5 நாளுக்கு மேல் பேட்டரி ஆயுள்.. அதிபயங்கரமான பேட்டரி சக்தி.. இடியே விழுந்தாலும் எதுவும் ஆகாத போன் இது மட்டுமே.
மாஸ் காட்டிய புது ரஃடு ஸ்மார்ட்போன். 'பவர்புல் பீப்பிள் கம் ஃபிரம் பவர்புல் பிளேஸ்' என்ற வாக்கியத்தை இந்தியர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அப்படி, மிகவும் பவர்புல் ஆன இடத்தில் இருந்து, ஒரு சூப்பர் பவர்புல் ஸ்மார்ட்போன் சாதனத்தை குபோட் (Cubot) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
குபோட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கும் ஒரு அதிபயங்கரமான மற்றும் அட்டகாசமான ஸ்மார்ட்போன் சாதனத்தை பற்றி தான் நாம் இங்கு பார்க்கவிருக்கிறோம். குபோட் நிறுவனம் அதன் சமீபத்திய முரட்டுத்தனமான ரஃடு மாடல் ஸ்மார்ட்போன் சாதனத்தை குபோட் கிங் காங் 8 (Cubot KingKong 8) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இது முரட்டுத்தமான போனாக இருப்பதோடு, அதிக வெளிச்சத்தை வழங்கும் டூயல் எல்இடி லைட்களுடன் வருகிறது.

இது சக்திவாய்ந்த வெளிச்சத்தை வழங்குகிறது. இந்த குபோட் கிங் காங் 8 ஸ்மார்ட்போனின் மற்றொரு முக்கிய அம்சமே, இது நீட்டிக்கப்பட்ட பெரிய சைஸ் பேட்டரி உடன் வருகிறது. இந்த போனில் இன்னும் பல ஈர்க்கக்கூடிய அம்சங்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம். புதிய Cubot KingKong 8 இன் அதிகபட்ச ஒளிர்வு திறன் 6,000 லுமன்ஸ் ஆகும்.
இந்த முரட்டுத்தமான ஸ்மார்ட்போனின் பேட்டரி பற்றி பேசுகையில், இது 10,600mAh திறன் உடன் வருகிறது. உண்மையை சொல்ல போனால், உங்களுக்கு பவர்பேங்க்கே தேவைப்படாது. இந்த ஸ்மார்ட்போன் 20 மிமீ தடிமன் மற்றும் 169.9 x 80.2 மிமீ அளவைக் கொண்டுள்ளது. இதன் எடை 0.382கிகி ஆகும். இந்த ரஃடு போனை ஸ்மூத் கில்லர் போனாக இயக்குவதற்கு, இதில் MT8788 சிப்செட் பயனப்டுத்தப்பட்டுள்ளது.
இந்த குபோட் கிங் காங் 8 ஸ்மார்ட்போன் மாடலில் நான்கு கார்டெக்ஸ் ஏ73 கோர்கள் மற்றும் நான்கு கார்டெக்ஸ் ஏ53 கோர்கள் உள்ளன. Cubit KingKong 8 ஆனது 6ஜிபி ரேம் திறன் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் போனில் கூடுதல் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் அம்சமும் உள்ளது. இதற்காக இந்த போனில் டூயல் சிம் ஸ்லாட் இடையே மெமரி கார்டு ஸ்லாட் விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது.
Cubot KingKong 8 ஒரு முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன் தான் என்றாலும், இது 4ஜி இல் மட்டுமே இயங்குகிறது. இதில் 5G திறன் இல்லை. இது 1612 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.53' இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில் 48MP பிரைமரி கேமரா மற்றும் 16MP முன்பக்க கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனின் GNSS தொகுதி GPS, GLONASS மற்றும் கலிலியோ செயல்பாட்டை ஆதரிக்கிறது. இது 2.4GHz மற்றும் 5.0GHz Wi-Fi நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறது.
Cubot KingKong 8 ஒரு முரட்டுத்தனமான ஸ்மார்ட்போனாக இருப்பதால், KingKong 8 ஆனது IP68 மற்றும் IP69K சான்றிதழ் பெற்றுள்ளது. இது NFC அம்சத்தையும் ஆதரிக்கிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இது மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Cubot KingKong 8 ஐ ஐரோப்பாவில் AliExpress வழியாக €235 (~$248) விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 20644.13 ஆகும். இந்த மாடல் ஜெர்மனிக்கு அனுப்பப்படும் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வெளிவருமா என்பது சந்தேகமே. இருப்பினும் அளிஎக்ச்பிரஸ் மூலம் ஆர்டர் செய்து 20 முதல் 30 நாட்களுக்குள் பார்ஸலை பெறலாம்.


Click it and Unblock the Notifications