வாட்ஸ்அப் மூலம் உளவு- ராணுவத்தில் நடந்த சைபர் பாதுகாப்பு மீறல்: தீவிர விசாரணை., கடும் நடவடிக்கை!
இந்திய ராணுவத்தில் கடுமையான சைபர் பாதுகாப்பு மீறல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த தகவலை ஏஎன்ஐ செய்தித் தளம் தெரிவித்திருக்கிறது. ஏஎன்ஐ செய்தித் தளத்தில் வெளியான முழு தகவல்களை பார்க்கலாம். இந்த பாதுகாப்பு கெடுபிடியில் ராணுவ அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகவே இதுபோன்ற பாதுகாப்பு மீறல் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு முக்கியமான பாதுகாப்பு பிரச்சினை என வெளியாகும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
இது அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் வரும் விஷயம் என அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. சம்வத்திற்கு காரணமான ராணுவ வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது வெறும் பாதுகாப்பு மீறல் மட்டுமல்ல என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது, எனவும் இது உளவு பார்ப்பதுடன் தொடர்புடைய விஷயமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு மீறலுக்கும் எதிரி நாட்டின் உளவு பார்க்கும் செயலுக்கும் தொடர்பு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்
இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக ஏஎன்ஐ செய்தி தளம் தெரிவித்துள்ளது. ராணுவ அதிகாரிகள் மற்றும் எதிரி நாடுகள் தொடர்பான உளவுத்துறையில் சைபர் பாதுகாப்பு மீறலை புலனாய்வு நிறுவனம் கண்டறிந்திருக்கிறது. அதேபோல் சைபர் பாதுகாப்பு மீறல்களில் சில ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையப் பாதுகாப்பு மீறல்
ராணுவத் துறையில் நிலவும் இந்த இணையப் பாதுகாப்பு மீறல் என்பதில் அண்டை நாடுகள் தொடர்பு என்பது சிறிதளவு தவிர்க்க முடியாத விஷயமாகும். ராணுவ உளவுத்துறையின் தகவல்படி, ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் பாதுகாப்பு மீறல் சாத்தியமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது
அதேபோல் இது ராணுவ விவகாரம் என்பதால் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இது தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்த சம்பவம் குறித்து வதந்திகளை பரப்புவது என்பதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் விவரங்களை வெளியிடுவது என்பதும் விசாரணையை பாதிக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் இந்தியாவின் அண்டை நாடுகளாக விளங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உளவுத்துறை அமைப்புகள் இந்திய ராணுவ வீரர்களிடம் இருந்து ராணுவ தகவல்களை கசியவிட முயன்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

புலனாய்வு அமைப்புகள்
உளவுத்துறை அதிகாரிகளின் இணைய பாதுகாப்பு மீறலை புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. இது அண்டை நாட்டின் உளவு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்புடையது என சந்தேகிக்கப்படுகிறது. இணைய பாதுகாப்பு மீறல் விவகாரத்தில் ஏஎன்ஐ கேள்விக்கு பாதுகாப்பு வட்டாரங்கள் அளித்த பதிலை பார்க்கலாம், ராணுவ மற்றும் புலனாய்வு முகமைகள் சில ராணுவ அதிகாரிகளின் இணைய பாதுகாப்பு மீறலைக் கண்டுபிடித்துள்ளது. இது உளவு தொடர்பான விஷயம் என்பதால் அண்டை நாடுகள் மீது சந்தேகிக்கப்படுகிறது. சில வாட்ஸ்அப் குழுக்களில் இந்த மீறல் பதிவாகியுள்ளது என பாதுகாப்பு வட்டாரங்கள் ஏஎன்ஐ தளத்திடம் தெரிவித்திருக்கின்றன.

கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்
குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது குறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
Source: aninews.in


Click it and Unblock the Notifications