இந்தியாவில் அதிகரிக்கும் சீனாவின் சைபர் தாக்குதல்! பகிரங்கமான உண்மை இது தானா?

|

கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களைத் தொடர்ந்து, சீன ஹேக்கர்களின் இணையத் தாக்குதல்கள் இந்தியாவில் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்னும் திடுக்கிடும் தகவலைச் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சைபர் ஆராய்ச்சி நிறுவனமான சைஃபிர்மா தெரிவித்துள்ளது. உண்மையில் சீனா இந்தியா மீது சைபர் தாக்குதல்களை நடத்தி வருகிறதா என்ற சந்தேக கேள்விக்கான தெளிவான விளக்கம் இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்

இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சைபர் ஆராய்ச்சி நிறுவனமான சைஃபிர்மாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான குமார் ரித்தேஷ், இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்த பெட்டியில் இந்த தகவலை வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார். ஜூன் 18 ஆம் தேதிக்கு பின்னர் சீன இராணுவத்தால் ஆதரிக்கப்படும் ஹேக்கர்களால் சைபர் தாக்குதல்கள் இந்தியாவில் சுமார் 300% உயர்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கால்வான் தாக்குதலுக்கு பிந்தைய மோதல்

கால்வான் தாக்குதலுக்கு பிந்தைய மோதல்

இந்த சைபர் தாக்குதல்களில் தீவிரம் மற்றும் அதிகரிப்பு குறிப்பாக கால்வான் தாக்குதலுக்கு பிந்தைய மோதல்களில் அதிகரித்துள்ளது என்ற தகவலையும் அவரின் ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது என்று கூறியுள்ளார். சைஃபிர்மா நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகளை இந்தியாவின் நோடல் ஏஜென்சி கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) உடன் பகிர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!

மூன்று மடங்கு அதிகரித்துள்ள சைபர் தாக்குதல்

மூன்று மடங்கு அதிகரித்துள்ள சைபர் தாக்குதல்

இந்தியாவுக்கு எதிராக அதிகரித்த சைபர் தாக்குதல்கள் சீனாவின் டார்க் வெப் வலை நடவடிக்கைகள் மூலம் நடைபெறுகிறது என்றும் அவர் சமர்ப்பித்துள்ள ஆராய்ச்சி முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக எல்லையில் பதப்பட்ட நிலை நிலவிய அதே நேரத்தில் சைபர் தாக்குதல்களும் நடந்தேறியுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 18 ஆம் தேதிக்குப் பின்னர் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று குமார் ரித்தேஷ் கூறியுள்ளார்.

முதலில் இவர்கள் தான் முக்கிய குறி!

முதலில் இவர்கள் தான் முக்கிய குறி!

ஆரம்பத்தில் இந்த சைபர் தாக்குதல்கள் அனைத்தும் இந்தியாவின் மொபைல் உற்பத்தி நிறுவனம், கட்டுமானம் நிறுவனம், டெலிகாம் மற்றும் ஊடக நிறுவனங்கள் மற்றும் சில அரசு நிறுவனங்கள் போன்ற உள்நாட்டுத் தொழில்களை மையமாகக் கொண்டிருக்கும் நிறுவனங்களை நோக்கி நடத்தப்பட்டுள்ளது என்பதை சைஃபிர்மா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல், ஜூன் 18 ஆம் தேதிக்கு பின்னர் சைபர் தாக்குதல்களின் இரண்டாவது அலை மிகவும் வேறுபட்டதாகியுள்ளது.

கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!

அடுத்த தாக்குதல் இவர்களை நோக்கித் தான்

அடுத்த தாக்குதல் இவர்களை நோக்கித் தான்

சைபர் கிரிமினல்கள் தாக்குதல்களின் இரண்டாம் அலை முக்கிய நிறுவனங்களின் பக்கமிருந்து நகர்ந்து முக்கியமான பாதுகாப்பான தகவல்கள், முக்கிய தனிநபர் தகவல்கள், வாடிக்கையாளர் தகவல்கள் மற்றும் பாதுகாக்கப்பட அறிவுசார் டேட்டா விபரங்களை நோக்கி நகர்ந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில், சீனா ஹேக்கர்கள் பாக்கிஸ்தான் மற்றும் வாடா கொரிய ஹேக்கர்களின் உதவியுடன் அவர்களின் நாச வேலைகளைத் துவங்கியுள்ளனர்.

சீன ஹேக்கர்கள் நேரடியாக தாக்குதல்

சீன ஹேக்கர்கள் நேரடியாக தாக்குதல்

இப்பொழுது நிகழும் இரண்டாம் கட்டத்தில் சீனாவின் இராணுவத்துடன் கைகோர்த்து சீன ஹேக்கர்கள் நேரடியாகவே இந்த சைபர் தாக்குதல்களில் களமிறங்கியுள்ளனர் என்று சைபர் உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது. இதற்கு முன்பும் சீன ஹேக்கர்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், இந்த முறை எதிர்பார்த்திடாத விதத்தில் முரட்டுத்தனமான சைபர் தாக்குதலைப் பாதுகாக்கப்பட்டத் தகவல்களை நோக்கி நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Cyber Attacks On India Got Increased After The Galwan Valley Clash Between India And China : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X