இனி கேபிள் டிவி எதுக்கு.. 350 TV சேனல், 20 OTT, 3.3TB டேட்டாவை இறக்கிய Airtel.. மிட்டலின் மிரட்டல் பிளான்!
கிட்டத்தட்ட அனைவருமே ரீசார்ஜ் செய்யும் விலைக்கு 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், 20 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான அணுகல், 3.3டிபி டேட்டா போன்ற நன்மைகளை வழங்கினால்.. "இனிமேல் கேபிள் டிவி கனெக்ஷன் (Cable TV Connection) எதற்கு?" என்று யாருக்குத்தான் தோன்றாது. அப்படியான ஒரு திட்டம் ஏர்டெல் (Airtel) நிறுவனத்திடம் உள்ளது. அதென்ன திட்டம்? இதேபோலஏர்டெல்லிடம் வேறு என்னென்ன திட்டங்கள் உள்ளன? இதோ விவரங்கள்:
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு ஆப்ரேட்டரான பார்தி ஏர்டெல், தனது பிராட்பேண்ட் சேவையின் கீழ் டிவி நன்மைகளையும் வழங்குகிறது. இந்த பிரிவில் மிகவும் மலிவான திட்டமென்றால் அது ரூ.599 மதிப்புள்ள ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான் (Airtel Xstream Fiber Broadband Plan) தான்.

சுவாரசியமாக, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் மொத்தம் 3 பிராட்பேண்ட் திட்டங்கள் ரூ.1000 க்குள் (Airtel Xstream Fiber Broadband Plans Under Rs 1000) என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. மேலும் இவைகள் அனைத்துமே டிவி நன்மைகளுடன், ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களையும் வழங்குகின்றன, முதலில் மாதத்திற்கு ரூ.599 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டத்தின் நன்மைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.599 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் (Airtel Rs 599 Broadband Plan Benefits): இந்த திட்டம் 30 எம்பிபிஎஸ் ஸ்பீட் உடன் வருகிறது. இதன் கீழ் உங்களுக்கு 3.3டிபி அளவிலான டேட்டா கிடைக்கும். ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) உட்பட 20 க்கும் மேற்பட்ட ஓடிடி பிளாட்ஃபார்ம்களுடன் வருகிறது.
டிவி நன்மைகளை பொறுத்தவரை ரூ.599 திட்டமானது 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை (இதில் எச்டி சேனலக்ளும் அடக்கம்) வழங்குகிறது. இந்த திட்டத்தை 3 மாத திட்டமாக (3 Months Plam) அதாவது காலாண்டு திட்டமாக (Quaterly Plan) நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு வைஃபை ரூட்டர் (Free Wi-Fi router) மற்றும் இலவச இன்ஸ்டாலேஷன் (Free installation) போன்ற நன்மைகளும் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.699 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் (Airtel Rs 699 Broadband Plan Benefits): இது 40 எம்பிபிஎஸ் ஸ்பீட் உடன் வருகிறது. இதன் கீழும் 3.3டிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இதுவும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே உட்பட 20க்கும் மேற்பட்ட ஓடிடிகளுடன் வருகிறது. ரூ.599 திட்டத்தை போலவே ரூ.699 திடமானதும் 350க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை (இதில் எச்டி சேனலக்ளும் அடக்கம்) வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.899 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் (Airtel Rs 899 Broadband Plan Benefits): இது 100 எம்பிபிஎஸ் ஸ்பீட் உடன் வரும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமாகும். இதன் கீழும் 3.3டிபி அளவிலான டேட்டா கிடைக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே உட்பட 20க்கும் மேற்பட்ட ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் கிடைக்கும், 350க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் அணுக கிடைக்கும்
மேற்கண்ட 3 திட்டங்களுடனும் பொருந்தக்கூடிய வரிகளை நாங்கள் சேர்க்காததால், நீங்கள் அவைகளை ரீசார்ஜ் செய்யும் போது, அவைகளின் விலைகளில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் கிடைக்கும் ரூ.599, ரூ.699 மற்றும் ரூ.899 பிளான்களின் இறுதி விலையுடன் (Final Price) குழப்பம் அடைய வேண்டாம்.


Click it and Unblock the Notifications








