எல்லா புகழும் அஜித்துக்கே.! ஏர்ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகிறது தக்க்ஷா விமானம் .! தல போல வருமா.!

இந்நிலையில் நடிகர் அஜித் தொழில்நுட்ப ஆலோசனையில் உருவாகிய தக்க்ஷா குட்டி விமானம் இனி மருத்துவமனையான உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் ஆக மாற போகின்றது. மேலும் தமிழகம் முழுவத

|

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக ஆளில்லா (டிரோன்) விமான ஒலிம்பிக் போட்டியில் நடிகர் அஜித் குமார் அணிக்கு 2ம் இடம் கிடைத்தது.

மேலும் நடிகர் அஜித் வழிக்காட்டுதல் மற்றும் தொழில் நுட்ப ஆலோசகராகவும் தக்க்ஷா குழுவுக்கு பணியாற்றினார். இதற்காக தினமும் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் 8 மணி நேரம் செலிவிட்டார்.

எல்லா புகழும் அஜித்துக்கே ஏர்ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகிறது தக்க்ஷா

ஆஸ்திரேலியாவில் பறக்கும் திறன் போட்டியில் முதலிடம் கிடைத்த பார்த்த அனைத்து நாடுகளுக்கும் அசந்து போயினர். மேலும் , இதுகுறித்து நடிகர் அஜித்துக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தொழில்நுட்ப ஆலோசனையில் உருவாகிய தக்க்ஷா குட்டி விமானம் இனி மருத்துவமனையான உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் ஆக மாற போகின்றது. மேலும் தமிழகம் முழுவதும் இந்த குட்டி விமானம் வர இருக்கின்றது. எல்லா புகழும் நடிகர் அஜித்துக்கு மட்டுமே.!

நடிகர் அஜித்:

நடிகர் அஜித்:

நடிகர் அஜித் சிறியரக விமானம் (டிரோன்) ஹெலிகாப்பட்டர்கள் வடிமைப்பு மற்றும் பறக்க விடுவதிலும் கில்லாடி. மேலும் விமானம் ஓட்ட லைசென்ஸ்ம் வைத்து இருக்கின்றார். இதையொட்டி நடிகர் அஜித்துக்கு தக்க்ஷா குழுக்கு ஆலோசராகவும் நியமிக்கப்பட்டார். மேலும் இதற்கு சம்பளமாக ஒரு ரூபாய் கூட வாங்காத நடிகர் என்று புகழும் கிட்டியது.

மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி:

மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி:

தக்க்ஷா குழுவிக்கு டெஸ்ட் பைலட்டாகவும் இருந்தார் நடிகர் அஜித். இதற்காக தினமும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மைதானத்தில் மாணவர்களுடன் பயிற்சி மற்றும் வடிவமைப்பு, ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்தார். கடின வேலையாக இருந்தாலும் அதில் முகத்தில் சிரிப்புடன் மாணவர்களுக்கு பொறுமையாக சொல்லி கொடுத்தார் நடிகர் அஜித்.

உலகில் அதிக நேரம் பறக்கும் தக்க்ஷா :

உலகில் அதிக நேரம் பறக்கும் தக்க்ஷா :

நடிகர் அஜித்தின் தக்க்ஷா அணி உலகிலேயே அதிக நேரம் பறக்கும் ஆளில்லா சிறிய விமானம் என்று சாதனை படைத்து இருந்தது. இது 6 மணி நேரம் தொடர்ச்சியாக பறக்கும். பிரவில் அளவில் நடந்த போட்டிகளில் தக்க்ஷா அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்து இருந்தது.

சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு:

சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு:

சர்வதே அளவில் நடத்தப்படும் டிரோன் ஒலிம்பிக் போட்டி உலகளவில் 55 அணிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த தக்க்ஷா மாணவர் குழுவும் ஒன்று.

ஆஸ்திரேலியாக சென்ற தக்க்ஷா அணி:

ஆஸ்திரேலியாக சென்ற தக்க்ஷா அணி:

ஆஸ்ரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் எக்ஸ்பிரஸ்-2018 யுஏவி லேஞ்ச போட்டி நடப்பதையொட்டி அங்கு தக்க்ஷா அணி குழுவினர் அனைவரும் சென்றனர். ஆனால் நடிகர் அஜித் குமாருக்கு படப்பிடிப்பு இருந்ததால் அங்கு செல்ல முடியவில்லை. போட்டிகள் கடந்த செப்டம்பர் 24ம் தேதி (2018) முதல் 28ம் தேதி வரை நடந்தது.

முதலிடம் பிடித்து அசத்திய தக்க்ஷா:

22 கிலோ மீட்டர் பறந்து சென்று ரத்து மாதிரியை எடுத்து வர வேண்டும் என்பது போட்டியின் இலக்கு. இதில் தக்க்ஷா குட்டி விமானம் பறக்கும் திறன் போட்டியில் 91 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. இது ஆஸ்திரேலியாவின் மோனாஸ் யுஏஸ் அணிக்கு தக்க்ஷா கடும் சவால் விட்டது.

இன்டர்வியூவில் சதி:

தக்க்ஷா அணி முதலிடம் பிடித்து இருந்த போதிலும், இடர்வியூவில் நிறவெறி காரணமாக நடிகர் அஜித் அணியான தக்க்ஷாவுக்கு ஒரு புள்ளி விசத்தியாசத்தில் 2ம் இடம் கிடைத்தது. இருந்தாலும் உலக நாடுகளையும் அசர விட்ட தக்க்ஷா குட்டி விமானத்துக்கு உலகளவில் பாராட்டுக்கள் குவிந்தனர். நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தில் இருந்ததால் அங்கு செல்ல முடியவில்லை. செய்தி அறிந்த நடிகர் அஜித் மாணவர்கள் குழுவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அஜித்குமாரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

 120 கி.மீ வேகத்தில் செல்லும்:

120 கி.மீ வேகத்தில் செல்லும்:

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் விதமாக நடிகர் அஜித்தின் ஆலோசனையின் படி வேகமும் அதிகரிக்கப்பட்டு தற்போது நீண்ட தூரம் பறக்கும் வகையில் தக்க்ஷா விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் 15 கிலோ எடையை தூக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

  ஏர் ஆம்புலன்ஸ் சேவை:

ஏர் ஆம்புலன்ஸ் சேவை:

உடல் உறுப்பு மாற்று அறுவை சிக்சைக்கு பயன்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள குட்டி விமானத்தை நடிகர் அஜித்குமார் மற்றும் குழுவினர் 8 மணி நேரம் பரிசோதனை நடத்தினார். உடல் உறுப்புகளை பாதுகாப்பாக எடுத்தும் செல்லும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக:

முதல்கட்டமாக:

உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக வேலூரிலிருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ்களில் கொண்டு வரும் போது, டிராப்பிக்கில் ஆம்புலன்ஸ்கள் சிக்குவதால் உரிய நேரத்தில் உறுப்புகளை மருத்துவமனைனயில் ஒப்படைக்க முடிவதில்லை. இதையொட்டியே த தக்க்ஷா விமானம் ஈடுபடுத்தப்படுகின்றது.

சென்னை-வேலூர்-சென்னை:

முதல் கட்டமாக தக்க்ஷா ஏர் ஆம்புலன்ஸ் சேவையானது சென்னை- வேலூர்- சென்னை என்று உடல் உறுப்புகளை மாற்று அறுவைகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ்களாக சுமந்து செல்லும். ஏர் ஆம்புலன்சை சென்னையில் இருந்தே இயக்க முடியும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசியர் செந்தில்குமார் தெரிவித்தார்.

எல்லா புகழும் அஜித்துக்கே:

இந்த தக்க்ஷா குழுவுக்கு நடிகர் அஜித் குமார் ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும், தொழில்நுட்பவியளாரகவும் கிடைத்துள்ளதால், தான் தற்போது தக்க்ஷா விமானம் உடல் உறுப்புகளை எடுத்து செல்லும் ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற இருக்கின்றது. மேலும், இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டு வந்தால், உலக அளவிலும் இந்தியா தான் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும் விமானம் என்று பெயரும் கிடைத்துவிடும்.

Best Mobiles in India

English summary
Daksha plane comes to air ambulance service Will be like the thala : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X