நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

|

Nothing நிறுவனம் அதன் முதல் Nothing Phone 1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து உலக மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. நத்திங் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஸ்மார்ட்போன் பெரும்பாலான மக்களைக் கவர்ந்ததற்கு முக்கிய காரணம், இதன் ட்ரான்ஸ்பரென்ட் டிசைன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நத்திங் போன் பற்றித் தெரிந்த உங்களுக்கு Something ஸ்கின் பற்றித் தெரியுமா?

Nothing தெரியுமா அது என்னப்பா புதுசா Something?

Nothing தெரியுமா அது என்னப்பா புதுசா Something?

தெரியாது என்றால் இப்போது தெரிந்துகொள்ளுங்கள். நத்திங் போனின் டிசைன் டிரெண்டை இப்போது இந்த நிறுவனம் கப்ஸா அடித்தது போல் தெரிகிறது. ஆனால், இவர்களின் யுக்தி மிகவும் சாமர்த்தியமானதாக இருக்கிறது. Nothing போனின் டிசைன் தான் இப்போதைய புதிய டிரெண்டு என்பதை உணர்ந்த Dbrand நிறுவனம், புதிதாக சம்திங் என்ற ஸ்மார்ட்போன் ஸ்கின் ஆக்சஸரீஸை வெளியிட்டுள்ளது.

நத்திங் போன் 1 போல உங்க போன் லுக்கை மாற்றிக்கொள்ள ரெடியா?

நத்திங் போன் 1 போல உங்க போன் லுக்கை மாற்றிக்கொள்ள ரெடியா?

உங்களிடம் இப்போது எந்த போன் மாடல் இருந்தாலும் சரி, அதை நீங்கள் சில நொடிகளில் நத்திங் போன் 1 போன்ற டிசைனில் மாற்றிக்கொள்ளலாம் என்று Dbrand நிறுவனம் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லிவிட்டது. Dbrand என்பது மிகவும் பிரபலமான ஒரு பிராண்ட் ஆகும். இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்களுக்கான ஸ்கின்களை தயார் செய்து விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனமாகும்.

1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!

'Something Skin' என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் ஸ்கின்

'Something Skin' என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் ஸ்கின்

இப்போது, இந்த Dbrand நிறுவனம், 'Something Skin' என்ற பெயரில் புதிய ஸ்கின்னை அறிமுகம் செய்துள்ளது. Nothing Phone 1 மாடலை பிடித்து, அதை இப்போது வாங்க முடியாதவர்கள் இனி வருத்தப்படத் தேவையில்லை. காரணம், உங்களுடைய ஸ்மார்ட்போன் மாடல் ஆப்பிள் மாடலாக இருந்தாலும் சரி, சாம்சங் மாடலாக இருந்தாலும் சரி அல்லது கூகிள் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடலாக இருந்தாலும் சரி, அவற்றை இனி நத்திங் போன் லுக்கிற்கு நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

நத்திங் லுக்கிற்கும் சம்திங் லுக்கிற்கும் என்ன வித்தியாசம்?

நத்திங் லுக்கிற்கும் சம்திங் லுக்கிற்கும் என்ன வித்தியாசம்?

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நிச்சயமாக இது நத்திங் ஃபோன் 1 டிசைனின் அசல் 3D ட்ரான்ஸ்பரென்ட் லுக்கை உங்களுக்கு வழங்காது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், நத்திங் போன்ற வெளிப்படையான பின் பேனலின் அதே உணர்வை உங்களுக்கு 2D வடிவத்தில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நத்திங் போனின் அசல் லுக் போன்று இது இல்லை என்றாலும், 90 சதவீதம் இந்த ஸ்கின் உங்கள் போனை நத்திங் ட்ரான்ஸ்பரென்ட் டிஸைனுடன் ஒத்துப்போகச் செய்கிறது.

Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!

உங்க ஸ்மார்ட்போன் இன்னர் லுக்கை காண்பிக்குமா?

உங்க ஸ்மார்ட்போன் இன்னர் லுக்கை காண்பிக்குமா?

இதில் உன்னிப்பாக நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நத்திங் போன் 1 டிவைஸின் டிசைன் எப்படி அந்த போனின் உள் கூறுகளைத் தெளிவாகக் காண்பிக்கிறதோ, அதேபோல, இந்த சம்திங் ஸ்கின் ஆதரிக்கப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மாடலுக்கான உள் கூறுகளை அப்படியே காண்பிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. சம்திங் ஸ்கின் அது கிடைக்கும் ஒவ்வொரு சாதனத்திற்கும் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

Nothing லுக்கில் கூகிள் Pixel 6 Pro மற்றும் ஆப்பிள் iPhone 13 Pro Max

Nothing லுக்கில் கூகிள் Pixel 6 Pro மற்றும் ஆப்பிள் iPhone 13 Pro Max

உதாரணமாக, இப்போது உங்களுடைய ஸ்மார்ட்போன் சாதனம் ஆப்பிள் iPhone 13 Pro Max என்றால், அதற்கான சம்திங் ஸ்கின் உண்மையில் போனின் உட்புறங்களைச் சித்தரிக்கும் டிஸைனுடன் வருகிறது. அதே நேரத்தில் உங்களுடைய ஸ்மார்ட்போன் மாடல் Google Pixel 6 Pro என்றால், கூகிள் பிக்சல் 6 ப்ரோ போனிற்குள் இருக்கும் உண்மையான உட்புறக் கூறுகளின் அமைப்பை இந்த ஸ்கின் அப்படியே பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போனுக்குள்ள இயர்போனா? அம்மாடியோவ்! Nokia -வின் இந்த மாடல் போனில் இவ்வளவு டிவிஸ்ட்-ஆபோனுக்குள்ள இயர்போனா? அம்மாடியோவ்! Nokia -வின் இந்த மாடல் போனில் இவ்வளவு டிவிஸ்ட்-ஆ

சம்திங் ஸ்கினின் விலை என்ன?

சம்திங் ஸ்கினின் விலை என்ன?

Dbrand சம்திங் ஸ்கின் ஒரு சாதாரண ஸ்கின் மாடலாகவும் மற்றும் ஒரு கிரிப் கேஸ் மாடலாகவும் வருகிறது. இந்த இரண்டு மாடல் சம்திங் ஸ்கின்களும் வெவ்வேறு விலை புள்ளியில் இப்போது வாங்குவதற்குக் கிடைக்கிறது. கிரிப் ஸ்கின் மாடலின் விலை USD 24.95 ஆக இருக்கிறது. இந்திய மதிப்பின் படி, இது ரூ. 1,994 விலையில் கிடைக்கிறது. ஷிப்பிங்கிற்கு கூடுதலாக USD 5 வசூலிக்கப்படுகிறது.

எந்தெந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு எல்லாம் இந்த ஸ்கின் கிடைக்கிறது?

எந்தெந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு எல்லாம் இந்த ஸ்கின் கிடைக்கிறது?

இந்த தயாரிப்புக்கான மொத்த விலை USD படி 29.95 டாலராகும். இந்திய மதிப்பின் படி இது சுமார் ரூ. 2391 விலைக்குக் கிடைக்கிறது. அதேபோல், இந்த சம்திங் ஸ்கின்னின் மற்றொரு மாடலான நார்மல் ஸ்கின்-கேஸின் விலை USD 49.90 டாலராகும். இந்திய மதிப்பின் படி இது சுமார் ரூ. 3985 விலையில் வாங்கக் கிடைக்கிறது. ஆரம்பக்கட்டமாக இந்த சம்திங் ஸ்கின் இப்போது, Google Pixel 6 Pro, the Samsung Galaxy S22 Ultra and the Apple iPhone 13 Pro Max மாடல்களுக்கு கிடைக்கிறது. விரைவில் மற்ற மாடல்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Dbrand Releases New Something Skin That Brings Nothing Phone 1 Look To Your Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X