அணை கட்டுமான தோல்விகள் : சிக்கலுக்கான காரணங்கள்?

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதை போல, கடந்த காலங்களில் நடைபெற்ற அணை கட்டுமான தோல்விகள், அவை எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் கட்டுமான முறையில் மாற்றம் செய்ய வாய்ப்புகள் வழங்குகின்றன.

|

மனிதகுலத்தின் தொழில்நுட்ப திறமைகளை பறைசாற்றும் பல்வேறு கட்டுமானங்களில் அணைகளும் ஒன்று. எனினும், மற்றவற்றை போல இதிலும் பேரழிவை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த காலங்களில் அணையின் தோல்விகளுக்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. இயற்கை காரணிகளால் அல்லது கட்டுமான பொருட்களின் நிலையில்லா தன்மை காரணமாக, அணையின் கட்டுமானம் அழுத்தத்தை சந்திக்கின்றன.

அணை கட்டுமான தோல்விகள் : சிக்கலுக்கான காரணங்கள்?

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதை போல, கடந்த காலங்களில் நடைபெற்ற அணை கட்டுமான தோல்விகள், அவை எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் கட்டுமான முறையில் மாற்றம் செய்ய வாய்ப்புகள் வழங்குகின்றன. அணையின் செயல்பாடுகள், அணை கட்டுமான தோல்விக்கான பொதுவான காரணங்கள் மற்றும் அது நிகழாமல் தடுப்பது எப்படி என்பதை இங்கே காணலாம்.
அணைகளின் செயல்பாடு

அணைகளின் செயல்பாடு

அணைகளின் தோல்விகளுக்கான காரணங்களை தெரிந்துகொள்ளும் முன்பு, அவற்றிற்கான தேவைகள் மற்றும் அவை எப்படி செயல்படுகின்றன என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது. நதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது தண்ணீர் சேமித்து வைப்பது அணையின் பல்வேறு பயன்பாடுகளில் ஒன்று. அணைகள் மூலம் நீர்மட்டத்தை உயர்த்துவதன் மூலம் கால்வாய்களில் தண்ணீர் அனுப்பலாம் மற்றும் அருகில் உள்ள நீர்நிலைகளின் நீர்மட்டத்துடன் அளவை சமமான அளவில் பராமரிக்கலாம். மேலும் அணைகள் மூலம் மின்சாரமும் தயாரிக்கலாம், விவசாய பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.

கட்டுமான தவறுகள்

கட்டுமான தவறுகள்

அணைகள் கட்ட பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் பூமியில் இருந்து கிடைக்கும் நிலையில், அவற்றில் கான்கிரீட் மற்றும் இரும்பில் உள்ள சக்தி மற்றும் நீடித்து நிலைக்கும் திறன்கள் இல்லை.

மழை மற்றும் வெள்ளம் அதிகமாக உள்ள பகுதிகளில், அணை நிரம்பி வழிந்தோடும் போது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அணைஅரிப்பு ஏற்படும் நிலை உருவாகும்.


மண் அணைகளில் உள் கட்டுமான பணிகளில் அதிக பிரச்சனைகள் ஏற்படும்.மண்அரிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் தண்ணீரில் குழாய்களுக்கான பாதுகாப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். தண்ணீர் வழிந்தோடும் போது களிமண் பரப்பும் கரைந்து, முன்பக்க சுவர்கள் வாயிலாக தண்ணீர் வெளியேறும் வாய்ப்பும் உள்ளது. அதிக தண்ணீர் நுழையும் போது வடிகால் அமைப்பும் சரியாக செயல்பட இயலாது.

நிலபரப்பின் பயன்பாடு

அணைகளின் நிலைப்பு தன்மை என்பது அது உள்ள நிலப்பரப்பு எப்படி மாறுகிறது என்பதை பொறுத்தது. அந்த நிலப்பரப்பு குறைவாக தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது என்றால், அது அணைக்கு பலன்களை வழங்கும். அணைகள் ஆழமான அடித்தளம் கொண்டிருந்தாலும் அதிக மழைப்பொழிவு காரணமாக அடித்தளம் வலுவிழக்கும் அபாயமும் உள்ளது.


இயற்கை
அணைகளுக்கு தொடர் பராமரிப்பு அவசியம் என்றாலும், இயற்கையின் அனைத்து விளையாட்டுகளுக்கும் தயாராக இருக்க முடியாது. மழைப்பொழிவுகள் எந்த அளவுகளிலும் இருக்கலாம், அதன் காரணமாக நீர்வரத்தும் அதிகமாக இருக்கும் என்பதால் அதை கையாள தயாராக இருக்க வேண்டும். அதிக நீர்வரத்து மண்அரிப்பு, குழாய் உடைப்பு, அணைக்கதவு உடைப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இதுதவிர சூறாவளி, இடி, மின்னல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளும் அணை கட்டுமானத்தின் பாதிப்பிற்கு வழிவகுக்கும்.

தீர்வுகள்

தீர்வுகள்

அணை கட்டுமான தோல்வியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஏராளமான உயிர்களை காப்பாற்ற முடியும். அணை தோல்வியை தடுக்கும் மிகமுக்கியமான வழிகளில் ஒன்று அணை கட்டுமான முறை. ஆஸ்திரேலியாவில் உள்ள கோர்டான் அணை, கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் வளைவாக கட்டப்பட்டிருப்பதால் எந்தவொரு அழுத்தத்தையும் தாங்கமுடியும். அமெரிக்காவின் ஹோவர் அணை பல்வேறு திசைமாற்று சுரங்கம் ,கால்வாய்களுக்கு தண்ணீரை திசைதிருப்பும் வல்லமை கொண்டது.


நிலப்பரப்பை பயன்படுத்தும் முறையால் மாற்றங்கள் ஏற்பட்டு தண்ணீர் தொடர்ந்து நிரம்பி வழிந்தால் , அந்த பகுதியில் அதிக மரங்களை நடுவதன் மூலம் தண்ணீரை பயன்படுத்தலாம்.

இதுபோன்ற பல்வேறு வழிகளின் மூலம் அணை கட்டுமான தோல்வியை தவிர்த்து, நிலையான தண்ணீர் விநியோகம் மூலம் எதிர்காலத்தில் மக்களை பாதுகாக்கலாம்.


Best Mobiles in India

English summary
Dam Failures: Common Reasons For Complications: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X