பெண்களுக்கான பெஸ்ட் ஸ்மார்ட்வாட்ச்.. 7 நாள் பேட்டரி.. தரமான டிஸ்பிளே.. கம்மி விலையில் என்ன மாடல்?
ஸ்மார்ட்வாட்ச் (smartwatch) என்றாலே அது இரு பாலினருக்கும் பொதுவாக சேரும் படியான வடிவமைப்புடன் தான் பெரும்பாலும் வருகிறது. இதில் பெரும்பாலான டிசைன்கள் ஆண்களுக்கு ஏற்றது போல் வருகிறது. பெண்களுக்கென்று ஒரு தனித்த டிசைன் கொண்ட வாட்ச்கள் இங்கு அதிகமாக இல்லை.
ஆனால், இனி நிலைமை அப்படி இல்லை. ஏனெனில் கிராஸ்பீட்ஸ் நிறுவனம் இப்போது புதிதாக ஒரு, ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது முற்றிலும் பெண்களுக்கானது. இதன் வடிவமைப்பு பிரத்தியேகமாக பெண்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் கிராஸ்பீட்ஸ், கிராஸ்பீட்ஸ் திவா (Crossbeats Diva) எனப்படும் பெண்களுக்கான புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மெட்டாலிக் கட்டமைப்புடன் அழகான வடிவமைப்புடன் வருகிறது. இந்த புதிய கிராஸ்பீட்ஸ் திவா சிறப்பம்சத்தை பற்றி பார்க்கலாமா? கிராஸ்பீட்ஸ் திவா ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இது 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் 1.28' இன்ச் உடன் இயங்கும் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கால்குலேட்டர்கள், சிட்டிங் நோட்டிபிகேஷன், ஸ்டாப்வாட்ச், வெதர் ரிப்போர்ட் அப்டேட், பைண்ட் மை போன் அம்சத்துடன் வருகிறது.
மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல், போன்ற பல்வேறு செயல்பாடுகள் இதில் அடங்கும். புளூடூத் 5.3 ஆதரவுடன், இது உங்கள் சாதனத்திற்கு நிலையான மற்றும் குறைந்த தாமத இணைப்பை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஹார்ட் ரேட் மானிட்டர், SpO2, ஸ்லீப் மானிட்டர், பிளட் பிரஷர் ஆகியவற்றிற்கான சுகாதார கண்காணிப்பையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கல் பதிக்கப்பட்ட வடிவமைப்பு பாணியின் தொடுதலை சேர்க்கிறது.
இது 100-க்கும் மேற்பட்ட தனிப்பயனாக்கக்கூடிய வாட்ச் பேஸ்களுடன் வருகிறது. இது சுழலும் கிரௌன் உடன் கொண்டுள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. இது IP67 மதிப்பிடப்பட்டுள்ளது. பிட்கிளவுட் ப்ரோ (FitCloud Pro) பயன்பாட்டைப் பயன்படுத்துகிறது. இது 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள் மற்றும் புளூடூத் அழைப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது. இது உங்கள் ஸ்மார்ட்வாட்சிலிருந்து நேரடியாக பதிலளிக்கவும் அழைப்புகளைச் செய்யவும் உங்களை அனுமதிக்கிறது.
Crossbeats Diva ஸ்மார்ட்வாட்ச் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி பார்க்கையில், இதன் விலை ரூ. 3499 என்ற புள்ளியில் வருகிறது. இந்த புதிய கிராஸ்பீட்ஸ் திவா ஸ்மார்ட்வாட்ச் ரோஸ் கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் Amazon.in மற்றும் Crossbeats இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கிறது. அதேபோல், Crossbeats இந்தியாவில் ChatGPT-இயங்கும் Crossbeats Nexus ஸ்மார்ட்வாட்சையும் வெளியிட்டது.
ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இப்போது இந்தியாவில் மிக முக்கியமான சாதனமாக மாறியுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தை போல, ஸ்மார்ட் வாட்ச்களுக்கான சந்தை இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. உங்கள் மனைவிக்கு அல்லது உங்கள் காதலிக்கு அல்லது உங்கள் தாய், தங்கை, அக்கா போன்ற உங்கள் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை பிடித்த பெண்களுக்கு இந்த ஸ்மார்ட்வாட்சை கிஃப்ட் ஆக வழங்கலாம்.
ரூ.3000 விலை புள்ளியில் 7 நாள் நீடித்து நிலைக்கும் பேட்டரி, ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே, பிரகாசமான பிரைட்னஸ், ப்ளூடூத் கால்லிங், 100-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ், 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட், கால்குலேட்டர், கேமரா கண்ட்ரோலர், என்று பல அம்சங்களை அடக்கிய பெஸ்ட் டிசைன் ஸ்மார்ட் வாட்ச் ஆக இந்த புதிய Crossbeats Diva சாதனம் வெளிவந்துள்ளது. காலம் தாமதிக்காமல் உடனே இதை ஆர்டர் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications