பப்ஜி மதனின் யூடியூப் சேனலை அதிரடியாக முடக்கம் செய்த சைபர்கிரைம் போலீசார்.!

|

பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் மதன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார்.

ஆரம்பத்தில் மதனின் ஆபாசமான

குறிப்பாக ஆரம்பத்தில் மதனின் ஆபாசமான பேச்சுகளுக்கு கிடைத்தஒரு சில மோசமான வரவேற்பு டாக்ஸிக் மதன் 18+ என்கிற மற்றொரு யூடியூப் சேனலை தொடங்குவதற்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது. மதன் யூடியூப் சேனல்களில் பதிவேற்றியுள்ள பல வீடியோக்கள் ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் தன்னோடு ஆன்லைனில் விளையாடும் சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் மதன்.

குறிப்பாக

குறிப்பாக Madan, Toxic Madan 18+, PUBG Madan Girl Fan, Richie Gaming YT போன்ற யூடியூப் சேனல்களில் தான் இவர் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

5 மில்லியன் பதிவிறக்கத்தை 2 நாளில் தாண்டிய பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா..5 மில்லியன் பதிவிறக்கத்தை 2 நாளில் தாண்டிய பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா..

னலில் அதிகப்படியாக 7

மதன் யூடியூப் சேனலில் அதிகப்படியாக 7 லட்சத்திற்கும் அதிக பார்வையாளர்களும், இதர சேனல்களில் 2 லட்ச பார்வையாளர்கள் இருந்து வந்தது. குறிப்பாக பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி சேனலில் வீடியோ வெளியிட்டு வந்த மதன் மீது கண்டனங்கள் கிளம்பியது. மேலும் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்கள் வந்தது.

ஜூன் 24: மலிவு விலை ஜியோ 5ஜி போன் மற்றும் லேப்டாப்? அம்பானியின் பலே திட்டம்.!ஜூன் 24: மலிவு விலை ஜியோ 5ஜி போன் மற்றும் லேப்டாப்? அம்பானியின் பலே திட்டம்.!

அடிப்படையில் மதன் மீது 4

அதன்பின்பு புகாரின் அடிப்படையில் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர். பின்பு நீண்ட நாட்களாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தலைமறைவாக இருந்த மதனை தர்மபுரியில் கடந்த 18-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடடா., ஏர்டெல் ரூ.199 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, 35 நாள் வேலிடிட்டியாம்- ஒரு சின்ன டுவிஸ்ட்!அடடா., ஏர்டெல் ரூ.199 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, 35 நாள் வேலிடிட்டியாம்- ஒரு சின்ன டுவிஸ்ட்!

ற்குமுன்பே மதனின் மனைவி

மேலும் இதற்குமுன்பே மதனின் மனைவி கிருத்திகாவை பிடித்து விசாரித்த போது, அவர் தான் சேனலுக்கு அட்மினாக இருந்தது தெரியவந்தது. எனவே கிருத்திகாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு மதனின் அனைத்து யூடியூப் சேனல்களையும் முடக்ககோரி யூடியூப் நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை அனுப்பியிருந்தனர்.

செகண்ட் ஹேண்ட் போன்களுக்கு இப்படி ஒரு கிராக்கியா? அடேங்கப்பா.! இதிலும் சியோமி தான் டாப்பா?செகண்ட் ஹேண்ட் போன்களுக்கு இப்படி ஒரு கிராக்கியா? அடேங்கப்பா.! இதிலும் சியோமி தான் டாப்பா?

ஆபாசங்கள் நிறைந்த 7 லட்சம்

இந்நிலையில் ஆபாசங்கள் நிறைந்த 7 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட மதன் யூடியூப் சேனல் மற்றும் டாக்ஸிக் மதன் 18+ யூடியூப் சேனல் என 2 சேனல்களையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக முடக்கம் செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டுசேனலையும் முடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக யூடியூப்நிறுவனம் சேனல்களை இதுவரை முடக்காததால் சைபர் கிரைம் போலீசாரே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Cybercrime police shut down PUBG Madan's YouTube channel: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X