவணமும் JPEG, PNG or PDFஃபார்மட்டில் இருத்தல் வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். மேலும் ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதைக் எளிமையாகக் கண்காணிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Deadline for free renewal of Aadhaar card extended till December 14: After that fee will be charged
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X