தமிழ் மொழியில் இலவச எஸ்எம்எஸ்/வாட்ஸ்ஆப் மூலம் சைபர் பாதுகாப்பு டிப்ஸ்.!

சைவேர் (Cyware) எனப்படும் சைபர் விழிப்புணர்வு பிளாட்பார்ம் ஆனது தமிழ் உட்பட ஐந்து இந்திய மொழிகளில் சைபர் டிப்ஸ்களை எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் வழங்குகிறது.

|

பணப்புழக்கம் குறைந்து ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனைகளை அதிக அளவில் நடத்திக் கொண்டிருக்கும் இந்திய மக்களின் மனதில் அடிக்கடி தோன்றும் பயத்தில் ஒன்று தான் - சைபர் குற்றம்.

சைபர் க்ரைம் எனப்படும் அந்த குற்றம் கணினியோ அல்லது வலையமைப்பு சார்ந்திருக்கும் குற்றங்களை குறிக்கிறது. கம்ப்யூட்டர் க்ரைம் என்பது கணினி ஒரு இலக்காகவோ அல்லது ஒரு குற்றச் செயலை செய்யவோ பயன்படுத்தப்பட்டிருக்கலம். சைபர் க்ரைம் குற்றம் என்பது இணையத்தை பயன்படுத்தி குற்ற செயல்களை செய்வதாகும்.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் இவ்வகை சைபர் குற்றங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது மற்றும் இந்தியாவில் மட்டும் 42 மில்லியன் மக்கள் கணினிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தியாவில் உள்ள நிலைப்பாடின் கீழ் பார்க்கும் போது சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதில் சிக்காமல் உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள உங்களுக்கு அறிவுரைகள், சைபர் விழிப்புணர்வு நிச்சயம் தேவை.

தமிழ் மொழியில்

தமிழ் மொழியில்

அதனை வழங்கும் நோக்கில் சைவேர் (Cyware) எனப்படும் சைபர் விழிப்புணர்வு பிளாட்பார்ம் ஆனது தமிழ் உட்பட ஐந்து இந்திய மொழிகளில் சைபர் டிப்ஸ்களை உங்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்ஆப் மெஸேஜ் மூலமாக வழங்குகிறது.

இலவச சேவை

இலவச சேவை

இந்த "இலவச சைபர் சுரக்க்ஷா" சேவையானது இந்தியாவில் நிலவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் மீதான தடை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடு மூலம் ஏற்பட்டுள்ள திட்டமிடப்படாத விளைவுகளை எதிர்கொள்ளும் சாதாரண இந்திய பிரஜையை மனதில் கொண்டு வழங்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பொது தகவல் எண்..?

பொது தகவல் எண்..?

"இந்தியாவில், வங்கிகள் மூலம் வழங்கப்படும் ஏடிம்எம் கார்டுகளின் பின் நம்பர் ஆனது எப்போதுமன்றே மாற்றப்படாமால் பயன்படுத்தப்படுகிறது. அப்படியாக இந்திய இணைய கலாச்சாரத்தின் படி பின் நம்பர் என்பது 'தனிப்பட்ட அடையாள எண்' என்பது மாறி 'பொது தகவல் எண்' என்பது போல் மாறிவிட்டது" - என்று கூறியுள்ளார் அக்ஷ்ட் ஜெயின், சைவேர் இணை நிறுவனர். உடன் சைவேர் சேவையானது இணைய பாதுகாப்பு சுகாதாரத்தை பற்றி பொது மக்கள் அறிந்தது விழிப்புடன் செயல்பட எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக சைபர் குற்றம் சார்ந்த அறிவுரைகளை வழங்கி வருகிறது. அதில் என்னென்னெ செய்ய வேண்டும் மற்றும் எது செய்யக்கூடாதவைகள் பற்றியை தெளிவு பிறப்பிக்கப்படும் என்றும் ஜெயின் கூறியுள்ளார்.

பெறுவது எப்படி.?

பெறுவது எப்படி.?

எஸ்எம்எஸ் மூலம் இணைய சுகாதார டிப்ஸ்களை பெற நீங்கள் வெறுமனே 7676610000 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். மற்றும் இந்தச் சேவையை வாட்ஸ்ஆப்பில் பெற அதே எண்ணை உங்கள் காண்டக்ட் பதிவில் சேர்த்து அந்த எண்ணிற்கு "CywareTips" என்று டைப் செய்து வாட்ஸ்ஆப் மெஸேஜ் அனுப்பவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தினசரி சைபர் பாதுகாப்பு டிப்ஸ்

தினசரி சைபர் பாதுகாப்பு டிப்ஸ்

இந்த சேவையை பெறும் சந்தாதாரர்கள் ஆன்லைன் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெடிபிட் அட்டை பயன்பாடுகள், இ-வேலட் மற்றும் பிற டிஜிட்டல் சொத்துக்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற தினசரி சைபர் பாதுகாப்பு டிப்ஸ்களை பெறுவர். தமிழ் தவிர்த்து ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் தற்போது இந்த சேவை கிடைக்கிறது. விரைவில் மற்ற மொழிகளிலும் தொடங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பண பரிவர்த்தனை செய்வது எப்படி?

Best Mobiles in India

Read more about:
English summary
Cyware Unveils Cybersecurity Tips in Five Indian Languages. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X