மிக வரைவில் : ரூ.3000க்கு 4ஜி ஸ்மார்ட்போன்.!!

By Meganathan
|

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான டேட்டாவின்ட் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் 4ஜி சேவை கொண்ட ஸ்மார்ட்போன் கருவியை ரூ.3000 பட்ஜெட்டில் வெளியிட இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஒரு ஆண்டு முழுவதும் இலவச இண்டர்நெட் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மிக வரைவில் : ரூ.3000க்கு 4ஜி ஸ்மார்ட்போன்.!!

இந்த தகவலை டேட்டாவின்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுனீத் சிங் துலி தெரிவித்திருக்கின்றார். இந்த கருவியில் ப்ரவுசிங் மட்டும் இலசமாக மேற்கொள்ள முடியும் என்றாலும் பதிவிறக்கம் மற்றும் வீடியோக்களை பார்க்க கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 4ஜி டேட்டா ப்ளான்களை தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிக வரைவில் : ரூ.3000க்கு 4ஜி ஸ்மார்ட்போன்.!!

திட்டமிட்டபடி ரூ.3000க்கு 4ஜி கருவி வெளியாகும் பட்சத்தில் இந்தியாவில் விலை குறைந்த கருவியாக இது இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இண்டர்நெட் வாங்குவது குறித்து தற்சமயம் ரிலையன்ஸ் மற்றும் டெலிநார் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக துலி தெரிவித்திருக்கின்றார். இதனால் டேட்டாவின்ட் நிறுவனத்தின் மற்ற கருவிகளிலும் இண்டர்நெட் சார்ந்த சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் 4ஜி சேவை வேகமாக வளர்ந்து வருகின்றது. இந்திய சந்தையில் 4ஜி சேவையை முதலில் வழங்கிய பெருமையை ஏர்டெல் நிறுவனம் பெற்றிருப்பதோடு தற்சமயம் வோடஃபோன் நிறுவனமும் 4ஜி சேவைகளை வழங்க துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Datawind planning 4G device, priced at Rs. 3,000. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X