பாலியல் ரீதியான கற்பழிப்பு உள்ளபட அனைத்துப் பாலியல் தொடர்பான புகார்களை கொடுக்க இதோ இந்த வலைதளம்.!
மகளிர் பாதுகாப்புக்கு வலுப்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் இரண்டு இணையதளங்களை அறிமுகப்படுத்துகிறார்.
மகளிர் பாதுகாப்புக்கு வலுப்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் இரண்டு இணையதளங்களை அறிமுகப்படுத்துகிறார். பாலியல் குற்றங்கள் பற்றிய கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு உதவும் பாலியல் குற்றவாளிகளின் தேசிய தரவுத்தளமாக இந்த cybercrime.gov.in வலைத்தளம் செயல்படுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றம் செய்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கித் தர உதவும் முக்கிய வலைதளமாக இது செயல்படுமென்று அவர் தெரிவித்தார்.
இந்த வலைத்தளம் மூலம் ஆன்லைன் இல் ஆபாசம் வீடியோ மற்றும் புகைப்படம், குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியான கற்பழிப்பு மற்றும் பெண் பாதுகாப்பு உள்ளபட அனைத்துப் பாலியல் தொடர்பான புகார்களையும் பதிவு செய்யலாம்.

ஆன்லைன் இல் எளிதாக புகாரளிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் இந்த வலைத்தளம் பயனர்களுக்கு வழங்குகிறது. அத்துடன் புகாரளிப்பதற்கு இதில் உங்களின் தனிப்பட்ட அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது கூடுதல் பாதுகாப்பு மற்றும் சிறப்பு என்று உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங்க் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் எங்கு இருந்து வேண்டுமானாலும் புகாரை ஆன்லைன் இல் பதிவு செய்யலாம். இத்துடன் நீங்கள் செய்த புகார் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்ட புகார்களின் நிலை என்ன என்பதை முதற்கொண்டு இந்த வலைத்தளத்தில் அறியலாம்.
பெண் பாதுகாப்பிற்காக இந்திய அரசாங்கம் எடுத்திருக்கும் ஒரு பெரிய முயற்சி தான் இந்த ஆன்லைன் புகார் வலைத்தளம் என்று அவர் தெரிவித்தார். இத்துடன் உங்கள் மொபைல் போன் மூலமும் கூட புகார்களைப் பதிவு செய்யலாம்.


Click it and Unblock the Notifications