பள்ளிக்கு அனுப்ப வீடியோ பதிவு செய்த மகள்.! இது தெரியாமல் குத்தாட்டம் போட்ட தந்தை.! கடைசியில் நடந்தது இதுதான்.!

|

கொரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்அப் செயலி உட்பட பல்வேறு தனித்துவமான செயலிகள் மூலம் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

மகள் எதற்கு அதை

இந்த நிலையில் தனது மகள் பதிவு செய்து கொண்டிருந்த வீடியோ ஒன்றில், மகள் எதற்கு அதை எடுக்கிறாள் என்று தெரியாமல், பின்னால் நின்ற தந்தை குத்தாட்டம் ஆடிய வீடியோ ஒனறு இப்போது இணையதளத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 வீடியோவில் சிறுமி

வெளிவந்த தகவலின்படி, அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் craft வேலைகளை நாம் இப்போது செய்யப் போகிறோம் என கூறி கையிலுள்ள சில பொருட்களை கொண்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறது. பின்பு பள்ளிக்கு அனுப்ப வேண்டிய ப்ராஜெக்ட் வேலைகளுக்காக சிறுமி அந்த வீடியோவை பதிவு செய்த நிலையில், அதுகுறித்த அறியாத தந்தை, வீடியோ முழுவதிலும் வேற லெவலில் ஆட்டம் போட்டுள்ளார்.

FC Kohli:இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை எஃப்சி கோலி காலமானார்!

பயன்படுத்தும் அந்த

மேலும் தனது மகள் சாதாரணமாக வீடியோவை எடுப்பதாக நினைத்த தந்தை அப்படி செய்துள்ளார். பின்பு அவரது மனைவி மகளின் பள்ளி படிப்புகளுக்கு பயன்படுத்தும் அந்த மொபைல் செயலியை திறந்து பார்த்த போது அதில் இந்த வீடியோவை தனது அசிரியைக்கு மகள் அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது.

அதன்பின்பு இந்த வீடியோ கண்டு வாய் விட்டு சிரித்த மனைவி உடனடியாக இந்த சம்பவத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகளின் பள்ளி தொடர்பான செயலியை திறந்து பார்த்த போது இந்த ப்ராஜெக்ட் வீடியோவை அவர் தனது ஆசிரியைக்கு அனுப்பியது தெரிய வந்தது, நான் எப்படி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேனோ, அதேபோன்று அவரது அசிரியையும் கண்டிப்பாக சிரித்துத் தள்ளியிருப்பார்.

 என்பது அவருக்

ஆனால் எனது கணவர், மகள் எப்போதும் போல வீடியோக்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துள்ளார்,ஆசிரியருக்கு இந்த வீடியோவை மகள் அனுப்ப போகிறார் என்பது அவருக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார் அவரது மனைவி..

இணையதளங்களிலும்

தற்சமயம் இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளம் உட்பட அனைத்து இணையதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 1.3 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Dad Dances in Background of Daughter homework video: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X