Home
News

அடிதூள்.. தல தோனி செம கெத்து தான்.. RCB-MI அணிகளை பின்தள்ளிய CSK.. எதில் தெரியுமா?

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த ஐபிஎல் போட்டிகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த தொடரில் அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளாக ஆர்சிபி (RCB), சிஎஸ்கே (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் இருந்துவருகின்றன. குறிப்பாக இந்த மூன்று அணிகளில் எந்த அணிக்கு ரசிகர்கள் அதிகம் என்ற போட்டி இருந்து வருகிறது.

அடிதூள்.. RCB-MI அணிகளை பின்தள்ளிய CSK.. எதில் தெரியுமா?

குறிப்பாக இந்த மூன்று அணிகள் எப்போது ஐபிஎல் போட்டியில் மோதினாலும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக சொந்த அணிகளுக்கான ஆதரவை வழங்கிவருவது வழக்கம். அதேபோல் அண்மையில் ரோகித் சர்மா கேப்டன்சி மாற்றம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருந்த பல ரசிகர்கள் பின்தொடர்வதை நிறுத்தினர்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி பின் தங்கியதை அடுத்து ஆர்சிபி ரசிகர்கள் அதனை அதிகமாகப் பகிர்ந்து, அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அணி நாங்கள் தான் என்று செலப்ரேட் செய்துவருகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த அணிக்கு அதிக Followers இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

அடிதூள்.. RCB-MI அணிகளை பின்தள்ளிய CSK.. எதில் தெரியுமா?

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15மில்லியன் பின் தொடர்பவர்களைக் கடந்து, முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது சிஎஸ்கே அனி. குறிப்பாக இதற்கு முக்கிய காரணம் தோனியின் மீதான அன்பு மற்றும் வீரர்களை அதிகமாக ஆதரிக்கும் சிஎஸ்கே அணியின் பாசிட்வ் வைப்ரேசன் தான்.

இவர்களுக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்சிபி அணி இரண்டாவது இடத்திலும், 13.2 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்தில் நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

3 முறை ஐசிசி உலகக்கோப்பை மற்றும் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றவருமான கேப்டன் டோனி இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கிறார். இதனால் தான் இந்த சென்னை அணியை பின் தொடர்பவர்கள் அதிகமாக உள்ளனர். மேலும் சென்னை ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைக்கப்படும் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பாக இருந்துவருகிறார்.

அதேபோல் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி டெலி அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் சென்னை அணி தனது முதல் தோல்வியைத் தழுவியுள்ளது. நேற்று ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் நேற்று இரவு விசாகப்பட்டினம் மைதனத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. குறிப்பாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது டெல்லி அணி.

இதை தொடர்ந்து 192 ரன்களை சேசிங் செய்ய களம் இறங்கிய சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவிந்திரா வந்த வேகத்தில் வெளியேறினார். அதன்பின்பு வந்த ரஹானே-டேரில் மிட்செல் கூட்டணி நிதானமாக ஆடி அணியின் ஸ்க்கோரை உயர்த்தினார். ஆனாலும் மிட்செல் 43 ரன்களிலும், ரஹானே 45 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடிதூள்.. RCB-MI அணிகளை பின்தள்ளிய CSK.. எதில் தெரியுமா?

அதன்பின்பு களமிறங்கிய ரிஸ்வி வந்த வேகத்தில் அவுட் ஆனார். இருந்தபோதிலும் தோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. இறுதி ஓவர்களில் அதிரடி பேட்டிங் காட்டிய தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். ஆனாலும் இவரின் அதிரடி ஆட்டம் வெற்றிக்குக் கொண்டுசெல்லவில்லை. இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 171 ரன்கள் எடுத்து சென்னை அணி தோல்வியை தழுவியது.

இருந்தபோதிலும் ரசிகர்களுக்கு தோனியின் ஆட்டம் விருந்தாக அமைந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் தோனி அதிரடி பேட்டிங் செய்வதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
CSK is the first team with 15 million followers on Instagram: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X