கூவி கூவி விற்பனை.. ரூ.7499-க்கு 32 இன்ச் பிரேம்லெஸ் TV.. மலிவு விலையில் 43 இன்ச் HD Smart TV.. என்ன மாடல்?
டைவா (Daiwa) நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய பட்ஜெட் பிரெண்ட்லி ஸ்மார்ட் டிவி (budget-friendly smart TV) சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒரு ஸ்மார்ட் டிவி மாடல் 32" இன்ச் டிஸ்பிளே அளவிலும், மற்றொரு ஸ்மார்ட் டிவி மாடல் 43" இன்ச் டிஸ்பிளே அளவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல் டிவிகளை விட மிகமிக குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட் டிவிகளை டைவா நிறுவனம் அறிமுகம் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டைவா (Daiwa) நிறுவனம் இந்தியாவில் 32" இன்ச் (Daiwa 32 inch HD Ready TV) மற்றும் 43" இன்ச் டிஸ்பிளே (Daiwa 43 inch Full HD TV) கொண்ட ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்டிவிகள் ஃபிரேம்லெஸ் டிஸைனுடன் மிகவும் ஸ்லிம்மான தோற்றத்துடன், பல தலைசிறந்த அம்சங்களை பேக் செய்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடலாக வெளிவந்துள்ளது. இவற்றின் விலை மற்றும் சிறப்பம்ச தகவலை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

கூவி கூவி விற்பனை.. ரூ.7499-க்கு 32 இன்ச் பிரேம்லெஸ் TV:
டைவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள டைவா 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி (Daiwa 32 inch HD Ready Smart TV) மற்றும் டைவா 43 இன்ச் ஃபுள் எச்டி ஸ்மார்ட் டிவி (Daiwa 43 inch Full HD smart TV) ஆகிய இரண்டு மாடல்களும் எட்ஜ்-டு-எட்ஜ் ஃபிரேம்லெஸ் பேசல் டிஸைனுடன் வருகிறது. 32 இன்ச் மாடல் டிவி 1366 × 768 பிக்சல் தீர்மானத்துடன் வருகிறது.
மறுபுறம், 43 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி சாதனம் 1920 × 1080 பிக்சல் ரெசொலூஷன் உடன் வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களும் 60Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் 16.7 மில்லியன் கலர் (16.7 million colours) அம்சத்துடன், உங்களை கண்களை பாதுகாக்கும் ஐ-கேர் மோட் (Eye-Care Mode) பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இது 7 பிக்ச்சர் மோட் (seven picture mode) ஆதரவை வழங்குகிறது.
டைவா ஸ்மார்ட் டிவி ஸ்டோரேஜ் மற்றும் சவுண்ட் எப்படி இருக்கு?
டைவா 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்கள் இரண்டுமே டூயல் பாக்ஸ் ஸ்பீக்கர் (two box speakers) அம்சத்துடன் 20W அவுட்புட் ஆடியோவை வழங்குகிறது. இதில் 5 விதமான ஆடியோ என்ஹான்ஸ்மெண்ட் (five sound modes for enhanced audio) அம்சத்தையும் டைவா வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகள் 4GB ஸ்டோரேஜ் (storage) உடன் 512MB ரேம் (RAM) அம்ஸத்துடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட் டிவிகள் இரண்டுமே அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), சோனி லைவ் (Sony Liv), ஜீ5 (Zee5), மற்றும் யூடியூப் (YouTube) போன்ற OTT தளங்களின் ஆப்ஸ் உடன் வருகிறது. இது தவிர இந்த டிவிகள் மிராகேஸ்ட் (Miracast), ஆப்பிள் ஏர்பிளே சப்போர்ட் (Apple Airplay support) போன்றவற்றை ஆதரிக்கிறது. இந்த டிவியை உங்கள் ஸ்மார்ட்போன் (smartphone), லேப்டாப் (laptop) போன்ற சாதனங்களில் இருந்து ஸ்ட்ரீம் செய்துகொள்ளலாம்.
டைவா 32 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் விலை (Daiwa 32 inch and 43 inch Smart TV price):
இந்த புதிய டைவா ஸ்மார்ட் டிவிகளின் (Daiwa Smart TV) விலை பற்றி பேசுகையில், Daiwa 32-inch HD Ready TV இந்தியாவில் D32H1COC என்ற மாடல் எண் உடன் ரூ. 7,499 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல், Daiwa 43-inch Full HD TV என்ற சாதனம் D43F1COC மாடல் எண் உடன் ரூ. 13,999 என்ற விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இவற்றின் விலை வங்கி சலுகையுடன் இன்னும் கணிசமாக குறைகிறது. இவை 1 வருட வாரன்டியுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications