சனிப்பெயர்ச்சி தொடங்குதோ? மஸ்க்கிற்கு நேரம் சரியில்ல! சைபர் தாக்குதலில் Twitter.. பயனர்களே உஷார்!

|

சைபர் குற்றவாளிகள் ட்விட்டரில் ப்ளூடிக் பயனர்களை குறிவைத்து ஃபிஷிங் இணைப்புகள் அனுப்புவதாகவும் இதன்மூலம் பயனர்களின் மொபைல் எண் மற்றும் அவரது ட்விட்டர் கணக்குடன் தொடர்புடைய பிற விவரங்களைத் திருடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதிரடி நடவடிக்கையில் எலான் மஸ்க்

அதிரடி நடவடிக்கையில் எலான் மஸ்க்

ட்விட்டரை கைப்பற்றிய உடன் எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களை பணி நீக்கம் செய்வதோடு, இனி ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருக்கும் பயனர்கள் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க், பயனர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாதத்திற்கு $8 சுமார் ரூ.661 கட்டணம் செலுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த அறிவிப்பால் திகைத்து நிற்கும் ட்விட்டர் பயனர்கள்

அடுத்தடுத்த அறிவிப்பால் திகைத்து நிற்கும் ட்விட்டர் பயனர்கள்

இந்த அறிவிப்பை கேட்டதும் சில பயனர்கள் மாற்றுத் தளத்தை தேடி வருவதாக தகவல் வெளியாகி வரும் நேரத்தில் மற்றொரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. இணைய குற்றவாளிகள் வெரிஃபைட் ட்விட்டர் பயனர்களை குறிவைத்து ஃபிஷிங் இணைப்புகள் அனுப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இணைப்புகள் ஆனது தொலைபேசி எண் மற்றும் அவரது ட்விட்டர் கணக்குடன் தொடர்புடைய பிற விவரங்களைத் திருடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

ப்ளூ டிக் வைத்திருப்பதற்கு கட்டணம்

ப்ளூ டிக் வைத்திருப்பதற்கு கட்டணம்

TechCrunch இல் வெளியான தகவலின்படி, புதிய ஃபிஷங் இணைப்புகள் ட்விட்டர் உதவித் தளம் எனக் கூறி பயனர்களை ஏமாற்றி அவர்களது யூஸர் ஐடி, பாஸ்வேர்ட் மற்றும் போன் நம்பரை உள்ளிடும்படி கேட்கிறது. இந்த இணைப்பானது சூழ்நிலையை சாதமாகக் கொண்டு செயல்படுகிறது. அதாவது இந்த இணைப்பானது சரிபார்ப்பு பேட்ஜ்க்கு (ப்ளூ டிக்) வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும், இந்த லிங்கை கிளிக் செய்து தகவலை பூர்த்தி செய்யும்படி கேட்கப்படுகிறது.

ஃபிஷிங் இணைப்புகள்

ஃபிஷிங் இணைப்புகள்

இந்த ஃபிஷிங் இணைப்புகளானது பெரும்பாலும் மெயில்கள் மூலம் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற மெயில்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பேம் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்..

ஸ்பேம் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்..

இந்த மெயிலில் உள்ள provide information என்ற தேர்வை கிளிக் செய்யும்படி கேட்கப்படுகிறது. சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த லிங்க்-ஐ கிளிக் செய்த உடன் சரிபார்க்கப்பட்ட Twitter கணக்குடன் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் உள்ளிடுமாறு கேட்கப்படுகிறார்கள். இத்தகைய ஸ்பேம் இணைப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயனர்கள் இழப்புக்கான சாத்தியக்கூறுகள்

பயனர்கள் இழப்புக்கான சாத்தியக்கூறுகள்

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ப்ளூ டிக் வைத்திருக்க மாதம் ரூ.661 செலுத்த வேண்டும் என மஸ்க் தெரிவித்திருக்கிறார். இதில் அதிருப்தி அடைந்த பயனர்கள் குழப்பத்தில் இருக்கும் நேரத்தில் தற்போது ஃபிஷிங் தாக்குதல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ட்விட்டரை மஸ்க் அதிகத் தொகைக்கு வாங்கி இருக்கும் இந்த நேரத்தில் பயனர்கள் இழப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் நடந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஆரோக்கியமான முறையில் விவாதம்

ஆரோக்கியமான முறையில் விவாதம்

மஸ்க் ட்விட்டரை முறையாக கையகப்படுத்தி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. இந்த நிலையில் இதுபோன்ற தகவல் ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நியோரோ லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆன மஸ்க், திடீரென ட்விட்டரை வாங்க காரணம் என்ன என்று கேள்வி வரலாம். ட்விட்டரை வாங்கியதற்கான காரணத்தை மஸ்க்கே தெரிவித்தார். அதில், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளம் தற்போது முக்கியம், அதில் பலவிதமான நம்பிக்கைகள் ஆரோக்கியமான முறையில் விவாதிக்கப்படும் என மஸ்க் கூறினார்.

ட்விட்டர் ப்ளூ சேவைக்கு முக்கியத்துவம்

ட்விட்டர் ப்ளூ சேவைக்கு முக்கியத்துவம்

மஸ்க் தலைமையில் செயல்படும் ட்விட்டர் இனி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இது அனைவருக்கும் இலவசம் தளமாக இருக்கப்போவதில்லை என்றும் ஆனால் பயனர்கள் உங்கள் விருப்பப்படி விரும்பிய அனுபவத்தை தேர்வு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படும் என மஸ்க் குறிப்பிட்டார். தற்போதே ட்விட்டரில் கட்டண சந்தா உறுப்பினர்கள் சேவை ஒருசில நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அது ட்விட்டர் ப்ளூ என அழைக்கப்படுகிறது. இனி இந்த சேவைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து நாடுகளிலும் விரைவில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Cyber Attackers Targeting Verified Twitter Users to theft Phone Number and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X