ரூ.1,499க்கு ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By Meganathan
|

மலிவு விலை ஸ்மார்ட்போன் கருவிகளை வெளியிடும் டேட்டாவிண்ட் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் கருவியினை ரூ.1,499க்கு வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது ஒரு ஆண்டு இலவச இண்டர்நெட் டேட்டாவும் வழங்கப்படுகின்றது.

ரூ.1,499க்கு ஸ்மார்ட்போன் அறிமுகம்!

'குறைந்த விலை கருவிகளை வழங்குவதன் மூலம் தொழில்நுட்பம் அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதோடு சர்வதேச ரீதியாக அவை தொழில்நுட்ப ஜனநாயகத்தன்மைக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும். இது வளர்ந்து வரும் நாடுகளில் இண்டர்நெட் வசதியை மேலும் மேம்படுத்தும்' என டேட்டாவிண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனித் சிங் துலி தெரிவித்தார்.

டேட்டாவிண்ட் நிறுவனத்தின் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனான பாக்கெட்சர்ஃபர் ஜிஇசட் (PocketSurfer GZ) டச் ஸ்கிரீன், பிரைமரி கேமரா மற்றும் லினக்ஸ் இயங்குதளம் கொண்டிருக்கின்றது. டேட்டாவிண்ட் நிறுவனத்தின் யுபிஸ்லேட் டேப்ளெட் கருவிகளுக்கு உலகளாவிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் கருவிக்கும் இத்தகைய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ.1,499க்கு ஸ்மார்ட்போன் அறிமுகம்!

அந்த வகையில் டேட்டாவிண்ட் நிறுவனத்தின் மலிவு விலை கருவிகளில் பாக்கெட்சர்ஃபர் ஜிஇசட் கருவியும் இணைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் இண்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு 17 சதவீதம் வரை இணைந்திருக்கின்றது. ஆனாலும் உலகளவில் வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா பின்தங்கியே இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
DataWind launched affordable smartphone at Rs. 1499 in India Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X