'இன்ஸ்டாகிராம'த்து செல்ல பிள்ளைகள் - ஒரு க்யூட் லிஸ்ட்..!
ரஜினி, கமல், அஜித், விக்ரம், விஜய் என நீங்கள் யார் ரசிகர்களாக இருந்தாலும் சரி, ஃபேஸ்புக், ட்விட்டர்ல நீங்க யாரை 'ஃபாலோ' செய்தாலும் சரி, 'இன்ஸ்டாகிராம்' என்று வந்து விட்டால் இவங்க ராஜ்ஜியம் தான்..! "அவ்வ்வ்.." "செம்ம க்யூட்" என்று ரசித்து முத்தம் கொடுக்காமல் இருக்கவே முடியாது..!
நம்மள விட பெரிய வித்தைக்காரனா இருப்பான் போல !
போட்டோ மற்றும் வீடியோக்களை மட்டுமே 'ஷேர்' செய்யும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட செல்லப் பிராணிகளின் பட்டியலை தான் நாம் இங்கே பார்க்க இருக்கின்றோம். "க்யூட்" சொல்ல ரெடியா..?! அப்போ வாங்க..!

14. ரிலை :
வெள்ளை நிறத்தில் இருக்கும் சிவப்பு நரி இனத்தை சேர்ந்த நரிக்குட்டி..! பின்க் மூக்கு இன்னும் க்யூட்..!

13. ஸ்னூப்பி பேபி :
எக்ஸோடிக் ஷார்ட்ஹேர் பூனை இனத்தை சேர்ந்தது..! இவன் தான் தற்போதைய இன்ஸ்டாகிராம் பரபரப்பு..!

12. நிகு :
பக் நாய் வகையை சேர்ந்த இந்த அழகு குட்டிமா ஜப்பானை சேர்ந்தவள்..!

11. சாம் :
டர்க்கீஷ் வேன் இனத்தை சேர்ந்த பூனை..! புருவம் இருக்குற ஒரே பூனை இது தானோ.!?

10. பணக்கார நாய்கள் :
இந்த அக்கவுண்ட், பணக்கார நாய்களின் புகைப்படங்களை மட்டுமே போஸ்ட் செய்யுமாம், இதில் சூப்பர் நாய்களுக்கு பஞ்சமே இல்லை...!

09. டிக்பை மற்றும் அலாய்சியஸ் வேன் வின்க்கில் :
300,000 இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் கொண்ட ப்ருசெல்ஸ் கிரிஃப்பான்ஸ் நாய் வகையை சேர்ந்த க்யூட்டிகள்..!

08. சோப்பட் :
சையாமிஸ் பூனை இனத்தை சேர்ந்தது. இவளை பராமரிக்க, பார்த்துக் கொள்ள, படம் எடுக்க என்று தனியாக வேலை ஆட்களே உண்டாம்..!

07. லில் பப் :
அறிய வகை நோயினால் பாதிப்புக்கு உள்ளான இவளுக்கு இயற்கைக்கு மாறாக 4 கால் விரல்கள் அதிகம் இருக்கிறதாம். இவள் இறுதிவரை வெறும் 4 பவுண்ட் எடை மட்டுமே இருப்பாளாம்..!

06. ப்பூப்பூ :
இதுதான் உலகிலேயே மிகவும் 'க்யூட்'டான பன்றிக்குட்டி எனலாம். க்வினா பன்றி வகையை சேர்ந்தது, 2 வயதாகும் இதன் எடை 1 கிலோ மட்டுமே..!

05. பேபி அனிமல்ஸ் :
புதிதாக பிறந்த அத்துணை குட்டிக்குட்டி விலங்குகளின் படங்களும் இந்த அக்கவுண்ட்டில் போஸ்ட் ஆகிக் கொண்டே இருக்குமாம்..!

04. ஹாமில்டன் தி ஹிஸ்ப்பர் கேட் :
210,000 இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் கொண்ட இந்த பூனை, தன் மீசைக்கு பெயர் போனது. இது ஒரு மீட்கப்பட்ட பூனை என்பது குறிப்பிடத்தக்கது..!

03. யோகர்ட் :
116,000 இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் கொண்ட 'சிவூஹாவூஹா' நாய் இனத்தை சேர்ந்த இதன் வயது எட்டு..! பிறவிலியே ஒரு கண் இன்றி பிறந்த இதன் நாக்கு எப்போதும் வெளியே தான் நீட்டிக் கொண்டு இருக்குமாம்..!

02. ஜிம்மி ச்சூ :
புல் டெரியர் இனத்தை சேர்ந்த இது, ஒரு கலைஞனின் நாய் என்பது சொல்லாமலே புரியும்..!

01. டுனா :
1.3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் கொண்ட வித்தியாசமான கலப்பில் பிறந்த நாய்க் குட்டி..!


Click it and Unblock the Notifications