ரொனால்டோ, மெஸ்ஸி.. யாரை பிடிக்கும்? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறிய சுவாரஸ்ய பதில்..
கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொ தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை (Google CEO Sundar Pichai) தனக்குப் பிடித்த கால்பந்து வீரரை வெளிப்படுத்தினார்.
கால்பந்து உலகின் இருபெரும் ஜாம்பவான்கள் தான் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி. குறிப்பாக கடந்த பல ஆண்டுகாலமாகக் கால்பந்து ஆட்டத்தில் இருவரும் பல சாதனைகளைச் செய்து வருகின்றனர். இருவருக்கும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியால் பலர் இந்த கால்பந்து ஆட்டத்தைப் பின்தொடர்ந்து வருகின்றனர். அந்தளவிற்கு கால்பந்து ஆட்டத்தை உலகளவில் எடுத்து சென்றவர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி.

இந்நிலையில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தனக்கு எந்த கால்பந்து வீரர் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அதாவது சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சை எனக்குப் பிடித்தது மெஸ்ஸி தான் என உறுதியாகக் கூறியுள்ளார். ஆனாலும் ரொனால்டோவின் திறமையும், தன்னலம் இல்லாத உழைப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.
அதேசமயம் மெஸ்ஸி பந்தைப் பிடிக்கும் தருணத்தில் ஏற்படும் அந்த மாயை சொல்லவே முடியாது. அதைப் பார்த்தால் தான் உணர முடியும். அதுவும் கடந்த வாரம் மெஸ்ஸி விளையாடும் ஒரு போட்டியை நேரில் சென்று பார்த்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்தார். குறிப்பாக அவர் வயதானபோதும் பந்துடன் அவர் அவர் கையாளும் மாயை வியப்பூட்டுவதாக இருந்தது எனச் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
சுந்தர் பிச்சை தனது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக எங்கள் வீட்டில் எல் கிளாசிகோ (பார்சலோனா-ரியல் மாட்ரிட் போட்டி) பார்ப்பது ஒரு தனி அனுபவம் என்று கூறிய சுந்தர் பிச்சை, தனது குடும்பத்தில் கூட இந்த விவாதம் அதிகம் தொடர்கிறது என சிரித்தார். அதேபோல் கூகுளை வழிநடத்துவது மாட்ரிட் கோச் ஆக இருப்பதைப்போல் தான் என்றும், "சில சீசன்கள் மோசமாக இருக்கலாம் என உண்மையோடு கூறியிருந்தார்.
மேலும் சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோவில் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் கூகுள் சிஇஒ கூகுள் சுந்தர் பிச்சை கலந்துகொண்டு உரையாற்றினார். குறிப்பாக கூகுள் தொழில்நுட்ப நிறுவனத்தின் அடுத்த தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஒரு கருத்து தெரிவித்தார். அதாவது அடுத்த தலைமை நிர்வாக அதிக கூகுள் நிறுவனத்தின் செல்வாக்கால் வரும் சக்தி மற்றும் பொறுப்பை உண்மையிலேயே புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும்.
அதேபோல் கூகுளின் கருவிகள், அதன் புதிய அப்டேட்கள் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்யும் தலைவராக இருக்க வேண்டும். குறிப்பாக கூகுள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வடிவமைப்பதில் AI பங்கு அளப்பரியது. மேலும் கூகுள் நிறுவனத்தில் அடுத்த தலைமை அதிகாரியாக யார் பொறுப்பேற்கிறார்களோ, அவர்களுக்கு ஆதரவளிக்க ஒரு ஏஐ துணை இருக்கும்.

ஏஐ ஆனது மனித வேலைகளை எடுத்துக் கொள்ளும் என்பதில் எனக்கும் நம்பிக்கை இல்லை. வேலையின் ஒவ்வொரு பகுதிகளையும் ஏஐ கவனித்துக்கொள்வதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் என்று நம்புகிறேன். மேலும் கூகுள் நிறுவனம் 2026 வரை இன்னும் அதிகமான இன்ஜினீயர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் வறட்சியின் போது எங்களுக்குக் குழாய் தண்ணீர் கிடைப்பது மிகவும் சிரமம். அதனால் நாங்கள் லாரிகளில் தண்ணீரைப் பெறமுடிந்தது. ஒரு வீட்டிற்கு எட்டு வாளிகள் கிடைக்கும். நானும் என் சகோதரனும் சில சமயங்களில் என் அம்மாவும், வரிசையில் காத்திருந்து அதைப் பெறுவோம். இதுபோன்ற அனுபவங்கள்தான் தொழில்நுட்பம் வாழ்க்கையை மேம்படுத்த உருவாக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையை விதைத்து என்று பேசினார் சுந்தர் பிச்சை. ஆனால் இந்த உரையின்போது சுந்தர் பிச்சை எந்த பெயரையும் குறிப்பிடவில்லை. பதவி விலகப் போவதாகவோ கூறவில்லை.


Click it and Unblock the Notifications