படைத்தவர்களின் 'கடைசி மூச்சை' பறித்த படைப்புகள்..!

ஒரு நல்ல கண்டுப்பிடிப்பு ஆனது, அதை கண்டுப்பிடித்தவரின் வாழ்வையே மாற்றும் வல்லமை பெற்றிருக்கும் என்பதை மட்டும் தான் நாம் அறிவோம். ஆனால் ஒரு கண்டுப்பிடிப்பானது, கண்டுப்பிடித்தவரின் கடைசி மூச்சை பறித்து சென்ற வரலாறு நம்மில் பலருக்கு தெரியாது !

கண்டுப்பிடிப்பாளர்கள் வெறும் 'படைப்பாளிகள்' மட்டுமில்லை, வெறித்தனமான ஆர்வம் கொண்ட தீராத கலைப்பசி கொண்டவர்கள் என்பதை உணர்த்தும் 09 படைப்பாளிகளையும், அவர்களை கொன்ற அவர்களின் சொந்த படைப்புகளையும் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

01. ஃப்ளையிங் பாராசூட் சுட் :

01. ஃப்ளையிங் பாராசூட் சுட் :

ப்ரான்ஸ் ரேசேல்ட் (Franz Reichelt) என்பவர் ஒரு தொழில் முறை தையல்காரர் ஆவார்.

பறக்கும் பாராசூட் :

பறக்கும் பாராசூட் :

தையல் தொழில் செய்த நேரம் போக மீதமுள்ள நேரத்தில் விமான ஓட்டிகளுக்கான பறக்கும் பாராசூட்டை தயாரிப்பதில் மும்மரமாக இருந்தார்.

முதல் பரிசோதனை :

முதல் பரிசோதனை :

அவர் நினைத்தபடி பாராசூட் தயாரிக்கப்பட்டு அது டம்மீக்கள் கொண்டு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டப்பின் தன்னை தானே வைத்து முதல் பரிசோதனை செய்ய முடிவு செய்தார்.

187 அடி :

187 அடி :

அந்த பரிசோதனையின் போது ஈஃபில் டவரில் இருந்து சுமார் 187 அடி உயரத்தில் இருந்து குதித்த போது பாராசூட் இயங்காமல் தரையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

02. தி ஜெட்பாட் :

02. தி ஜெட்பாட் :

ஜெட்பாட் (Jetpod) என்பது ஒரு சிறிய வகை விமானம் ஆகும். இது விண்ணில் எழும்ப 125 மீட்டர்களும், தரை இறங்க 300 மீட்டர் இடமும் போதும் என்ற அளவில் வடிவமைக்கப்பட்டது.

மைக்கில் தாக்ரே :

மைக்கில் தாக்ரே :

இதை உருவாக்கியவர் மைக்கில் தாக்ரே (Michael Dacre) என்பவர் ஆவார்.

மூன்று வகை :

மூன்று வகை :

இவ்வகை ஜெட்பாட்டை மருத்துவ உதவி, ராணுவ அவசர கால நடவடிக்கைகள் மற்றும் டாக்சி என மூன்று வகையாக பிரித்து சேவையில் ஈடுப்படுத்த மைக்கில் தாக்ரே திட்டமிட்டுருந்தார்.

தோல்வி :

தோல்வி :

அப்படியாக டாக்சி வகை ஜெட்பாட்டின் சோதனை ஓட்டத்தின் போது 3 முறை வான்வெளியில் தோல்விகள் ஏற்பட்டு, 4-வது தோல்வியானது ஜெட்பாட் தரையில் மோதி வெடித்து சிதறியது.

03. டைட்டானிக் :

03. டைட்டானிக் :

கப்பல் கட்டிட கலைஞர் ஆன, தாமஸ் ஆன்ட்ரூஸ் (Thomas Andrews) தான் ஆர்எம்எஸ் டைட்டானிக்கை டிசைன் செய்தவர் ஆவார்.

வொர்ல்ட் ப்ரெஸ் :

வொர்ல்ட் ப்ரெஸ் :

ஆர்எம்எஸ் டைட்டானிக்கை மூழ்கடிக்கவே முடியாத டிசைன் என்று வொர்ல்ட் ப்ரெஸ் (World Press) நம்பியது.

1912 :

1912 :

இருப்பினும் 1912-ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று பனிபாறையில் மோதி கப்பல் கடலுக்குள் மூழ்கிய போது உடன் தாமஸ் ஆன்ட்ரூஸும் மூழ்கி மரணித்தார்.

04. தி தியேரி ஆஃப் ரேடியோ ஆக்டிவிட்டி :

04. தி தியேரி ஆஃப் ரேடியோ ஆக்டிவிட்டி :

மேரி க்யூரி - ரேடியம், பொலோனியம் போன்ற ரேடியோ செயலில் கூறுகள் ஆகியவைகளை கண்டுப்பிடிக்க துணை புரிந்தமைக்காக இரண்டு நோபல் பரிசுகளை வாங்கியவர் ஆவார்.

கதிர்வீச்சு வெளிப்பாடு :

கதிர்வீச்சு வெளிப்பாடு :

மேரி க்யூரி, நீண்ட கதிர்வீச்சு வெளிப்பாடு மூலம் உண்டான குறைப்பிறப்பு இரத்த சோகை (aplastic anemia) காரணமாக உயிர் இழந்தார்.

05. ஃப்ளையிங் கார் :

05. ஃப்ளையிங் கார் :

பறக்கும் காரை உருவாக்கிய ஹென்றி ஸ்மொலிஞ்ஸ்கி (Henry Smolinski) சோதனை ஒட்டத்திற்கு முன்பு காரின் இறக்கை பகுதி பிரிக்கப்பட்டபோது காயமடைந்து உயிரிழந்தார்.

06. எடர்னல் யூத் :

06. எடர்னல் யூத் :

அழியா இளமை சார்ந்த ஆராய்ச்சியில் தனக்கு தானே இரத்த மாற்று நிகழ்த்தி மரணம் அடைந்தார் ரஷ்ய மருத்துவர் ஆன அலெக்ஸ்சாண்டர் பாக்டெநாவ் (Alexander Bogdanov).

07.  தி ரோட்டரி பிரிண்ட்டிங் ப்ரெஸ் :

07. தி ரோட்டரி பிரிண்ட்டிங் ப்ரெஸ் :

உலகம் முழுக்க பெருமளவு வெற்றியை பெற்ற தி ரோட்டரி பிரிண்ட்டிங் ப்ரெஸ் இயந்திரத்தை அமெரிக்காவில் நிறுவிய போது கால் நசுக்கப்பட்டு பின் உடல்நிலை மோசமாகி உயிர் இழந்தார் அதை உருவாக்கிய வில்லியம் புல்லக் (William Bullock).

08. க்லோஸ்டு சர்க்கூட் ஆக்ஸிஜன் ரீப்ரீத்தர் :

08. க்லோஸ்டு சர்க்கூட் ஆக்ஸிஜன் ரீப்ரீத்தர் :

1876-ஆம் ஆண்டில் வெளிக்கிடும் கார்பன் டை ஆக்ஸ்சைடை மறுபடியும் ஆக்ஸிஜனாக மறுசுழற்ச்சி செய்யும் க்லோஸ்டு சர்க்கூட் ஆக்ஸிஜன் ரீப்ரீத்தரை கண்டுப்பிடித்தார் ஹென்றி ஃப்லுஸ் (Henry Fleuss).

மரணம் :

மரணம் :

தனது கண்டுப்பிடிப்பை 35 அடி ஆழ நீருக்குள் பரிசோதனை செய்யும் போது மிகத்தூய்மையான ஆக்ஸிஜனை சுவாசித்ததால் மரணம் அடைந்தார்.

நிலை :

நிலை :

மனித உடல் மிகவும் அழுத்தமான நிலையில், மிகத்தூய்மையான ஆக்ஸிஜனை சுவாசித்தால் அது விஷமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

09. தி சீக்வே :

09. தி சீக்வே :

2011-ஆம் ஆண்டு சீக்வே அறிமுகமானபோது உலகம் இதையொரு புதுவிதமான போக்குவரத்து முறையாக பார்த்தது. ஆனால் பின் நாட்களில் இது மக்களை பெருமளவு கவரவில்லை.

சீக்வே ப்ரொடக்ஷன் கம்பெனி :

சீக்வே ப்ரொடக்ஷன் கம்பெனி :

இதை உருவாக்கியது சீக்வே ப்ரொடக்ஷன் கம்பெனியின் ஜிமி ஹேசேல்டென் (Jimi Heselden) ஆவார்.

ஜிமி ஹேசேல்டென் :

ஜிமி ஹேசேல்டென் :

சோதனையின் போது குன்று ஒன்றின் மேல் சீக்வே கொண்டு பயணிக்கும் போது தவறி விழுந்து ஜிமி ஹேசேல்டென் உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தடை :

தடை :

பிரிட்டன் ரோடுகள் மற்றும் நடைபாதைகளில் இந்த சீக்வே கொண்டு பயணிக்க தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

த..." data-gal-src="tamil.gizbot.com/img/600x100/img/2016/01/03-1451813273-formore.jpg">
மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தகவல்களை பாதுகாப்பாக அழிப்பது எப்படி.??தகவல்களை பாதுகாப்பாக அழிப்பது எப்படி.??

வெளி உலகத்திற்கு தெரியாத, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ரகசியங்கள்..!வெளி உலகத்திற்கு தெரியாத, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ரகசியங்கள்..!

இமயமலையில் இதுநாள் வரை 'மறைந்து கிடந்த' பனியாறு..!
இமயமலையில் இதுநாள் வரை 'மறைந்து கிடந்த' பனியாறு..!

ஸ்மார்ட்போனில் ஸ்பீக்கர் தொல்லை : சரி செய்வது எப்படி??ஸ்மார்ட்போனில் ஸ்பீக்கர் தொல்லை : சரி செய்வது எப்படி??

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Creatives Who Died from Their Own Inventions. Read more about this inTamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X