ரூ.8,500-க்குள் புது Washing Machine வாங்க முடியுமா? உண்மை தானா? இந்த மாடல்களை கொஞ்சம் பாருங்க!

|

இந்தியாவில் மழைக் காலம் துவங்கிவிட்டது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் முதல் துவங்கி, தினமும் அலுவலகம் சென்று வீடு திரும்பும் உத்தியோகஸ்தர்கள் வரை, இந்த மழைக் காலத்தில் சந்திக்கக் கூடிய மிகப் பெரிய சிக்கலாக இருப்பது துணிகளைத் துவைப்பது தான். இன்னும் சரியாகச் சொல்லப் போனால், துணிகளைத் துவைப்பதை விட அவற்றைச் சரியான முறையில் உளரவிடுவது தான் இந்த மழைக்காலத்தில் நமக்கு இருக்கும் மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வாக ஒரு Washing Machine வேண்டும் தானே.

புதிதாக வாஷிங் மெஷின் வாங்க ஐடியா இருக்கிறதா?

புதிதாக வாஷிங் மெஷின் வாங்க ஐடியா இருக்கிறதா?

இப்படியான சூழ்நிலையில் தான், நம்மிடம் ஒரு வாஷிங் மெஷின் சாதனம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நாம் அனைவரும் யோசிக்கத் துவங்குவோம். ஆனால், சிலருக்கு வாஷிங் மெஷின் வாங்குவது எளிமையான காரியமாக இருக்காது. ஏனெனில், அவர்கள் வசிக்கும் வீட்டில் வாஷிங் மெஷினுக்கான இடப் பற்றாக்குறை ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது அதிக காசு கொடுத்து ஒரு வாஷிங் மெஷினை வாங்கிட மனம் வராமல் கூடப் போயிருக்கலாம்.

உங்களிடம் வெறும் 8500 ரூபாய் இருந்தால் போதுமா? வாஷிங் மெஷின் வாங்கலாமா?

உங்களிடம் வெறும் 8500 ரூபாய் இருந்தால் போதுமா? வாஷிங் மெஷின் வாங்கலாமா?

எது எப்படியாக இருந்தாலும், இனி வாஷிங் மெஷின் சாதனத்தை வாங்க நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை என்கிறது Daiwa நிறுவனம். ஆம், உங்களிடம் வெறும் 8500 ரூபாய் இருந்தால் போதும், உங்கள் வீட்டிற்குள் அடக்கமாக அமரக்கூடிய புதிய வாஷிங் மெஷின் சாதனத்தை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்கிறது இந்த நிறுவனம். Daiwa நிறுவனம் இப்போது இந்தியாவில் 3 புதிய கம்மி விலை வாஷிங் மெஷின் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

Aqua Wash Deluxe என்ற பெயரில் 3 புதிய மாடல்

Aqua Wash Deluxe என்ற பெயரில் 3 புதிய மாடல்

Daiwa நிறுவனம் இப்போது இந்தியாவில் Aqua Wash Deluxe என்ற பெயரில் 3 புதிய வாஷிங் மெஷின் மாடல்களை ஸ்பைரல் வாஷ் பல்சேட்டர் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. Daiwa நிறுவனம் அறிமுகம் செய்துள்ள D68WMP01A, D68WMG01A மற்றும் D75WMG01A ஆகிய மூன்று மாடல்களும் 2 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் மற்றும் 5 வருட வாஷ் மோட்டார் வாரண்டியுடன் வருகின்றது.D68WMG01A மற்றும் D75WMG01A ஆகியவை டூயல் டோன் பர்பிள் மற்றும் பிங்க் டிசைனில் கிடைக்கின்றன.

அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?

எந்த வாஷிங் மெஷின் மாடலை என்ன விலையில் வாங்கலாம்?

எந்த வாஷிங் மெஷின் மாடலை என்ன விலையில் வாங்கலாம்?

அதேபோல், D68WMP01A மாடல் வாஷிங் மெஷின் மெரூன் நிறத்தில் கிடைக்கிறது. இவற்றின் விலை பற்றிப் பார்க்கையில், D68WMG01A மாடல் வாஷிங் மெஷின் இப்போது வெறும் ரூ.9,490 விலையில் கிடைக்கிறது. அதேபோல், D75WMG01A மாடல் வாஷிங் மெஷினின் வெறும் ரூ.10,490 விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இருப்பதிலேயே இந்த D68WMP01A மாடலின் விலை தான் மிகவும் குறைவானது. இது ரூ.8,490 என்ற விலையில் வருகிறது. கம்மி விலையில் வாஷிங் மெஷின் வாங்க நினைப்பவர்களுக்கு இது தான் சரியான சாய்ஸ்.

Daiwa வாஷிங் மெஷின் தரம் குறைவாக இருக்குமா? சந்தேகமே வேண்டாம்!

Daiwa வாஷிங் மெஷின் தரம் குறைவாக இருக்குமா? சந்தேகமே வேண்டாம்!

வாஷிங் மெஷின்கள் இந்தியாவில் உள்ள முன்னணி சில்லறை விற்பனை கடைகளிலும் பிராண்டின் இணையதளத்திலும் வாங்குவதற்குக் கிடைக்கின்றன. Daiwa கம்மி விலையில் இப்படி 3 வாஷிங் மெஷின் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளதால் இதன் தரம் குறைவாக இருக்குமோ என்ற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். இந்த வாஷிங் மெஷின் சாதனங்கள் ஸ்பைரல் வாஷ் பல்சேட்டர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அழுக்கு மற்றும் கறைகளை அகற்ற உதவுகிறது.

அழுக்கை அடித்து விரட்டும் ஹெவி மற்றும் சாஃப்ட் வாஷிங் முறை

அழுக்கை அடித்து விரட்டும் ஹெவி மற்றும் சாஃப்ட் வாஷிங் முறை

இந்த வாஷிங் மெஷினின் ஒவ்வொரு வாஷிங் சுழற்சியிலும் சக்திவாய்ந்த வாஷிங் முறை செயல்படுத்துகிறது என்பதனால் துணிகளில் உள்ள அழுக்குகளை இது முழுமையாக நீக்குகிறது. D68WMG01A வாஷிங் மெஷின் மாடல் 6.8kg எடை கொண்ட திறனைக் கொண்டுள்ளது. அதேபோல், D75WMG01A மாடல் 7.5 கிலோ எடை திறன் கொண்டவை. வாஷிங் மெஷின் இயந்திரங்கள் இரண்டு ஹெவி மற்றும் சாஃப்ட் வாஷிங் முறைகளுடன் வருகிறது.

உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?

இந்த செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் துணிகளை ட்ரை செய்யுமா?

இந்த செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் துணிகளை ட்ரை செய்யுமா?

இவை 15 நிமிடங்கள் வாஷிங் மற்றும் 5 நிமிட ட்ரையர் சுழற்சியைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. வடிவமைப்பைப் பொறுத்த வரையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த வாஷிங் மெஷின் சாதனங்கள் துருப்பிடிக்காத உடலை பிரீமியம் வடிவமைப்புடன் கொண்டுவந்துள்ளன. இது இந்திய வானிலைக்கு உகந்ததாக ஆக்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு நீடித்து நிலைத்திருக்கும் வகையில் உறுதியாக இவை உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.

மோட்டாருக்கான தெர்மல் பாதுகாப்புடன் வருகிறதா?

மோட்டாருக்கான தெர்மல் பாதுகாப்புடன் வருகிறதா?

இயந்திரங்கள் RoHS இணக்கமானவை என்பதனால், இவை அபாயகரமான பொருட்களிலிருந்து விடுபட்டு பசுமையான சூழலுக்கு ஏற்ற வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாஷிங் மெஷின் டிவைஸ்கள் மோட்டாருக்கான தெர்மல் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழில்நுட்பம் மோட்டார் செயலிழப்பை ஏற்படுத்தும் அபாயகரமான வெப்பத்தைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஷாக் ப்ரூஃப் மற்றும் வாட்டர் ப்ரூஃப் பேனல்

ஷாக் ப்ரூஃப் மற்றும் வாட்டர் ப்ரூஃப் பேனல்

மாடல்கள் D68WMG01A, D75WMG01A ஒரு கடினமான செராமிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதேசமயம் சிக்கனமான D68WMP01A மாடல் நுகர்வோரின் பல்வேறு விருப்பங்களுக்கு ஏற்ப பிளாஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. கூடுதலாக, மூன்று மாடல்களிலும் உள்ளமைக்கப்பட்ட ஷாக் ப்ரூஃப் மற்றும் வாட்டர் ப்ரூஃப் பேனல் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இது சலவை செயல்பாட்டின் போது பயனர் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Moto G32 போனுக்காக ஏன் எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? மேட்டர் இது தான் பாஸ்.!Moto G32 போனுக்காக ஏன் எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? மேட்டர் இது தான் பாஸ்.!

இதை விட கம்மி விலையில் புது வாஷிங் மெஷின் கிடைக்காது

இதை விட கம்மி விலையில் புது வாஷிங் மெஷின் கிடைக்காது

கடைசியாக, வாஷிங் மெஷின்கள் பலதரப்பு சக்கரங்களுடன் இயக்கத்தை எளிதாக்குகிறது. வாஷிங் மெஷினின் அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் எளிமையாக நீங்கள் விரும்பிய இடங்களுக்குச் சிரமம் இல்லாமல் இவற்றை நகர்த்திக்கொள்ள முடியும். உங்கள் நேரத்தை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும் மெஷின் சைக்கிள் பஸ்ஸர் அம்சமும் இதில் உள்ளது. உங்கள் துணிகளின் சலவை முடிந்ததும் மெஷின் பஸ்ஸரை ஒலிக்கச் செய்யும். கம்மி விலையில் வாஷிங் மெஷின் வாங்க விருப்பம் இருந்தால் மேற்கூறிய இந்த மாடல்களை ஒருமுறை பாருங்கள்.

Best Mobiles in India

English summary
Daiwa Launches 3 New Range Of Aqua Wash Deluxe Washing Machines Starting From Rs 8490

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X