ஆபத்தை விளைவிக்கும் 'பைரேட்டெட் சாஃப்ட்வேர்' : உஷார்!

By Meganathan
|

இலவசம் என்றும் ஆபத்து தான். அதுவும் கணினி மென்பொருள் சார்ந்தது என்றால் ஆபத்து பலமடங்கு அதிகம் ஆகும். டோரன்ட் போன்ற தளங்களில் இணையம் அல்லது மென்பொருள் சார்ந்த அனைத்துத் தரவுகளும் இலவசமாகக் கிடைக்கின்றது. இவற்றை டவுன்லோடு செய்தால் மென்பொருள் வாங்கும் பணத்தை மிச்சம் செய்யலாம் என்ற நினைத்து, இதற்குப் பின் இருக்கும் ஆபத்தை உணராமல் இருக்கின்றனர்.

அப்படியாகத் திருட்டுத்தனமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருள்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆபத்துக்கள் என்னென்ன என்பதை இங்குப் பாருங்கள்..

அப்டேட்

அப்டேட்

நீங்கள் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தும் மென்பொருள்களுக்கு புதிய அப்டேட்கள் வழங்கப்படும் போது அவற்றை உங்களால் பயன்படுத்தவோ அல்லது டவுன்லோடு செய்யவோ முடியாது. ஒரு வேலை புதிய அப்டேட் கட்டாயம் வேண்டும் என நினைத்தால் அதே மென்பொருளை மீண்டும் டவுன்லோடு செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கணினி

கணினி

திருட்டு மென்பொருள்கள் உங்களது கணினிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இது போன்ற மென்பொருள்கள் உங்களது கணினியில் வைரஸ் / ட்ரோஜன் / மால்வேர் / ஸ்பைவேர் போன்றவற்றை பரப்பக் கூடியது ஆகும். இதனால் உங்களது கணினி பாழாவதோடு உங்களின் அனைத்துத் தரவுகளும் திருடு போகலாம்.

சேவை மையம்

சேவை மையம்

திருட்டு மென்பொருள்களை இன்ஸ்டால் செய்யும் போது அடிப்படை வாடிக்கையாளர் சேவை மைய உதவிகள் உங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இதனால் ஒவ்வொரு சிறிய பிரச்சனைக்கும் உங்களின் உதவிக்கு அதிகாரப்பூர்வ தீர்வு கிடைக்காது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சட்ட விரோதம்

சட்ட விரோதம்

திருட்டு மென்பொருள்களைப் பயன்படுத்தி இதுவரை எவ்வித பிரச்சனையை நீங்களும் உங்களுக்குப் பரிந்துரை செய்த நட்பு வட்டாரங்களுக்கும் நேர்ந்திருக்காது. ஆனால் திருட்டுத்தனமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருள்களைப் பயன்படுத்துவது சட்ட விரோத செயல் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேலைப் பிரச்சனையில் சிக்கும் பட்சத்தில் அதிகளவு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

நேரம்

நேரம்

பொதுவான திருடப்பட்ட மென்பொருள்கள் சரியாக இயங்காமல் போகும். அடிக்கடி தொல்லை செய்வதால் உங்களின் நேரம் மற்றும் அவற்றில் நீங்கள் செலவிடும் நேரம் வீணாகும். இது ஒரு கட்டத்தில் மன உளைச்சலையும் ஏற்படுத்தும். சில சமயங்களில் இது போன்ற மென்பொருள்கள் ஹேக் செய்யப்பட்டு உங்களது தகவல்கள் திருடப்படும் அபாயமும் அதிகம் ஆகும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தவறு

தவறு

உங்களது கடின உழைப்பு மூலம் தயாராகும் பொருளை வேறு யாரும் சொந்தம் கொண்டாடினால் உங்களுக்கு எப்படி இருக்கும். இதே போல் தான் நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளை உருவாக்கியவருக்கும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இலவசம்!

இலவசம்!

இந்த உலகத்தில் எதுவுமே இலவசம் கிடையாது என்பதே உண்மை. இதனால் நீங்கள் பயன்படுத்தும் திருட்டு மென்பொருள் உங்களுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ உங்களுக்குச் செலவு வைக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மேலும் காசு கொடுத்து வாங்கும் மென்பொருளுக்கும், இலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Dangers Of Using Pirated Softwares Downloaded Online Tami

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X