பொங்கல் சிறப்பு திரைப்படமாக தர்பார்: கேபிள் டிவியில் தர்பார் படம் ஒளிபரப்பு- எங்கே தெரியுமா?

|

ஏர்.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இந்த படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினி காந்தின் நடிப்பு அனைத்து தரப்பினரிடமும் அதிகஸ வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.

திரையில் குவியும் கூட்டம்

திரையில் குவியும் கூட்டம்

இந்த படம் கடந்த 9 ஆம் தேதி வெளியானது, பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம் வெளியான பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படத்தை பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் தங்களது குடும்பத்தாரோடு திரைக்கு சென்று கண்டு ரசித்து வருகின்றனர்.

இணையத்தில் வெளியான தர்பார்

இணையத்தில் வெளியான தர்பார்

லைக்கா நிறுவன தயாரிப்பில் பெரும் பொருட் செலவில் உருவான தர்பார். ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்' படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியானது. இதையடுத்து ‘தர்பார்' படத்தை 1,370 இணையதளங்களில் வெளியிட கோர்ட்டு தடைவிதித்து உத்தரவிட்டது. இதையும் மீறி ‘தர்பார்' திரைக்கு வந்த சில மணி நேரத்திலேயே முழு படமும் இணையதளங்களில் வெளியானது. அதனை பதிவிறக்கம் செய்து பலரும் பார்த்தனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கேபிள் டிவியில் ஒளிபரப்பு

கேபிள் டிவியில் ஒளிபரப்பு

இந்த அதிர்ச்சி படக்குழுவினரிடமும், தமிழ் திரையுலக ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் . தர்பார் திரையிடப்பட்ட சில தினங்களில் கேபிள் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கேபிளில் தர்பார்

மதுரை கேபிளில் தர்பார்

தர்பார் திரைப்படம், மதுரை திருமங்கலம் பகுதியில், உள்ளூர் கேபிளில் பொங்கல் சிறப்பு திரைப்படமாக நள்ளிரவு தர்பார் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்

காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை, லைக்கா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, லைக்கா நிறுவனம் சார்பில், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் தொடர்பாக விசாரணை

புகார் தொடர்பாக விசாரணை

உள்ளூர் கேபிள் டி.வி. அலுவலகம் காளவாசல் பகுதியில் இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, காவல்துறையினர் அந்த அலுவலக உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Darbar movie screened in local cable channel

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X