கலக்குறே Croma.. மார்ச் 8 வரை Everything Apple Sale.. iPhone, மேக்புக், ஐபேட், வாட்ச் மீது அடேங்கப்பா ஆபர்!
டாடா (Tata) நிறுவனத்திற்கு சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் ரீடெயில் விற்பனையாளர் ஆன குரோமா (Croma) நிறுவனமானது, எவ்ரிதிங் ஆப்பிள் சேல் (Everything Apple Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஏற்கனவே நேரலையில் உள்ள விற்பனையோ 2026 மார்ச் 8 ஆம் தேதி வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
இதன் கீழ் ஐபோன்கள் முதல் மேக்புக் மாடல்கள் வரை பல வகையான ஆப்பிள் தயாரிப்புகளின் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடியில் கிடைக்கிறது குறிப்பாக எச்டிஎப்சி டாடா நியூ (HDFC TATA Neu) கார்டு வைத்து இருப்பவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியும் கிடைக்கும்.

எவ்ரிதிங் ஆப்பிள் விற்பனையின் ஒரு பகுதியாக, ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஐபோன் 16 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனை நல்ல ஆபர் வலையில் வாங்க முடியும் என்று குரோமா கூறுகிறது. அதாவது 128GB ஆப்ஷன் ரூ.35,991 என்கிற தொடக்க விலையில் வருகிறது.
இந்த சலுகையை பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை ரூ.16,000 வரை எக்ஸ்சேன்ஜ் செய்ய முடியும் என்றும் ரூ.6,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறும் விருப்பம் இருக்கும் என்று குரோமா கூறுகிறது. கூடவே ரூ.3,999 வரை டாடா நியூ காயின்களை பெறவும் அவர்கள் தகுதி பெறுவார்கள்.
ஐபோன் மீது மட்டுமின்றி மேக்புக் ஏர் எம்4 (MacBook Air M4) மாடலின் 13-இன்ச் வேரியண்ட் மீதும் மிகப்பெரிய தள்ளுபடி கிடைகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது ரூ.59,320 என்கிற விலையில் கிடைக்கும். இந்த சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் ரூ.88,911 என்கிற மாணவர் மற்றும் ஆசிரியர் விலையில் (student and teacher price) இருந்து தொடங்க வேண்டும்.
பின்னர் ரூ.13,000 வரை பழைய டிவைஸிற்கான எக்ஸ்சேன்ஜ், மேலும் ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும் என்று குரோமா கூறுகிறது. கடைசியாக ரூ.6,591 வரையிலான டாடா நியூ காயின்களையும் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த விற்பனையின் கீழ் ஐபேட் 11த் ஜென் மாடலின் மீதும் ஆபர் உள்ளது. இது ரூ.29,489 க்கு விற்கப்படும்.
இதேபோல ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 (Apple Watch SE 3) மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 (Apple AirPods Pro 3) ஆகிய மாடல்கள் முறையே ரூ.23,388 மற்றும் ரூ.23,310 க்கு வாங்கலாம். கடைசியாக நீங்கள் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் ஏர் (iPhone Air) அல்லது ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மாடலை வாங்கினால், குரோமா நிறுவனம் ஆனது ரூ.12,900 மதிப்புள்ள ஆயில் கேர் பிளஸ் (Apple Care Plus) மற்றும் ஏர்பாட்ஸை (AirPods) இலவசமாக வழங்கும்.
ஐபோன் 17இ எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? இது அடுத்த மாத தொடக்கத்தில் (பிப்ரவரி 2026) அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனமானது அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஐபோன் 17இ மாடலின் சில முக்கிய அம்சங்கள் லீக் ஆகி அதன் அறிமுகம் - மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்த்துகின்றன,
ஐபோன் 17இ மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது புதிய ஏ19 சிப்பை பேக் செய்யலாம். இது சிபியு செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், ஆரம்ப மதிப்பீடுகள் சுமார் 5 முதல் 10 சதவீதம் வரை ஆதாயங்களை குறிக்கின்றன. இது அன்றாட பயன்பாட்டை தீவிரமாக மாற்றாது என்றாலும், குறிப்பாக நீண்டகால சாஃப்ட்வேர் ஆதரவின் அடிப்படையில், நீண்ட காலத்திற்கு போட்டித்தன்மையுடன் இருக்க உதவும்.
ஆப்பிள் ஐபோன் 17இ இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? விலையை பொறுத்தவரை, இந்திய சந்தையில் ஆப்பிள் ஐபோன் 17இ மாடலில் விலை ரூ.64,990 ஆக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16இ மாடல் ஆனது ரூ.59,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டது


Click it and Unblock the Notifications