என்னை தாண்டி தொட்றா பார்க்கலாம்: கிரிப்டோகரன்ஸியை பாதுகாக்கும் பிளாக் செயின்- கெத்து காட்டும் ஹேக்கர்கள்!

|

கிரிப்டோகரன்ஸிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பிளாக் செயின்கள் ஒரு காலக்கட்டத்தில் பாதுகாப்பில் ஒப்பிடமுடியா அம்சமாக இருந்ததோடு பலரின் பாராட்டுக்கும் உள்ளானது. ஆனால் அது தற்போது அப்படி இல்லை., இதுகுறித்த எம்ஐடி டெக்னாலஜி ரிவ்யூ அறிக்கையின்படி, ஹேக்கர்கள் 2017 முதல் சுமார் 2 பில்லியன் மதிப்புள்ள கிரிப்டோகரன்ஸிகளை திருட முடிந்ததாக கூறப்பட்டுள்ளது. பிளாக் செயின்களின் தனித்துவ பாதிப்புகளை குறிவைத்து ஹேக்கர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

பிளாக்செயினைவிட பாதுகாப்பு அம்சம் கிடையாது

பிளாக்செயினைவிட பாதுகாப்பு அம்சம் கிடையாது

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் கிரிப்டோகரன்ஸிக்கு பிளாக்செயினைவிட பாதுகாப்பு அம்சம் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் ஹேக்கர் ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் எத்தேரிய கிளாசிக் நெட்வொர்க் சிக்கியது. இதில் பரிவர்த்தனை வரலாறு மாற்றி எழுதி அமைக்கப்பட்டது. அதாவது சுமார் 1.1 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்ஸி முறைகேடு மேற்கொள்ளப்பட்டது.

51 சதவீத தாக்குதல்

51 சதவீத தாக்குதல்

பிளாக் செயின் தொழில்நுட்பத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் காரணிகளே பல தனிப்பட்ட பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த அம்சம் பாதுகாப்பானதாக கூறப்பட்டாலும் கிரிப்டோகரன்ஸிகள் பிற வங்கி அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முற்றிலுமாக சந்திக்கவில்லை என்பது இதில் கவனிக்கத்தக்க விஷயம் ஆகும்.

பயனர்கள் வர்த்தகம் செய்யும் கிரிப்டோகரன்ஸி

பயனர்கள் வர்த்தகம் செய்யும் கிரிப்டோகரன்ஸி

கிரிப்டோகரன்ஸிகளின் எல்லைச்சாமியாக இருப்பது பிளாக் செயின் ஆகும். பயனர்கள் வர்த்தகம் செய்யும் கிரிப்டோகரன்ஸிகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் இடம்தான் பிளாக் செயின். ஆனால் எத்தேரியம் நெட்வொர்க் ஹேக்கிங் பிறகு இதன் நம்பிக்கை மாறிவிட்டது. எம்ஐடி டெக் அறிவிப்பின்படி., ஹேக்கர்களை பயனர்களின் பணத்தை அனுப்ப அனுமதித்து பரிவர்த்தனை வரலாற்று மாற்றி எழுத வைத்தது. மேலும் இதுபோன்ற டிரிக்களின் 51 சதவீத தாக்குதல் என அழைக்கப்படுகிறது.

சிறிய மலிவு விலை நாணயங்கள்

சிறிய மலிவு விலை நாணயங்கள்

கிரிப்டோகரன்ஸிகள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கிறது. மேலும் சிறியவிலை நாணயங்கள், மலிவான நாணயங்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு மிகவும் பாதிக்கப்பட கூடியவையாகும். மேலும் சிறிய மலிவு விலை நாணயங்கள் மீது இதுபோன்ற 51 சதவீத தாக்குதல்களை காண முடிகிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சம்

கூடுதல் பாதுகாப்பு அம்சம்

பல தொடக்க கிரிப்டோகரன்ஸி நிறுவனங்கள் பிளாக்செயின்களை முன்னெப்போதையும்விட பாதுகாப்பானதாகவும், ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பாகவும் இருப்பதாக கூறுகின்றன. அதேபோல் சிலர் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளை கண்டறிய ஏஐ பயன்முறை பயன்படுத்துகின்றனர். பிளாக் செயின் தொழில்நுட்பமானது மிகவும் பாதுகாப்பான சிக்கலான வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கிரிப்டோகரன்ஸி பயன்பாடு

அதிகரித்து வரும் கிரிப்டோகரன்ஸி பயன்பாடு

கிரிப்டோகரன்ஸிகள் அனைத்து சமயத்திலும் உயர்ந்து வருகிறது. இது காலம் செல்லசெல்ல மிகவும் பிரபலமடைந்து வருகிறது. மேலும் இது எதிர்காலத்தில் பொருளாதார கணப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிட்காயின், எத்தேரியம் மற்றும் சமீபத்தில் பிரபலமடைந்து டாக்கி காயின் ஆகியவைகள் பட்டியலை அதிகரிக்கச் செய்கின்றன.

இணையம் சார்ந்த பண பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சேர்ந்தது பிட்காயின். வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு எதிராக இருப்பவை இந்த பரிவர்த்தனை. இந்தியாவில் பல இடங்களில் பிட்காயின் பெயர் எதிரொலிப்பது வழக்கம். காரணம் பிட்காயின் மதிப்பு குறுகிய காலத்தில் அதிகளவு அதிகரித்து வருகிறது.

பிட்காயின் பரிவர்த்தனை

பிட்காயின் பரிவர்த்தனை

முன்னதாக பிட்காயின் கொண்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடாது என வங்கிகளுக்கும் அறிவுறுத்தியும் மக்களும் பிட்காயின் வணிகத்தில் ஈடுபடக் கூடாது எனவும் ரிசர்வ் பேங்க் கூறியிருந்தது. இதையடுத்து இந்தியாவில் பிட்காயின் குறித்து பெரிய விவாதம் ஏதும் இல்லாமல் இருந்தது.

ஆனால் பிட்காயின் குறித்து இதுவரை எந்தவொரு சட்டமும் கொண்டுவரப்படவில்லை என்பதால் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது கிர்ப்டோகரன்சி தொடர்பான எந்தவொரு சட்டமும் இந்தியாவில் இல்லாத நிலையில், அதை ரிசர்வ் வங்கியால் தடைசெய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது.

பல வணிக வளாகங்கள்

பல வணிக வளாகங்கள்

உலகளாவிய பணம் செலுத்தும் முறைமையாக பிட்காயின் இருக்கிறது. உலகளவில் பல வணிக வளாகங்கள் மற்றும் இடங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை விரும்பிய நாட்டில் பணமாக மாற்றலாம். பிட்காயின் பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும் பிளாக்செயின் முறையில் பாதுகாக்கப்படுகிறது.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், கிரிப்டோகரன்சிகளை தனது நிறுவன கார்களுக்கு கட்டண வடிவமாக ஏற்றுக் கொள்ள தொடங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின். விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த ஓராண்டில் 11,853.75% வளர்ச்சியடைந்திருக்கிறது. தற்போது பிட்காயினுடன் போட்டிபோடும் அளவிற்கு டோஜ்காயின் பிரபலமடைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தட்டிவிட்ட டுவிட்தான். இதனிடையே, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பிட்காயின் அதிகளவில் மின்சாரம் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, டெஸ்லா கார்கள் வாங்குவதற்கான பிட்காயின் பேமெண்ட்டை நிறுத்தினார். ஒருபுறம் பிட்காயினை கழட்டிவிட்ட எலான் மஸ்க், மற்றொரு புறம் டோஜ்காயினை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் டோஜின் தந்தை நான் என்று அறிவித்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
CryptoCurrency BlockChains are Gettind Hacked: Unique Vulnerabilities of Blockchains

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X