கிலோ கணக்கில் வாங்கலாம் போல: Apple மாடல்களுக்கு இதைவிட தள்ளுபடி வழங்க முடியாது!

|

என்னதான் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்தினாலும் ஐபோன் என்றால் தனி மோகம் இருக்கத் தான் செய்யும். ஆனால் ஐபோனின் விலை மிக அதிகமாக இருக்கும் காரணத்தால் அதை வாங்குவது என்பது பலரின் கனவாகவே இருக்கிறது.

ஐபோன் விலை அதிகமாக இருக்க காரணம் அதன் தனித்துவ அம்சம், வடிவமைப்பு மற்றும் தரம் ஆகியவை ஆகும். ஐபோனை வாங்க முடியாமல் இருப்பதற்கு அதன் விலை தான் காரணம் என்று நீங்கள் சிந்தித்தால். தற்போது இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. காரணம் ஆப்பிள் ஐபோன்களுக்கு நம்ப முடியாத அளவு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ரோமா எவ்ரிதிங் ஆப்பிள் சேல்

க்ரோமா எவ்ரிதிங் ஆப்பிள் சேல்

பிரபல ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒன்றான க்ரோமா, எவ்ரிதிங் ஆப்பிள் சேல் அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது இந்தியாவில் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி மாத இறுதி வரை நேரலையில் இருக்கும்.

ஆப்பிள் சாதனங்களுக்கு தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் தளங்கள் தள்ளுபடிகளை அறிவித்து வந்தாலும், க்ரோமாவின் இந்த தள்ளுபடி என்பது குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது.

அனைத்துக்கும் அதீத தள்ளுபடி

அனைத்துக்கும் அதீத தள்ளுபடி

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், லேப்டாப்கள் மற்றும் அக்ஸசரிஸ்களுக்கு என அனைத்தும் க்ரோமா இணையதளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதிகபட்சமாக 67 சதவீத தள்ளுபடியுடன் சாதனங்களை க்ரோமா இணையதளத்தில் வாங்கலாம்.

நீங்கள் வாங்க விரும்பும் ஸ்மார்ட்போன்கள் அல்லது பிற சாதனங்களின் விலையை பிற ஆன்லைன் தளங்களின் விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். க்ரோமா எவ்ரிதிங் ஆப்பிள் விற்பனை ஜூலை 2022 இல் ஐபோன் மாடல்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகளை விரிவாக பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 13

ஆப்பிள் ஐபோன் 13

ஆப்பிள் ஐபோன் 13 இன் 128ஜிபி வேரியண்ட் மாடல் க்ரோமா இணையதளத்தில் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.79,900 ஆக இருந்த நிலையில் தற்போது க்ரோமா தளத்தில் ரூ.66,990 என வாங்கலாம். கூடுதலாக வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

அதேபோல் ஐபோன் 13 மாடல் ரூ.89,900 ஆக இருந்த நிலையில் தற்போது க்ரோமா தளத்தில் ரூ.75,990 என கிடைக்கிறது. இந்த ஐபோன் மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.

சமீபத்திய ஐபோன் மாடல்

சமீபத்திய ஐபோன் மாடல்

ஆப்பிள் ஐபோன் 13 ஆனது 6.1 இன்ச் அளவுடன் டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. டூயல் 12 எம்பி கேமரா மற்றும் ஒற்றை 12 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஐபோன் 13 ஆனது ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 3227 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 12

ஆப்பிள் ஐபோன் 12

ஆப்பிள் ஐபோன் 12 இன் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.65,900 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது க்ரோமா தளத்தில் வங்கி சலுகை உட்பட தள்ளுபடியுடன் ரூ.53,990 என வாங்கலாம்.

128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.70,900 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.58,990 என கிடைக்கிறது. இந்த மாடல் அக்டோபர் 2020 இல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.

ஏ14 பயோனிக் சிப் ஆதரவு

ஆப்பிள் ஐபோன் 12 ஆனது 6.1 இன்ச் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 12 ஆனது ஏ14 பயோனிக் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

12 எம்பி அகல கோண லென்ஸ், 12 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் என டூயல் பின்புற கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் 12 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 11

ஆப்பிள் ஐபோன் 11

முந்தைய இரண்டு மாடல்களுடன் ஒப்பிடுகையில் ஐபோன் 11 என்பது பழைய மாடல் ஆக இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 11 இன் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரிண்ட் ரூ.49,990 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.42,990 என கிடைக்கிறது.

கூடுதலாக வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டானது ரூ.54,900 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.49,990 என கிடைக்கிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ஐிபிஎஸ் 41mm அளவு வேரியண்ட் ஆனது ரூ.41,900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.37,990 என கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் செப்டம்பர் 2021 இல் அறிமுகமானது. இது முந்தைய தலைமுறை சாதனத்தை விட 70% வரை அதிக பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் எஸ்இ

ஆப்பிள் வாட்ச் எஸ்இ

ஆப்பிள் வாட்ச் எஸ்இ ஜிபிஎஸ் 40 மிமீ வேரியண்ட் ஆனது ரூ.29,900 ஆக இருந்த நிலையில் தற்போது க்ரோமா தளத்தில் ரூ.26,990 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாட்ச் மாடல் செப்டம்பர் 2020 இல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் S5 SiP மற்றும் W3 வயர்லெஸ் சிப் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

Apple Macbook Pro (2021)

Apple Macbook Pro (2021)

Apple Macbook Pro (2021) 14 இன்ச் மாடல் ரூ.1,94,900 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மேக்புக் ரூ.1,75,410 என க்ரோமா இணையதளத்தில் கிடைக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாட்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகமான இந்த மாடல் p3 பிரைட்னஸ், எச்டிஆர் ஆதரவு மற்றும் எக்ஸ்டிஆர் வெளியீட்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Croma announced Everything Apple Sale Huge Discount on Iphone 13, iphone 12, Apple Watch Series 7

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X