ஜியோ பட்ஜெட் பயணர்களா?- தினசரி 1.5 ஜிபி டேட்டா., இதோ 4 புதிய திட்டங்கள்

|

கடந்த சில தினங்களாக ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக பிற தனியார் நிறுவனங்களும் தங்கள் கட்டண சலுகையை அறிவித்து வருகின்றனர். ஜியோவும் சற்றும் விட்டுக்கொடுக்காமல் பல்வேறு ஆஃபர்களை அறிவித்துக்கொண்டே இருக்கிறது.

சிறப்பு திட்டம் உருவாக்கி மகிழ்விக்கும் ஜியோ

சிறப்பு திட்டம் உருவாக்கி மகிழ்விக்கும் ஜியோ

ஜியோ சமீப காலமாக திட்டத்தின் கட்டணத்தை உயர்த்தி கொண்டே வருகிறது. இந்த கட்டணம் உயர்வால் அதன் பயணர்கள் தொய்வடைந்தாலும், அவ்வப்போது சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

1 ஜிபி அல்லது 1.5 ஜிபி டேட்டா

1 ஜிபி அல்லது 1.5 ஜிபி டேட்டா

பொதுவாக ஜியோவின் அறிமுகத்தின் மூலம் தினசரி 1 ஜிபி அல்லது 1.5 ஜிபி டேட்டா உபயோகிப்பது என்ற எண்ணம் உருவாகி விட்டது. இது போன்ற திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 1.5 ஜிபி டேட்டா தேவை என்பது கட்டாயமாக திகழ்ந்து வருகிறது. முன்னதாக ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கி வந்தது.

ரூ.199 ரீசார்ஜ் திட்டம்

ரூ.199 ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவானது ரூ.199 திட்டடத்தின் மூலம் தனது சந்தாதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதேபோல் இந்த திட்டத்தின் மூலம் வரம்பற்ற ஜியோ முதல் ஜியோ அழைப்பு மற்றும் 1,000 நிமிடங்கள் ஜியோ அல்லாத குரல் அழைப்புகள் உள்ளிட்டவைகள் வழங்குகின்றன. அதோடு நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ மொபைல் செயலிகளுக்கு இலவச சந்தா முதலியவையை வழங்குகிறது.

ரூ.399 ரீசார்ஜ் திட்டம்

ரூ.399 ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ திட்டம் தனது ரூ.399 திட்டத்தின் மூலம் தனது சந்தாதாரர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த செல்லுபடியாகு கால அவகாசம் ஆனது 56 நாட்களாகும். டேட்டாவை தவிர்த்து இந்த திட்டத்தின் மூலம் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரல் அழைப்புகள், 2000 நிமிடங்கள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவன அழைப்புகள். அதோடு நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குவதோடு அதன் ஜியோ மொபைல் செயலிகளுக்கு இலவச சந்தா ஆகியவைகள் வழங்கி வருகிறது.

ரூ.555 ரீசார்ஜ் திட்டம்

ரூ.555 ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டமும் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கடந்த திட்டங்கள் போலவே 1.5 ஜிபி டேட்டா வழங்கி வந்தாலும், இந்த திட்டம் 84 நாட்கள் வழங்கி வருகிறது. இந்த டேட்டாவை தவிர்த்து ரூ.555 திட்டங்கள் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ குரல் அழைப்புகள் அதோடு 3000 நிமிடங்கள் ஜியோ டூ பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்குகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது, ஜியோ மொபைல் செயலிகளுக்கு இலவச சந்தாக்களையும் வழங்குகிறது.

ரூ.2020 ரீசார்ஜ் திட்டம்

ரூ.2020 ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டமானது 2020 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ இந்த திட்டத்தின் மூலம் தங்களது சந்தாதாரர்களுக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வருகிறது. இந்த திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும். வருடம் முழுவதும் இந்த திட்டத்தின் மூலம் ஜியோ டூ ஜியோ குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. அதோடு 12,000 நிமிடங்கள் ஜியோ டூ பிற தொலைத்தொடர்பு நிறுவன அழைப்புகளும் வழங்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Daily 1.5 GB data plans for reliance jio budget customers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X