ஆன்லைன் ஆர்டர் மூலம் ரூ.800-க்கு பதிலாக ரூ.80,000 அபேஸ்! உஷார் மக்களே!

|

பெங்களூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், ஆன்லைன் போர்ட்டல் மூலம் தான் விரும்பிய ரூ.800 மதிப்புள்ள குர்தாவை ஆர்டர் செய்திருக்கிறார். ஆசையாய் ஆர்டர் செய்த குர்தாவிற்கு பதிலாக, அவரிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.80,000 வரை திருடப்பட்டுள்ளது. எப்படி என்று தெரியுமா?

டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் பயனர்களின் கவனத்திற்கு

டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் பயனர்களின் கவனத்திற்கு

ஆன்லைன் இல் ஆர்டர் செய்து, டிஜிட்டல் பேமெண்ட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் பயனர்களின் கவனத்திற்கு, நீங்கள் உஷாராக இருக்கவில்லை என்றால் ஃபிஷ்ஷிங் அல்லது ஃவிஷ்ஷிங் போன்ற ஏமாற்றுக்காரர்களின் வலையில் சிக்கி பணத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

ரூ.80,000 தொகை அபேஸ்

ரூ.80,000 தொகை அபேஸ்

பெங்களூரு தெற்கு பகுதியில் உள்ள கோட்டிகேரைச் இடத்தை சேர்ந்த ஷ்ரவணா ஏ.ஏ என்ற பெண்மணி தான், இணையத்தளம் மூலம் தான் ஆர்டர் செய்த ரூ.800 மதிப்புடைய குர்தாவிற்கு ரூ.80,000 தொகையை இழந்திருக்கிறார். இதற்கான பேமெண்ட் தொகையை அவர் முன்பே செலுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உஷார்: இந்த 19 ஆப்களில் ஒன்று வைத்திருந்தாலும் ஆபத்து உறுதி- உடனடியாக செயலிழக்க செய்யுங்கள்உஷார்: இந்த 19 ஆப்களில் ஒன்று வைத்திருந்தாலும் ஆபத்து உறுதி- உடனடியாக செயலிழக்க செய்யுங்கள்

கஸ்டமர் கேர் எண்ணினால் சிக்கல்

கஸ்டமர் கேர் எண்ணினால் சிக்கல்

இவர் ஆர்டர் செய்த குர்தா குறிப்பிட்ட நாளில் டெலிவரி செய்யப்படவில்லை என்று புகாரளிக்கப் போய், இவர் பணம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இவர் ஆர்டர் செய்த ஆப் இல் கொடுக்கப்பட்டிருந்த கஸ்டமர் கேர் எண்ணிற்கு அழைத்து தனது புகாரைப் பதிவு செய்திருக்கிறார்.

போலி ஆன்லைன் படிவம்

போலி ஆன்லைன் படிவம்

அவரது புகாரை கவனத்தில் கொண்டு, வாடிக்கையாளர் பராமரிப்பு அதிகாரி விரைவில் அவர் ஆர்டர் செய்த சரக்கு அனுப்பப்படும் என்று உறுதியளித்தார். இதற்கிடையில் ஆன்லைன் படிவம் ஒன்றையும் வாடிக்கையாளர் பராமரிப்பு அதிகாரி நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.

ரூ.100 முதல் திட்டங்கள்: ஏர்டெல்லின் பலே அறிவிப்பு..!ரூ.100 முதல் திட்டங்கள்: ஏர்டெல்லின் பலே அறிவிப்பு..!

OTP எண்னை கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

OTP எண்னை கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

ஆன்லைன் படிவத்தில் அந்தப் பெண்ணின் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட தேவையான தகவல்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் பெண்ணின் மொபைல் எண்ணிற்கு OTP வந்துள்ளது. வடிக்கையாளர் பராமரிப்பு அதிகாரி அவரை அழைத்து, OTP எண்ணைக் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டிருக்கிறார்.

செய்யவே கூடாத காரியம் இதுதான்

செய்யவே கூடாத காரியம் இதுதான்

ஷ்ரவணா அவருடைய OTP எண்ணைப் பகிர்ந்துள்ளார். ஷ்ரவணா சற்றும் யோசிக்காமல் அவருக்காக விரிக்கப்பட்ட வலையில் நடப்பதை உணராமல் சிக்கிக்கொண்டார். OTP பகிரப்பட்ட சில நிமிடங்களில், ரூ .79,600 அவரது வங்கிக் கணக்கிலிருந்து நான்கு தவணைகளாக அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Cyberattack Alert: Women Got Into Online Phishing and Lost Rs.80,000 By Sharing OTP : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X