DTH போல D2M சேவை.. மொபைலில் ஒளிபரப்பு.. இன்டர்நெட் வேண்டாம்.. பிரசார் பாரதி திட்ட வட்டம்.. என்னென்ன மாறும்?
இன்டர்நெட் இல்லாமலேயே சாட்டிலைட்கள் மூலம் டிடிஎச் சேவைகள் வழங்கப்படுவதைப்போல, டைரக்ட் டு மொபைல் என்னும் டி2எம் சேவை மூலம் ஸ்மார்ட்போன்களில் வீடியோ கன்டென்ட்களை மத்திய அரசு வழங்க இருக்கிறது. இதில் லைவ் டிவி சேனல்கள் வருமா? இதனால் டெலிகாமில் என்ன நடக்கும்?
டி2எம் என்றால் என்ன? டிவி சேனல்கள் ஒளிபரப்புக்காக பயன்படுத்தப்படும் டி2எச் (DTH) டெக்னாலஜி பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. இது சாட்டிலைட்கள் மூலம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கு இன்டர்நெட் (Intenet), வை-பை (Wi-Fi) போன்ற எந்தவொரு கனெக்சனும் தேவையில்லை.

இதேபோலத்தான் சாட்டிலைட்கள் மூலம் டி2எம் என்னும் டைரக்ட் டூ மொபைல் (Direct To Mobile) சேவை வழங்கப்பட இருக்கிறது. இதில் செட்-டாப் பாக்ஸ் தேவையில்லை. நேரடியாக மொபைல்களுக்கே ஒளிபரப்பு செய்து கொள்ளலாம். ஆகவே, லைவ் டிவி சேனல்கள் (Live TV Channels) முதல் வீடியோ கன்டென்ட்கள் (Video Contents) வரையில் இதில் பார்த்து கொள்ளலாம்.
இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனமானது, இந்த சேவையை வழங்க இருக்கிறது. இதற்காக ஐஐடி கான்பூருடன் (IIT Kanpur) கைகோர்த்துள்ளது. ஆகவே, இந்த சேவை மக்களுக்கு இலவசமாக கிடைக்க வாய்ப்புள்ளதுதான்.
இன்டர்நெட் போல இதில் எந்தவொரு இடையூறுக்கும் வாய்ப்பில்லை என்பதால், எச்டி குவாலிட்டியில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். அதே போல இன்டர்நெட் சேவை கிடைக்காத இடத்திலும் சாட்டிலைட்கள் மூலம் இந்த டி2எம் சேவை கிடைக்கும் என்பதால், மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.
டி2எம் என்னென்ன மாறும்? இந்த சேவை வழங்கப்பட்டால், பிரசார் பாரதியின் கீழ் ஒளிபரப்பாகும் டிடி நேஷனல், டிடி ஸ்போர்ட்ஸ், டிடி நியூஸ், டிடி கிஷான் போன்ற ஆல் இந்தியா சேனல்கள் முதல் டிடி தமிழ், டிடி மலையாளம், டிடி ஒரியா, டிடி பங்களா போன்ற மாநில சேனல்கள் வரையில் ஒளிபரப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல், தனியார் டிவி சேனல்களும் பிரசார் பாரதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து லைவ் சேனல்கள் மற்றும் வீடியோ கன்டென்ட்களை வெளியிட வாய்ப்புள்ளது. உதாரணத்துக்காக கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பும் ஐபிஎல் போட்டிகளை லைவ்வாக மொபைலில் இன்டர்நெட் இல்லாமல் பார்த்தால் எப்படி இருக்கும்?
இதற்கும் டி2எம் சேவையில் அதிக வாய்ப்புள்ளது. ஆனால், தனியார் ஒளிபரப்புக்கு நிச்சயம் கட்டணங்கள் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. மத்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் இன்டர்நெட் சேவை கொண்ட 80 கோடி மொபைல்களில் 69 சதவீத மக்கள் வீடியோ கன்டென்ட்களை பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், செய்திகளை தெரிந்து கொள்வதற்கும் வீடியோ வடிவிலான கன்டென்ட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆகவே, வருங்காலத்தில் இந்த டி2எம் சேவை மிகப்பெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களிடமும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
ஆனால், இது முற்றிலும் மாற்றத்தை கொண்டுவராது. ஏனென்றால், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்கள் மற்றும் பிற சேவைகளுக்கு இன்டர்நெட் அவசியமாகும். ஆகவே, மாதம் மாதம் டேட்டாவுக்கு செலவாகும் தொகையில் எந்தவித மாற்றமும் இருக்காது. அதேநேரத்தில் வீட்டில் லைவ் டிவி சேனல்கள் பார்க்கும் பழக்கத்தில் மாற்றம் வரலாம்.
ஆனால், இப்போது கூட பல லைவ் டிவி சேனல்கள் இன்டர்நெட் மூலம் ஒளிபரப்பாகின்றன. இருப்பினும், அவை ஓடிடிகளை போல மிகப்பெரும் வரவேற்பு பெறவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். அதே நேரத்தில் இன்டர்நெட் சேவையை தொடர்ந்து பெற முடியாத மக்களுக்கு டி2எம் மிகுந்த வரப்பிரசாதம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








