அலெக்சா ஆதரவோடு களமிறங்கிய டைவா ஸ்மார்ட்டிவிகள்: உச்சக்கட்ட அம்சங்களோடு குறைந்த விலை!

|

டைவா இரண்டு அளவிலான புதிய ஸ்மார்ட்டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அலெக்சா கட்டமைப்போடு இந்த ஸ்மார்ட்டிவிகள் அறிமுகமாகியுள்ளது. 32 இன்ச், 40 இன்ச் என்ற இரண்டு அளவில் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகமாகியுள்ளன. இந்த டிவிகளின் விலை ரூ.15,990 எனவும் ரூ.21,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டைவா ஸ்மார்ட்டிவிகள்

டைவா ஸ்மார்ட்டிவிகள்

டைவா ஸ்மார்ட்டிவிகள் இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்டிவிகளுக்கு ஒரு வருட முழுமையான உத்தரவாதம் வழங்கப்படுகிறது. மேலும் மை டைவா ஆப் மூலம் தயாரிப்பை பதிவு செய்தால் டிவி பேனலுக்கு கூடுதலாக ஒருவருட உத்தரவாதம் வழங்கப்படுகின்றன.

அலெக்சா கட்டமைப்பு ஆதரவு

அலெக்சா கட்டமைப்பு ஆதரவு

ஸ்மார்ட் டிவிகள் அலெக்சா கட்டமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியை ரிமோட்டில் உள்ள மைக் பட்டனை கிளிக் செய்து குரல் கட்டளை மூலம் மேற்கொள்ளலாம். அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்டிவியை எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் அலெக்சா உள்ளமைக்கப்பட்ட சாதனத்துடன் இணைப்பதன் மூலம் ஹேண்ட்ஸ் ஃப்ரீ முறையில் கட்டுப்படுத்த முடியும்.

பல்வேறு ஓடிடி ஆதரவுகள்

பல்வேறு ஓடிடி ஆதரவுகள்

ஸ்மார்ட்டிவிகளில் தி பிக் வால் யூஐ இடம்பெற்றுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ், ஜீ5 வூட் உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்கங்கள் உள்ளது. அதிகாரப்பூர்வ பயன்பாடுகளுக்கான நேரடி அணுகலை இது கொண்டு வருகிறது. பல்வேறு மொழி பொழுதுபோக்கு அம்சங்களை மூவி பாக்ஸ் மூலமாக பார்வையிடலாம்.

டிஸ்கவரி எஞ்சின் என்ற ஸ்மார்ட் தேடல்

டிஸ்கவரி எஞ்சின் என்ற ஸ்மார்ட் தேடல்

ஸ்மார்ட்டிவி நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஆதரவு இருக்கிறது. இதில் உள்ளமைக்கப்பட்ட டிஸ்கவரி எஞ்சின் என்ற ஸ்மார்ட் தேடல் மூலம் பயனர்கள் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல பயன்பாடுகளை தேட அனுமதிக்கிறது. ஸ்மார்ட்டிவி தானியங்கி ஓடிஏ புதுப்பிப்புகளை ஆதரிக்கிறது.

ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பு

ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பு

ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பு, ஏ35 குவாட் கோர் செயலி மூலம் இயங்குகிறது. டைவா ஸ்மார்ட் டிவியில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்சேமிப்பு வசதிகள் இருக்கிறது. 3 எச்டிஎம்ஐ, 2 யூஎஸ்பி போர்ட்கள் ஆடியோ சாதனங்கள் ப்ளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. குவாண்டம் லுமினிட் டெக்னாலஜி சிறந்த வண்ண முரண்பாடுகளை வழங்குகிறது. இது 20 வாட்ஸ் சத்தம் வெளியீடை கொண்டுள்ளது. அதேபோல் ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பத்தை வழங்குகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Daiwa Launched its Two Variant SmartTV With in Built Alexa

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X