சோனமுத்தா போச்சா? எல்லாரு வேலைக்கும் ஆப்படித்த ரோபோட் புரட்சி!

|

உலகப் பொருளாதார மன்றம் தற்போது ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி 2025ம் ஆண்டிற்குள் 52% வேலை வாய்ப்பு மற்றும் வேலை பணிகள் ரோபோட்களால் உங்களிடம் இருந்து தட்டிப்பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரோபோட்கள்

வேலைவாய்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரோபோட்கள்

அதாவது, சரியாகக் கூறவேண்டுமென்றால் நீங்கள் தற்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுடைய வேலையை, 2025 ஆம் ஆண்டிற்குள் ரோபோட்கள் உங்களிடமிருந்து தட்டிப்பறித்து உங்களுடைய வேலைக்கும், புதிய வேலைவாய்ப்பிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்கிறது இந்த சமீபத்திய ஆய்வின் முடிவு.

உலகப் பொருளாதார மன்ற அறிக்கை

உலகப் பொருளாதார மன்ற அறிக்கை

உலகப் பொருளாதார மன்றம் நடத்திய இந்த ஆய்வு, உலகத்திலுள்ள 20 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் உலகத்தில் உள்ள 12 வெவ்வேறு துறைகளுக்கான முன்னணி நிறுவனங்களின் தொடர்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோஃபைபர்: இலவச டிவி, இலவச டேட்டா, செட் டாப் பாக்ஸ், அடேங்கப்பா இவளோ சலுகையா?ஜியோஃபைபர்: இலவச டிவி, இலவச டேட்டா, செட் டாப் பாக்ஸ், அடேங்கப்பா இவளோ சலுகையா?

அதிர்ச்சி தரும் ஆய்வின் முடிவு

அதிர்ச்சி தரும் ஆய்வின் முடிவு

முதல் முறையாக இந்த ஆய்வு 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டுள்ளது, 2022 ஆம் ஆண்டிற்குள் சுமார் 32% மனிதர்களின் வேலைகளை ரோபோட்க்கள் செய்யத் தொடங்கும் என்கிறது இந்த ஆய்வின் முடிவு. நம்புவதற்குச் சிறிது தயக்கமாக இருந்தாலும் இதுவே உண்மை.

இயந்திரங்களை நம்மிடத்தில் மாற்றுவதர்க்கான காரணம்

இயந்திரங்களை நம்மிடத்தில் மாற்றுவதர்க்கான காரணம்

பல துறைகளில் இப்போதும் மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை, இயந்திரங்கள் கச்சிதமாகச் செய்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் மனிதர்களைக் காட்டிலும், இயந்திரங்கள் வேலைகளை எந்தப் பிழையும் இன்றி குறைந்த நேரத்தில் அதைச் சிறப்பாகக் குறைந்த செலவில் செய்து முடிப்பது தான்.

ஜியோ ஃபைபர் அறிமுகப்படுத்தியதும், திடீரென 1000ஜிபி இலவச டேட்டாவை அறிவித்த ஏர்டெல்.!ஜியோ ஃபைபர் அறிமுகப்படுத்தியதும், திடீரென 1000ஜிபி இலவச டேட்டாவை அறிவித்த ஏர்டெல்.!

59% வரை அதிகரிக்கும் ரோபோட் புரட்சி

59% வரை அதிகரிக்கும் ரோபோட் புரட்சி

ஒவ்வொரு பணிக்கும், இயந்திர நேரத்தின் பங்கு 32% முதல் 59% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இயந்திரங்களின் பங்கு ஆராய்ச்சித் துறை, தகவல் அடையாளம் காணும் முறை, மதிப்பீடு செய்தல், நிர்வாக மேலாண்மை, ஆலோசனை தொடர்பான நடவடிக்கைகள், ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அனைத்து துறைகளிலும் கால் பதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தட்டிப் பறிக்கப்படும் மனித வாழ்க்கை

தட்டிப் பறிக்கப்படும் மனித வாழ்க்கை

உலகப் பொருளாதார மன்றம் நடத்திய ஆய்வின் முடிவு படி, 2022 ஆம் ஆண்டிற்குள் சுமார் 75 மில்லியன் வேலைவாய்ப்புகள் ரோபோட்களால் மனிதர்களிடம் இருந்து தட்டிப் பறிக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தடபுடலாக வாட்ஸ்ஆப் கொண்டுவந்த புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!தடபுடலாக வாட்ஸ்ஆப் கொண்டுவந்த புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!

ஆபத்தை நோக்கி செல்லும் நவீன உலகம்

ஆபத்தை நோக்கி செல்லும் நவீன உலகம்

குறிப்பாக வாடிக்கையாளர் மேலாண்மை மையங்கள், அக்கவுண்டிங், அஞ்சல் சேவைகள், ஆட்டோமேஷன் ஆலைகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய துறைகளில் பெரிய அளவிலான மனிதர்களின் வேலைவாய்ப்பு ரோபோட்களால் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுதலுக்காக இன்னொரு செய்தி

ஆறுதலுக்காக இன்னொரு செய்தி

உலகப் பொருளாதார மன்றம், இந்த ஆய்வின் முடிவை தற்பொழுது வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கூட உலக பொருளாதார மன்றம் இன்னொரு தகவலையும் இத்துடன் ஆறுதலுக்காக வெளியிட்டுள்ளது. ரோபோட்களின் புரட்சி துவங்கினால், சுமார் 58 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் நிச்சயம் மனிதர்களுக்கு உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Danger for everyones Job Risk Created By the robot revolution : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X