தேசிய தகவல் மையத்தில் சைபர் அட்டாக்! நாச வேலைக்கு பின்னனியில் யார் இருக்கிறார்கள்?

|

இந்தியாவின் தேசிய தகவல் மையத்தில் (NIC) மிகப்பெரிய இணைய வழி தாக்குதல் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. பிரதமர், NSA உள்ளிட்ட தேசிய நலன் தொடர்பான தகவல்கள் கொண்ட கணினிகள் குறிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாச வேலையை யார் செய்தார்கள், இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை போலீசார் கணித்துவிட்டனர்.

தேசிய தகவல் மையத்தில் சைபர் தாக்குதல்

தேசிய தகவல் மையத்தில் சைபர் தாக்குதல்

தேசிய தகவல் மையத்தில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த எதிர்பாராத சைபர் தாக்குதலின் போது தேசிய தகவல் மையத்தில் உள்ள பல கணினிகள் குறிவைக்கப்பட்டுள்ளது என்றும், அதில் உள்ள சில முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாச வேலையின் பின்னணியில் யார்?

நாச வேலையின் பின்னணியில் யார்?

பிரதமர், NSA உள்ளிட்ட தேசிய நலன் தொடர்பான தகவல்கள் கொண்ட கணினிகள் குறிவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இணைய வழி தாக்குதல் மிகவும் மோசமான தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், இந்த நாச வேலையின் பின்னணியில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இந்த நிறுவனம் அமெரிக்காவுடன் தொடர்பில் இருப்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.

போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!

மின்னஞ்சல் மூலம் தாக்குதல்

மின்னஞ்சல் மூலம் தாக்குதல்

தேசிய தகவல் மையத்தில் நடைபெற்ற இந்த சைபர் தாக்குதல், மின்னஞ்சல் வழி தாக்குதல் மூலம் நடத்தப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் NIC இல் உள்ள கணினிகளுக்கு மால்வேர் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சலில் வந்த லிங்க்-ஐ கிளிக் செய்ததும் மால்வேர் ஆக்டிவேட் ஆகிவிடும். இப்படி தான் தேசிய தகவல் மையத்தில் உள்ள கணினிகள் தாக்கப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறையின் தகவல் தெரிவிக்கிறது.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

தேசிய தகவல் மையத்தின் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் இந்த தாக்குதல் தொடர்பாகத் தீவிரமாக விசாரணை செய்தபோது, தாக்குதல் நடத்தப்பட்ட IP முகவரி பெங்களூரு நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது. போலீஸ் விசாரணையில் இந்த நிறுவன அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இப்பொழுது கூடுதல் விசாரணையை போலீசார் துவங்கியுள்ளனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
Cyber Attack at National Information Center Who Is Behind The Sabotage : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X