நீங்கள் இல்லையேல் Ctrl + C மற்றும் Ctrl + V இல்லை.! லாரி டெஸ்லர் காலமானர்.!

|

கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் எவரும் கண்ட்ரோல் சி (Ctrl+C) மற்றும் கண்ட்ரோல் வி (Ctrl+V) ஆகிய திறவுச் சொல்-ஐ பயன்டுத்தாமல் இருக்கே வாய்ப்பே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

மென்பொருள் பொறியாளர்

மென்பொருள் பொறியாளர்

குறிப்பாக கணினியைப் பயன்படுத்தம் அனைவரும் இந்தத இரண்டு விசைகளையும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அதன்படி இந்த அற்புதமான இரண்டு விசைகளையும் கண்டுபிடித்த மென்பொருள் பொறியாளர் லாரி டெஸ்லர் என்பவர் தனது 72வயதில் காலமானார்.

1960-ம் ஆண்டு

1960-ம் ஆண்டு

மேலும் அமெரிக்காவை சேர்ந்த இவர், உலகின் பல அருமையான மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கணடுபிடிப்புகளை வெளிகொண்டுவந்துள்ளார். லாரி டெஸ்லர் 1960-ம் ஆண்டு அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் கணினி பொறியாளராக பணியாற்றத் துவங்கினார்.

TRAI அதிரடி: இனி 'இந்த' சேவைக்கு கட்டணமும் இல்லை-வரம்பும் இல்லை; முற்றிலும் இலவசம் தான்!TRAI அதிரடி: இனி 'இந்த' சேவைக்கு கட்டணமும் இல்லை-வரம்பும் இல்லை; முற்றிலும் இலவசம் தான்!

 தனது வேலை

பின்பு இவர் தனது வேலையை மிகவும் எளிமைப்படுத்த, கணிணியில் Ctrl + C மற்றும் Ctrl + V கட்டளைகளைக் கண்டுபிடித்தார். இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்றுதான்கூறவேண்டும்.

 ஜெராக்ஸ் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது

ஜெராக்ஸ் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது

லாரி டெஸ்லர் ஜெராக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சமயத்தில், தனது வேலையை செய்ய நிறைய நேரம் செலவிடப்பட வேண்டி இருந்தது, எனவே தான் தனது வேலையை எளிமையாக்க Ctrl + C மற்றும் Ctrl + V கட்டளைகளைக் கண்டுபிடித்தார். இப்போது லாரி டெஸ்லரின் மரணம் குறித்து ஜெராக்ஸ் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்ந நிறுவனம் அவரது கண்டுபிடிப்பை ட்வீட் செய்து பாராட்டியுள்ளது.

Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்

 ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்

லாரி டெஸ்லர் 1945-ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்தார், பின்பு கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்ததும்,கணினி பயன்பாட்டை எளிதாக்குவது, கணினி இடைமுக வடிவமைப்பில் லாரி நிபுணத்துவம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார்

ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார்

குறிப்பாக இவர் ஜெராக்ஸ் பாலோ ஆல்டோ ஆராய்ச்சி மையத்தில் (Parc) கணிசமான காலத்தை செலவிட்ட பிறகு ஸ்டீவ் ஜாப்ஸின் அழைப்பின் பேரில் அவர் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு சுமார் 17ஆண்டுகள் தலைமை
ஆராய்சியாளராக இருந்தார். பின்பு ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியே வந்த பிறகு கல்வித்துறையில் சேர்ந்தார்,அதன்பிறகு அமேசான் மற்றும் யாகூ நிறுவனங்களுக்கு சில நாட்கள் வேலை செய்தார் இந்த அற்புதமான மனிதர்.

Best Mobiles in India

English summary
Cut, Copy, Paste, scientist Passed Away : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X