Home
News

UPI சேவையில் இறங்கிய Curie Money.. பேங்க் அக்கவுண்ட்ல பேலன்ஸ் இல்லனாலும் கூட டெய்லி ரூ.50,000.. அதெப்படி?

ஃபின்டெக் தளமான கியூரி மணி (Curie Money) நாடு முழுவதுமாக அதன் யுபிஐ (UPI) சேவையை இயக்குவதற்கான இறுதி ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface) சேவையை இயக்குவதற்கான இந்த என்பிசிஐ (NPCI) என்கிற தேசிய கட்டணக் கழகம் (National Payments Corporation of India) கொடுத்துள்ளது

கியூரி மணி யுபிஐ சேவையானது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டகளில் சேமிக்கப்பட்ட பேலன்ஸ்களிலிருந்து நேரடியாக யுபிஐ பேமண்ட்களை உதவுகிறது. இந்த தளம் இன்ஸ்டன்ட் ரிடெம்ப்ஷனை (instant redemption) எளிதாக்குகிறது. அதாவது பரிவர்த்தனையின் போது - வழக்கமான பேங்க் அக்கவுண்ட் பேலன்சில் இருந்து அல்லாமல் முதலீடுகளிலிருந்து பெறுகிறது.

UPI சேவையில் Curie Money.. பேங்க் அக்கவுண்ட்ல பேலன்ஸ் இல்லனாலும் கூட?

இதன் மூலம் சியுஜி (CUG) என்கிற க்ளோஸ்டு யூசர் க்ரூப் பீட்டா கட்டத்தில் (Closed User Group beta phase) இருந்து கியூரி மணி வெளியேறுகிறது. கியூரி மணியின் இந்த யுபிஐ சேவை ஆனது இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இல் உள்ள அனைத்து பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது.

தற்போது வரையிலாக கியூரி மணி யுபிஐ சேவையானது யெஸ் பேங்க் (YES Bank) மற்றும் ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் (ICICI Prudential Mutual Fund) மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஏஎம்சி (Bajaj Finserv AMC) உள்ளிட்ட சொத்து மேலாண்மை நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள் மூலம் செயல்படுகிறது.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சி உடனான ஒரு கூட்டணி மூலம், கியூரி பயனர்கள் தங்கள் முதலீடு செய்யப்பட்ட தொகையில் 90% வரை - ஒரு நாளைக்கு ரூ.50,000 என அதிகபட்சமாக - பணம் செலுத்துவதற்கு சில நொடிகளுக்குள் அதை மீட்டெடுக்க அனுமதிக்கிறது.

தற்போது, ​​இந்த தளம் செபி (SEBI) என்கிற இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் (Securities and Exchange Board of India) ஒழுங்குபடுத்தப்பட்ட லிக்விட் ஃபண்ட்களின் கீழ் முதலீடு செய்யப்பட்ட பேலன்ஸ்களுக்கு 6.7% சிஏஜிஆர் (CAGR) வரை வருமானத்தை வழங்குகிறது.

இது செயலற்ற வாலட் அல்லது சேவிங்ஸ் அக்கவுண்ட் பேலன்ஸ்களுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படலாம் என்றும் இதன் மூலம் வருமானம் மாறுபடலாம் என்றும், மீட்பதற்கு வரிவிதிப்பு அல்லது சந்தை தொடர்பான அபாயங்கள் இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்

கியூரி மணி ஆனது கடந்த டிசம்பர் 2024 இல் இந்தியா கோஷண்ட் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை திரட்டிய ஒரு வருடத்திற்குப் பிறகு, இந்நிறுவனம் யுபிஐ சேவைக்குள் வர என்பிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உள்கட்டமைப்பை அளவிடுவதற்கும் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கும் மூலதனம் பயன்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியூரி அரிந்தம் கோஷ் மற்றும் துஷார் சவுத்ரி ஆகியோரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் என்பிஐசி-யின் யுபிஐ அங்கீகாரத்தை மட்டுமின்றி, இந்தியாவில் பரஸ்பர நிதிகள் சங்கத்தின் (Association of Mutual Funds in India - AMFI) பரஸ்பர நிதி விநியோக உரிமத்தையும் கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை பள்ளி சேர்க்கை மற்றும் பள்ளி தேர்வு கட்டணங்களை வசூலிப்பதற்கு, யுபிஐ (UPI) சேவையை ஏற்றுக்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளை மத்திய கல்வி அமைச்சகம் (Union Education Ministry) வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து - மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் என்சிஇஆர்டி (NCERT), சிபிஎஸ்இ (CBSE), கேவிஎஸ் (KVS) மற்றும் என்விஎஸ் (NVS) போன்ற தன்னாட்சி அமைப்புகளுக்கு கடிதமும் அனுப்பட்டுள்ளது. நிர்வாக செயல்முறைகளை நவீனமயமாக்குவதையும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் வசதியை மேம்படுத்துவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Curie Money got approval For UPI Service Now Users Can Do Payments Directly From Mutual Fund balance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X