Home
News

29.1 மில்லியன் இந்தியர்களின் ரெஸ்யூம்கள் டார்க் வெப்பில் லீக்: சைபர் கிரிமினல்கள் அட்டகாசம்!

29.1 மில்லியன் இந்தியர்களின் தனிப்பட்ட தரவு (அதாவது ரெஸ்யூம்களை) சைபர் குற்றவாளிகள் டார்க் வெப்பில் (Dark Web) இலவசமாக வெளியிட்டுள்ளதாக ஆன்லைன் உளவுத்துறை நிறுவனம் சைபிள் தெரிவித்துள்ளது.

உலகின் 212 நாடுகளில் கொரோனா தாக்கம்

உலகின் 212 நாடுகளில் கொரோனா தாக்கம்

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் 212 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு வருகிறது.

நிறுவனங்கள் கடுமையான பின்னடைவு

நிறுவனங்கள் கடுமையான பின்னடைவு

இதனால் சிறுகுறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை கடுமையான பின்னடைவை சந்தித்து வருகின்றன. இந்த நேரத்தில் ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை தொடர்ச்சியாக காட்டி வருகின்றனர்.

ட்ரோஜன் வகை வைரஸ்

ட்ரோஜன் வகை வைரஸ்

சமீபத்திய காலமாக ட்ரோஜன் வகை வைரஸ் என்று கூறப்படும் இந்த வைரஸானது கொரோனா தொற்று தொடர்பாக அப்டேட், விவரம் என முழுமையாக கொரோனா பெயரில் இந்த நாசவேலை நடைபெற்று வருகிறது. கொரோனா புதிப்பிப்பு தகவல்கள் போன்ற வழியில் லிங்காக அனுப்பப்படுகிறது. இந்த லிங்க் கிளிக் செய்த உடன் ஸ்மார்ட்போனில் தீங்கு வேலைகள் தொடங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய நிதி தரவுகள்

ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய நிதி தரவுகள்

இந்த செர்பரஸ் வைரஸ் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியமான நிதி தரவுகளை பிரித்தெடுத்தப்பதோடு ஆன்லைன் பணம் பரிமாற்றம் போன்ற செயலிகள் மூலம் பணம் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்று தொடர்பான தகவல்கள் அனுப்பவது போல் நமது மொபைலுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இதை கிளிக் செய்தவுடன், தங்களது மொபைலில் உள்ள மென்பொருள்கள் திருடப்படுகிறது.

29.1 மில்லியன் இந்தியர்களின் ரெஸ்யூம்கள் லீக்

29.1 மில்லியன் இந்தியர்களின் ரெஸ்யூம்கள் லீக்

இந்த நிலையில் சுமார் 29.1 மில்லியனுக்கும் மேலான வேலை தேடும் இந்தியர்களின் தனிப்பட்ட தரவு (அதாவது ரெஸ்யூம்களை) சைபர் குற்றவாளிகள் டார்க் வெப்பில் (Dark Web) இலவசமாக வெளியிட்டுள்ளதாக ஆன்லைன் உளவுத்துறை நிறுவனம் சைபிள் (Cyble) தெரிவித்திருக்கிறது.

சைபிள் வெளியிட்டுள்ள குறிப்பு

சைபிள் வெளியிட்டுள்ள குறிப்பு

இதுதொடர்பாக சைபிள் வெளியிட்டுள்ள வலைப்பதிவு குறித்து பார்க்கலாம். இந்தியாவில் வேலை தேடும் 29.1 மில்லியனுக்கும் அதிமானவர்களுடையை தனிப்பட்ட விவரம் எனப்படும் ரெஸ்யூம்கள் டீப்வெப்களில் லீக்காகி உள்ளன. இருப்பினும் டீப் வெப்பில் இதுபோன்ற லீக் ஆவது மிகவும் வழக்கமான ஒன்று தான் என்று தெரிவித்தாலும். இந்த லீக் என்பது உற்று நோக்கக் கூடிய ஒன்றாகும்.

தனி நபரின் முழுவிவரங்கள்

தனி நபரின் முழுவிவரங்கள்

இந்த லீக் மூலம் தனி நபரின் முழுவிவரங்கள் கசிந்துள்ளன. அதாவது ஒரு நபரின் போன் நம்பர், அவரது படிப்பு, அவர மின்னஞ்சல் இத்தனை நாட்களாக அவர் என்ன செய்துக் கொண்டிருந்தார். தற்போது அவர் எந்த மாதிரியான பணிக்கு அப்ளை செய்துள்ளார், அவரது முகவரி, வீட்டார் விவரம் என அனைத்து தகவலும் லீக் ஆகி உள்ளது.

ரெஸ்யூம்கள் லீக்

ரெஸ்யூம்கள் லீக்

இப்படியாக சுமார் 29.1 மில்லியன் தனிநபர்களின் ரெஸ்யூம்கள் லீக் ஆகி உள்ளது என சைபர் புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த லீக் குறித்து மேலும் ஆராய்ந்து வருவதாகவும் இதுகுறித்த அப்டேட் செய்யப்படும் என சைபிள் தெரிவித்துள்ளது.

source: gadgetsnow.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Cyber criminals leaked 29.1 million Indian jobseekers personal details on dark web
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X