போடு தகிட தகிட! உச்சக்கட்ட தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவி, வாட்ச், ஏசி, ஃப்ரிட்ஜ்! பாதி காசு போதும்..

|

பலவிதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் என அனைத்தும் க்ரோமா தளத்தில் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதாவது க்ரோமா தளத்தில் Black Friday விற்பனை கோலாகலமாக நடந்து வருகிறது. இதன் அடிப்படையில் தான் அனைத்து பொருட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

தள்ளுபடி விலையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

தள்ளுபடி விலையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் அதீத தள்ளுபடியுடன் க்ரோமா தளத்தில் ஃப்ளாக் ஃப்ரைடே விற்பனை நடந்து வருகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற பலதரப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மீது தவிர்க்க முடியாத தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. தளத்தில் இந்த விற்பனை நவம்பர் 18 முதல் தொடங்கப்பட்டிருக்கிறது. கடைகளில் இந்த விற்பனையானது நவம்பர் 25 முதல் தொடங்கி நவம்பர் 27 வரை நடைபெறுகிறது.

ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1 சலுகை

ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1 சலுகை

க்ரோமா பல்வேறு வகைகளில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகிறது. அதாவது ஆப்பிள் மேக்புக்கை தற்போதும் ரூ.56,990 என வாங்கலாம். இந்த சலுகையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் HDFC வங்கிச் சலுகைகள் உள்ளிட்டவையும் அடக்கம்.

தள்ளுபடி விலையில் மேக்புக் ஏர் எம்1

தள்ளுபடி விலையில் மேக்புக் ஏர் எம்1

ஆப்பிளின் தொடக்க நிலை மேக்புக் ஏர் எம்1 லேப்டாப் ஆனது ரூ.92,900 விலைக்கு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி SSD சேமிப்பகத்துடன் வெளியிடப்பட்டது. இப்போது இந்தியாவில் இது ரூ.80,000 என்ற விலைப் பிரிவில் கிடைக்கிறது. ஆனால் க்ரோமா தளத்தில் தள்ளுபடியுடன் ரூ.56,000 விலையில் வாங்கலாம்.

சிறந்த செயல்திறன் மற்றும் வேகம்

சிறந்த செயல்திறன் மற்றும் வேகம்

ஆப்பிள் நிறுவனத்தின் MacBook Air M1 சாதனமானது M1 செயலியுடன் கூடிய மேக்புக் ஏர் சீரிஸ் வரிசையில் கடந்த 2020 இல் தொடங்கப்பட்டது. இப்போது, இது மிகவும் பழையதாக இருந்தாலும், மடிக்கணினி செயல்திறனைப் பொறுத்தவரை இது சிறந்ததாகும். இது அதன் வரம்பில் உள்ள ஒவ்வொரு மடிக்கணினியையும் விட சிறந்த அனுபவம் மற்றும் தடையற்ற மேக் அனுபவத்தை வழங்குகிறது. M2 செயலியுடன் கூடிய மேக்புக் ஏர் 2022 இல் தொடங்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று.

வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

WWDC 2022 நிகழ்வுக்கு பிறகு குபெர்டினோவை தளமாகக் கொண்ட பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், முந்தைய தலைமுறை மேக்புக் ஏர் மாடலுக்கான விலையை உயர்த்தி அறிவித்தது. அதாவது மேக்புக் ஏர் 2022 அறிமுகம் செய்த பிறகு நிறுவனம் முந்தைய மாடல் மேக்புக் ஏர் 2020 விலையை உயர்த்தியது. காரணம் இந்த மாடல் மேக்புக் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

Samsung Galaxy Watch 4

Samsung Galaxy Watch 4

க்ரோமாவில் கேலக்ஸி வாட்ச் 4 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது ரூ.37,000க்கு விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் தற்போது ரூ.15,000 என்ற விலையில் கிடைக்கிறது. இதில் 1.4 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே ஆகும். கார்னிங் கொரில்லா கிளாஸ் மூலம் இந்த டிஸ்ப்ளே பாதுகாக்கப்படுகிறது. ரூ.37,000க்கு விற்கப்படும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் என்னென்ன அம்சங்கள் எதிர்பார்ப்போமோ அது அனைத்தும் மேம்பட்ட வகையில் இருக்கிறது.

ஸ்மார்ட்டிவிகள் முதல் அனைத்துக்கும் தள்ளுபடி

ஸ்மார்ட்டிவிகள் முதல் அனைத்துக்கும் தள்ளுபடி

இதுமட்டுமில்லை, பிளாக் ஃப்ரைடே விற்பனையில் பல்வேறு பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 12 ஆனது தற்போது ரூ.58,990 என க்ரோமா தளத்தில் வாங்கலாம். ரூ.699 முதல் ப்ளூடூத் ஸ்பீக்கர்களையும், ரூ.899 முதல் போட் ப்ளூடூத் நெக்பேண்ட்களையும் வாங்கலாம்.

Asus, Acer, Dell, HP, Lenovo போன்ற முன்னணி பிராண்டுகளின் லேப்டாப்கள் 40 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் பிரிண்டர்கள், வயர்லெஸ் மவுஸ், டெஸ்க்டாப் மானிட்டர்கள் உள்ளிட்ட அனைத்தையும் 70 சதவீத தள்ளுபடியுடன் வாங்கலாம். குறிப்பாக ஸ்மார்ட்டிவிகள் 65 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

புதிதாக வாங்க சரியான வாய்ப்பு

புதிதாக வாங்க சரியான வாய்ப்பு

முன்னணி பிராண்டுகளின் ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின்களை 40 சதவீதம் தள்ளுபடியுடன் வாங்கலாம். மொத்தமாக அனைத்து பொருட்களும் இதுவரை பார்த்திராத அளவிலான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. நீங்கள் ஏதேனும் புதிய பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும்.

Best Mobiles in India

English summary
Croma Black Friday Sale: Apple Macbook, Samsung SmartWatch, Smart TV, AC Available at Huge Discount price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X