திகில் : சமூக வலைதளத்தில் 'தீயாய்' பரவும் சூனியக்காரி போட்டோ..!
அமெரிக்காவின் கஸ்டோனியா நகரின் குடியிருப்பு பகுதி ஒன்றில், அடர்ந்த காடுகளுக்கு அருகே கருப்பு போர்வை போல் உடை அணிந்த ஒரு வயதான பெண் உருவம் நிற்பதை கண்ட மாணவர் ஒருவர் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்..!

இந்த புகைப்படத்தை போஸ்ட் செய்த மாணவர் "இந்த உருவம் மாமிச துண்டு ஒன்றை அப்படியே கீழே போட்டு விட்டு சென்றது, அதை கண்டதில் இருந்து எனக்கு தூக்கம் வரவில்லை..!" என்று குறிப்பிட்டுள்ளார்..! அவ்வளவு தான் அந்த புகைப்படம் சமூகவலை தளங்களில் தீயாய் பரவியது.
பேய்களை உணர முடிவது எப்படி..!? - அறிவியலாளர்கள் விளக்கம்..!

ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் உருவம் ஆவியோ பேயோ அல்ல, ஒரு சூனியக்கார கிழவி என்ற செய்தி இன்டர்நெட் முழுதும் பரவி வந்ததை தொடர்ந்து, இது வெறும் புரளி என்ற கோணத்தில் இந்த புகைப்படம் சார்ந்த விசாரணையை தொடங்கி உள்ளது அந்நகர காவல் துறை.
கார் மோதி பேய் மரணம்..!

இது சூனியக்கார கிழவியாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, யார் வேண்டுமானாலும் கூட இருக்கலாம், சொல்ல போனால் விளையாட்டாக கூட இதை யாரேனும் செய்திருக்கலாம் என்று காவல்துறை கருத்து தெரிவித்துள்ளது..!


Click it and Unblock the Notifications