Home
News

ரூ.11,990-க்கு புதிய பெஸ்ட் ஸ்மார்ட்டிவி: இதோ வந்துருச்சு., டைவா 32இன்ச், 39இன்ச் ஸ்மார்ட்டிவி- அட்டகாச அம்சம்

டைவா இந்தியாவில் பிரைம் வீடியோ மற்றும் க்ளவுட் டிவி உடன் ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்டிவி ரூ.11,990 என்ற விலை முதல் அறிமுகம் செய்துள்ளது. டைவா ஒரு புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. டைவா ஸ்மார்ட் டிவிகளை இரண்டு அளவுகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. டைவா ஸ்மார்ட் டிவிகள் பிரைம் வீடியோ மற்றும் மூவி பாக்ஸ் ஆப்ஸ்-களுடன் வருகின்றன.

பிரைம் வீடியோ மற்றும் க்ளவுட் டிவி

பிரைம் வீடியோ மற்றும் க்ளவுட் டிவி

டைவா இந்தியாவில் பிரைம் வீடியோ மற்றும் க்ளவுட் டிவி உடன் ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்டிவி ரூ.11,990 என்ற விலை முதல் அறிமுகம் செய்துள்ளது. பிரைம் வீடியோ மற்றும் கிளவுட் டிவி கொண்ட 32 இன்ச் மற்றும் 39 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் உட்பட புதிய டிவி வரம்பை டைவா இந்தியாவில் அறமுகப்படுத்தியுள்ளது. டைவா இந்தியாவில் 32 இன்ச் (D32SM9), மற்றும் 39-inch (D40HDR9L) எச்டி ரெடி ஸ்மார்ட் டிவிகளை கிளவுட் டிவி இயக்க ஆதரவோடு இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஸ்மார்ட்டிவிகள் இரண்டு புதிய வகைகளான D32SM9A மற்றும் D40HDR9LA ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. க்ளவுட் டிவி குரல் உதவியோடு இயக்கப்படுகின்றன. டிவிகளில் மூவி பாக்ஸ் ஆப் வசதியோடு 25000+ இலவச திரைப்பட அணுகலோடு வரும் என நிறுவனம் கூறியுள்ளது.

32 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் விலை

32 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் விலை

32 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் விலை ரூ.11,990 மற்றும் ரூ.12,490 ஆகியவை உடன் வருகிறது. அதேபோல் 39 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் ஆனது ரூ.17,990 மற்றும் ரூ.18,490 ஆகியவை உடன் வருகிறது. இரண்டு டிவி லைன்களும் ஒரு வருட உத்திரவாத பேனல்கள் உடன் வருகிறது. இந்த டிவிகளை நிறுவனத்தின் இணையதளம் மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் வாங்கலாம்.

டைவா 32 இன்ச், 39 இன்ச் ஸ்மார்ட்டிவி அம்சங்கள்

டைவா 32 இன்ச், 39 இன்ச் ஸ்மார்ட்டிவி அம்சங்கள்

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், எச்டி ரெடி ஸ்மார்ட் டிவிகள் ஆனது அதன் சொந்த பயனர் நட்பு யுஐ - ‘தி பிக்வால்' உடன் வருகிறது. இந்த டிவி ஆப்ஸ், உலகளாவிய உள்ளடக்கம் மற்றும் பலவற்றை வழங்குகின்றன. 2500000+ மணிநேர உள்ளடக்கம் மற்றும் ஒவ்வொரு பயனருக்கும் ஏற்ற மொழிகளிலும் 25000+ இலவச திரைப்படங்களுடன் கூடிய ‘மூவி பாக்ஸ்' ஆப்ஸையும் உள்ளடக்கிய பிரீமியம் உள்ளடக்கத்தின் அணுகலோடு வருகிறது.

புதிய ஸ்மார்ட் டிவிகள் அணுகல்

புதிய ஸ்மார்ட் டிவிகள் அணுகல்

புதிய ஸ்மார்ட் டிவிகள் ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ், சன் என்எக்ஸ்டி போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுடன் வருகின்றன. மேலும், அனைத்து டைவா ஸ்மார்ட் டிவிகளிலும் அதிகாரப்பூர்வ அமேசான் பிரைம் வீடியோ செயலி இருக்கும், இது ஏராளமான பொழுதுபோக்கு வாய்ப்புகளை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்டிவிகள் நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் மற்றும் பிற சேவைகள் அணுகலை வழங்குகிறது. புதிய நேர்த்தியான ஸ்மார்ட் ரிமோட் பட்டன்களுடன் இது வருகிறது. அதாவது ஸ்மார்ட் டிவிகள் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் மூவி பாக்ஸிற்கான பட்டன்கள் கொண்ட ரிமோட்களை கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ரிமோட்டில் பயனர்கள் தங்கள் குரல் மூலம் டிவியை கட்டுப்படுத்தும் வகையில் ரிமோட் மைக் அணுகலோடு வருகிறது.

 சினிமா பயன்முறை ஆதரவு

சினிமா பயன்முறை ஆதரவு

ஸ்மார்ட்டிவிகள் சினிமா பயன்முறையை ஆதரிக்கின்றன. இது உயர்ந்த வண்ண மேம்பாட்டு வசதியை கொண்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஒவ்வொரு படத்தின் காட்சியையும் மேம்படுத்தலாம். இந்த எச்டி ரெடி டிவிகள் 1366 x768 பிக்சல் தெளிவுத்திறன், ஏ+ கிரேடு பேனல், குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் மற்றும் 16.7 மில்லியன் வண்ணங்களுடன் வருகிறது. இது உயர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை உறுதி செய்கிறது. இந்த ஸ்மார்டிடிவி ஆனது 20 வாட்ஸ் ஸ்டீரியோ சரவுண்ட் ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது. மேலும் இதன் 39 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் சரவுண்ட் சவுண்ட் பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு வசதி

1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்டிவிகளானது 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த டிவிகள் ஆண்ட்ராய்டு 9.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஏ-53 குவாட்கோர் செயலி ஆதரவோடு இயங்குகின்றன. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில் இரண்டு எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் இரண்டு யூஎஸ்பி போர்ட்கள் உடன் வருகிறது. இதன் ப்ளூடூத் அம்சங்கள் மூலம் பிற சவுண்ட்பார் போன்ற அணுகலை நேரடியாக இயக்க முடியும்.

File Images

More from GizBot

Best Mobiles in India

English summary
Daiwa Smart TV Launched in India in Two Sizes With HD Ready Features and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X