Home
News

அப்பா பாசம்- குடியை நிறுத்தி தன் மகளுக்கு மொபைல் வாங்கி ஊர்வலமாக எடுத்து வந்த டீ விற்கும் தந்தை: வீடியோ!

மத்தியப் பிரதேசத்தில் டீ விற்பனையாளர் ஒருவர் தனது ஐந்து வயது மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கியதை ஊர்வலமாக எடுத்து வந்துள்ளார். சீரியல் லைட்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் சில சிறுமிகள் அமர்ந்திருந்து இந்த ஸ்மார்ட்போனை ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். தனது ஐந்து வயது மகளுக்கு வாங்கிய இந்த மொபைலே தனது குடும்பத்தில் ரூ.12,500 விலையில் வாங்கிய முதல் மொபைல் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது ஐந்து வயது மகளுக்கு ஸ்மார்ட்போன்

தனது ஐந்து வயது மகளுக்கு ஸ்மார்ட்போன்

டீ விற்பனையாளர் ஒருவர் தனது ஐந்து வயது மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கியதை ஊர்வலமாக எடுத்து வந்துள்ளார். ரூ.12,500 விலையில் வாங்கிய தனது குடும்பத்தின் முதல் ஸ்மார்ட்போன் இது என அந்த நபர் தெரிவித்துள்ளார். இரவு நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் சில சிறுமிகள் அமர்ந்து இந்த மொபைலை எடுத்து வருகின்றனர். அதோடு ஒலிபெருக்கியில் ஒரு பாடல் இசைக்கப்பட்டப்படி மக்கள் ஊர்வலமாக இதை கொண்டாடி வருகின்றனர்.

தேநீர் விற்று வாழ்தாரத்தை நடத்தி வருபவர்

தேநீர் விற்று வாழ்தாரத்தை நடத்தி வருபவர்

தேநீர் விற்று வாழ்தாரத்தை நடத்தி வருபவர் முராரி குஷ்வாஹா, இவர் செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், ஷிவ்புரி நகரின் பழைய பகுதியில் ஸ்மார்ட்போன் வாங்கிய பிறகு அங்கிருந்து தனது வீட்டிற்கு மேள தாளம், குதிரை வண்டி, பட்டாசுகள் உடன் ஊர்வலமாக எடுத்து வந்தோம். அதோடு மட்டுமின்றி வீட்டில் தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்ததாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட மொபைல் போன்

தனது ஐந்து வயது மகள் தனக்கு மொபைல் போன் வாங்கித் தருமாறு நீண்ட நாட்களாக தன்னிடம் கோரிக்கை விடுத்து வந்ததாகவும், தனது 5 வயது மகள் மதுவை கைவிடுமாறும், அந்த பணத்தை சேமித்து தொலைபேசி வாங்குமாறும் கேட்டுக் கொண்டதாக அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் போன் வாங்கும் போது முழு நகரமும் அதற்கு சாட்சியாக இருக்க வேண்டும் என தான் உறுதியாக இருந்ததாக குஷ்வாஹா குறிப்பிட்டார்.

பிரதான தேவையாக மாறும் ஸ்மார்ட்போன்

பிரதான தேவையாக மாறும் ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றே கூறலாம். பல்வேறு சிறப்பம்சங்கள் ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பு, கூகுளில் பார்த்து அறிந்து கொள்வது என்ற பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் பிரதான பயன்பாடாக மாறி வருகிறது. அதே அளவிலான ஆபத்தும் வளர்ந்துக் கொண்டே வருகிறது. முடிந்தளவு ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

பண மோசடி செய்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

பண மோசடி செய்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

பணம் பரிசாக கிடைக்கும் என ஏமாற்றுவார்கள்

பணம் பரிசாக கிடைக்கும் என ஏமாற்றுவார்கள்

அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

Best Mobiles in India

English summary
Dad's Love: Tea Seller Buy Mobile Phone For Daughter and Took Home With DJ Music, Horse Carriage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X