Home
News

Smart Ring திருமணம் தெரியுமா? இதயத்துடிப்பை பரிமாறிக்கொள்ளும் ஜோடி

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஒரு காதல் ஜோடி இதயத் துடிப்பை பரிமாறிக் கொள்ளும் வகையில் ஸ்மார்ட் ரிங்ஸ் (Smart Rings) மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமான திருமணம் ஸ்மார்ட் ரிங்ஸ் மீதான ஆர்வத்தை மக்களிடையே தூண்டியுள்ளது.

இந்த ஸ்மார்ட் ரிங்கில் அப்படி என்ன விஷேசம் இருக்கிறது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் ஸ்மார்ட் டிவைஸ்களை (Smart Devices) காண முடிகிறது. பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் என தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவற்றை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

 இப்படி கூட திருமணமா? இதயத்துடிப்பை பரிமாறிக்கொள்ளும் ஜோடி

பிறந்த நாள் முதல் திருமண நாள் வரை ஸ்மார்ட் டிவைஸ்களையே பரிசுகளாக கொடுக்கின்றனர். இந்த வரிசையில் ஸ்மார்ட் ரிங்ஸ்களும் பிரபலமடைய தொடங்கி விட்டன. ஸ்மார்ட்வாட்ச்களை போலவே ஸ்மார்ட் ரிங்ஸ்களும் உடல் செயல்பாட்டை கண்காணிக்கிறது.

இருப்பினும், ஸ்மார்ட் ரிங்ஸ் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படிபட்ட சூழலில், செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஒரு ஜோடி ஸ்மார்ட் ரிங்ஸ்களை உலகளவில் பிரபலப்படுத்தியிருக்கிறது. தங்களது பாரம்பரிய திருமண முறையில் தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது.

செக் குடியரசு நாட்டில் திருமணத்தின் போது தங்கம், பிளாட்டினம் அல்லது வெள்ளி போன்ற ஆபரணங்களால் ஆன மோதிரங்களை மாற்றிக்கொள்வது வழக்கம். ஆனால், இந்த ஜோடி ஸ்மார்ட் ரிங்ஸ் மாற்றிக்கொண்டு திருமணத்தை செய்துள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களான ஜிரி (Jiri ) மற்றும் ஆண்ட்ரேஜ் (Ondrej) நீண்ட நாட்கள் காதல் வாழ்க்கைக்கு பிறகு கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணத்தின்போது ஸ்மார்ட் ரிங்ஸ் மாற்றிக்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து ஜிரி கூறுகையில், நாங்கள் திருமண நாளை மிகவும் முக்கியமானதாக கருதுகிறோம். அந்த நாளில் வழக்கமான தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களை பயன்படுத்த இருவரும் விரும்பவில்லை. ஆகவே, ஸ்மார்ட் ரிங்ஸ் மாற்றிக்கொள்ள முடிவெடுத்தோம்.

இந்த ஸ்மார்ட் ரிங்ஸ் மூலம் எங்களது இதயத்துடிப்பை கவனித்துக்கொள்வோம் என்றார். ஸ்மார்ட்வாட்ச்களைப் போலவே ஸ்மார்ட் ரிங்குகள் ஹெல்த் டிராக்கராக ( Health Tracker ) பயன்படுகிறது.

இந்த ரிங்ஸ்களில் ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஸ்டிரெஸ் லெவல் மானிட்டர் ( Stress Level Monitor ), ஹார்ட் ரேட் மானிட்டர் ( Heart Rate Monitor ), பிளட் ஆக்சிஜன் சென்சார் (Blood Oxygen Sensor) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. அதோடு ப்ளூடூத் ( Bluetooth ), வாட்டர் ரெசிஸ்டண்ட் ( Water Resistant ) போன்ற வசதியும் உள்ளது. இந்த ஜோடி வாங்கிய ஸ்மார்ட் ரிங்கில் ப்ளூடூத் வசதியுடன் கூடிய ஹார்ட் ரேட் மானிட்டர் மட்டுமே உள்ளது.

இந்த ஸ்மார்ட் ரிங், ஹெச்பி ரிங் (HB Ring) என்றழைக்கப்படுகிறது. இதனை செக் ஃபர்ம் தி டச் (Czech firm The Touch) நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஹெச்பி ரிங்கின் தொடக்க விலை ரூ. 8,000 ஆக உள்ளது. இதில் கொடுக்கப்படும் அம்சங்களை பொறுத்து விலையில் மாறுபடும் என்று செக் ஃபர்ம் தி டச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Czech couple exchange smart rings on their wedding day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X