சொந்த புகைப்படமே இனி ஸ்டிக்கர் தான்: வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் உருவாக்குவது எப்படி?- எளிய வழிமுறைகள்!
சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப் தளம். வாட்ஸ்அப் பல்வேறு தேவைகளுக்கும் பிரதானமாக இருந்து வருகிறது. வாடஸ்அப் தளத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதில் பிரதானமாக பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்று வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சம். வாட்ஸ்அப் தளத்தில் ஸ்டிக்கர் அம்சம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. ஒரே ஸ்டிக்கரில் தங்கள் வெளிப்பாடை புரிய வைக்கும் ஸ்டிக்கர் அம்சத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சம்
வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சம் பெரும் பிரபலமடைந்ததை அடுத்து பல மூன்றாம் தரப்பு செயலிகளும் பல்வேறு வகையில் அதாவது சினிமா வசனங்கள், பிற வசனங்கள் புகைப்படங்கள் மூலம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சத்தை வெளியிட்டன. இந்த அம்சம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்ததோடு பெரியளவு வரவேற்பு பெற்றது. ஆனால் தற்போது மூன்றாம் தரப்பு செயலி உதவி இல்லாமல் வாட்ஸ்அப் தளத்திலேயே புகைப்படங்கள் மூலம் ஸ்டிக்கர் உருவாக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள அம்சம்
தற்போது வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள அம்சமானது வாட்ஸ்அப் வெப் தளத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த அம்சம் பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாட்ஸ்அப் வெப் அணுகலுக்கு சென்று சாட் விண்டோஸ் விருப்பத்துக்குள் செல்ல வேண்டும். இதற்குள் சென்ற உடன் அட்டாச்மெண்ட் என்ற ஐகானை கிளிக் செய்து அதில் காட்டப்படும் ஸ்டிக்கர் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதன்பின் காட்டப்படும் ஃபைல் எக்ஸ்ப்ளோரர் தளத்துக்குள் சென்று தங்களுக்கு தங்களுக்கு பிடித்தமான போட்டோவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

புகைப்படம் ஸ்டிக்கர் அம்சம்
இதன்பின் இந்த புகைப்படம் ஸ்டிக்கர் வகைகளுக்குள் செல்லும். இந்த ஸ்டிக்கரை ரைட் கிளிக் செய்தபின் பிரஸ் செய்ய வேண்டும் இதன்பின் இதை சேமித்துக் கொள்ளலாம். இந்த அம்சத்தின் மூலம் ஸ்டிக்கர் பயன்பாடாக மாற்றாலம். இருப்பினும் இந்த அம்சத்தில் பேக் கிரவுண்ட் மாற்றம் செய்யப்படும் அம்சம் கொண்டுவரவில்லை என்பதால் முன்னதாகவே பேக் கிரவுண்ட் மாற்றம் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்தினால் நீங்கள் பயன்படுத்தும் புகைப்படம் ஸ்டிக்கருக்கு இணையாக இருக்கும்.

வாட்ஸ்அப் புதிய அப்டேட்
வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறது. வாட்ஸ்அப் புதிய போல் (POLL) அம்சத்தை கொண்டுவர இருக்கிறது. இந்த அம்சம் சோதனையில் இருக்கிறது. WABetaInfo தளத்தின் தகவலும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த அம்சமானது ஐஓஎஸ் பயனர்களுக்கு முதற்கட்டாக அறிமுகப்டுத்தப்பட இருக்கிறது. இந்த அம்சமானது v2.22.6.70 என்ற பீட்டா பதிப்பு எண் உடன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

வாட்ஸ்அப் போல் (POLL) அம்சம்
பேஸ்புக் தளத்தில் முன்னதாக போல் (POLL) அம்சம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து வாட்ஸ்அப்பில் போல் (POLL) அம்சம் குழுக்கள் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த போல் (POLL) அம்சத்தை இயக்கிய உடன் குழு உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த அம்சமானது பீட்டா சோதனையில் இருக்கிறது. விரைவில் இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்யும் போது இடைநிறுத்தம்
வாட்ஸ்அப்-ல் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்யும் போது இனி இடைநிறுத்தம் செய்து மீண்டும் தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வாய்ஸ் நோட்களை பதிவு செய்யும் போது அந்த ஆடியோவை இடைநிறுத்தம் செய்து மீண்டும் தொடங்குவதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிடுகிறது. இந்த அம்சமானது குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறுது. வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்களை உருவாக்கி வருகிறது. மெசேஜ் ரெக்கார்டிங் செய்யும் போது பயனர்கள் ஆடியோவை இடைநிறுத்தி மீண்டும் தொடங்கும் வகையிலான அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது. வாட்ஸ்அப் பீட்டாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது.
File Images


Click it and Unblock the Notifications